மேலும் அறிய

கனமழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

கனமழை தொடரும் என்பதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது

தமிழகத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று நேற்று உருவானது. இது தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டி நிலவி வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று வலுவடைந்தது. இதனால் தமிழகத்தில் வருகிற 14-ந் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை உள்ளிட்ட வட தமிழக கடலோர பகுதிகளில் இன்று அதிகனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றும் அது மேலும் வலு குறைந்து கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் தமிழகம், புதுச்சேரி நோக்கி நகர்ந்து வருகிறது. மேலும், தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் நேற்று அதிகாலை 4 மணி முதல் கன மழை பெய்து வருவதால் திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக  திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். மேலும் கன மழைக்கு வாய்ப்புள்ளதால் திருச்சி  மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை கடந்த 10 மணி நேரத்தில் அதிகபட்சமாக பொன்மலை பகுதியில்  40.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக லால்குடி பகுதியில் 15 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக திருச்சி மாவட்டம் லால்குடி, மனப்பாறை, மருங்காபுரி, முசிறி, மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மற்றும் மிதமான மழை பெய்து வந்தது. இருப்பினும் திருச்சி மாநகர் பகுதியில் மழை பெய்யவில்லை. நேற்று முந்தினம் காலை முதல் திருச்சி மாநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் திருச்சி மாநகர பகுதிகளான சத்திரம் பேருந்துநிலையம், மத்திய பேருந்து நிலையம், பாலக்கரை, உறையூர், பொன்மலை, அரியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாணவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

மேலும் கனமழை காரணாமாக தமிழகத்தில் 20 மாவட்டங்களில் நாளை(12-11-2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், மயிலாடுதுறை, நீலகிரி, திருவாரூர், தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, சேலம் கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Anbumani Vs Ramadoss: நானே வரேன்..! ஐயாவிற்கு டோஸ், அன்பு மகனுக்கு பாசக்கரம் - களத்தில் சரஸ்வதி ராமதாஸ்
Anbumani Vs Ramadoss: நானே வரேன்..! ஐயாவிற்கு டோஸ், அன்பு மகனுக்கு பாசக்கரம் - களத்தில் சரஸ்வதி ராமதாஸ்
TNPSC Group 2: 645 இடங்களுக்கு குரூப் 2, 2ஏ தேர்வு- வயது, தகுதி, ஊதியம், தேர்வு முறை, விண்ணப்பிப்பது… விவரம் உள்ளே!
TNPSC Group 2: 645 இடங்களுக்கு குரூப் 2, 2ஏ தேர்வு- வயது, தகுதி, ஊதியம், தேர்வு முறை, விண்ணப்பிப்பது… விவரம் உள்ளே!
TNPSC Group 2, 2A: செப்.28-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு; 645 இடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- விவரம்!
TNPSC Group 2, 2A: செப்.28-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு; 645 இடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- விவரம்!
Stalin Condemns: “தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை மாநில உரிமைகள் பறிப்பு“; உமர் அப்துல்லா விவகாரம்-ஸ்டாலின் கண்டனம்
“தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை மாநில உரிமைகள் பறிப்பு“; உமர் அப்துல்லா விவகாரம்-ஸ்டாலின் கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbumani Vs Ramadoss | பாஜக கூட்டணியில் அன்புமணி.. ரூட்டை மாற்றும் ராமதாஸ் பக்கா ஸ்கெட்ச்!
Nainar Nagendran | ”சோறு கூட போடுறோம் ஓட்டு போட மாட்டோம்” அதிர்ச்சியில் உறைந்த  நயினார் நாகேந்திரன்
மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbumani Vs Ramadoss: நானே வரேன்..! ஐயாவிற்கு டோஸ், அன்பு மகனுக்கு பாசக்கரம் - களத்தில் சரஸ்வதி ராமதாஸ்
Anbumani Vs Ramadoss: நானே வரேன்..! ஐயாவிற்கு டோஸ், அன்பு மகனுக்கு பாசக்கரம் - களத்தில் சரஸ்வதி ராமதாஸ்
TNPSC Group 2: 645 இடங்களுக்கு குரூப் 2, 2ஏ தேர்வு- வயது, தகுதி, ஊதியம், தேர்வு முறை, விண்ணப்பிப்பது… விவரம் உள்ளே!
TNPSC Group 2: 645 இடங்களுக்கு குரூப் 2, 2ஏ தேர்வு- வயது, தகுதி, ஊதியம், தேர்வு முறை, விண்ணப்பிப்பது… விவரம் உள்ளே!
TNPSC Group 2, 2A: செப்.28-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு; 645 இடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- விவரம்!
TNPSC Group 2, 2A: செப்.28-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு; 645 இடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- விவரம்!
Stalin Condemns: “தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை மாநில உரிமைகள் பறிப்பு“; உமர் அப்துல்லா விவகாரம்-ஸ்டாலின் கண்டனம்
“தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை மாநில உரிமைகள் பறிப்பு“; உமர் அப்துல்லா விவகாரம்-ஸ்டாலின் கண்டனம்
Tesla Showroom: முதல் காருக்கு யானை விலையை நிர்ணயித்த டெஸ்லா - மும்பையில் ஷோரூம் திறந்தாச்சு - மாடல் Y எப்படி?
Tesla Showroom: முதல் காருக்கு யானை விலையை நிர்ணயித்த டெஸ்லா - மும்பையில் ஷோரூம் திறந்தாச்சு - மாடல் Y எப்படி?
Top 10 News Headlines: உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம், சரோஜா தேவி உடல் இன்று நல்லடக்கம், ரஷ்யாவுக்கு ட்ரம்ப் கெடு - 11 மணி செய்திகள்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம், சரோஜா தேவி உடல் இன்று நல்லடக்கம், ரஷ்யாவுக்கு ட்ரம்ப் கெடு - 11 மணி செய்திகள்
Axiom 4: பூமிக்கு திரும்பும் சுபான்ஷு, ஆக்சியம் 4 குழு தரையிறங்குவது எங்கே? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி?
Axiom 4: பூமிக்கு திரும்பும் சுபான்ஷு, ஆக்சியம் 4 குழு தரையிறங்குவது எங்கே? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி?
Tamilnadu Roundup: ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால், மத்திய அரசுக்கு முதல்வர் கண்டனம், அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை - 10 மணி செய்திகள்
ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால், மத்திய அரசுக்கு முதல்வர் கண்டனம், அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை - 10 மணி செய்திகள்
Embed widget