மேலும் அறிய
Advertisement
திருச்சியில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் - 7 பேர் கைது
திருச்சியில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த லாட்டரி வியாபாரி உட்பட 7 பேர் கைது செய்யபட்டனர்.
தமிழகத்தில், லாட்டரி சீட்டுக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை, ஈரோடு, திருச்சி, கன்னியாகுமரி மாவட்டங்களில், வெளி மாநில லாட்டரி சீட்டுகள், போலி லாட்டரிகள் அதிகளவில் விற்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில், லாட்டரி சீட்டுக்கள் விற்பனை மற்றும் பதுக்கல் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், சென்னை, திருச்சி மற்றும் எல்லையோர மாவட்டங்களான, கோவை, ஈரோடு, கன்னியாகுமரி மாவட்டங்களில், வெளிமாநில லாட்டரி சீட்டுக்கள் மற்றும் அவற்றின் பெயரில் போலி லாட்டரி சீட்டுக்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அண்டை மாநிலமான, கேரளாவில், அம்மாநில அரசே, கோடிக்கணக்கில் பணம், கிலோ கணக்கில் தங்கம் வழங்குவதாக கூறி, லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்கிறது. இவற்றிற்கு, அங்குள்ள பிரபலங்கள், விளம்பர தூதர்களாக செயல்பட்டு வருகின்றனர். கேரளாவில் விற்கப்படும் லாட்டரி சீட்டுக்கள், தமிழகத்தின் எல்லை மாவட்டங்களான, கன்னியாகுமரி, கோவை மற்றும் நெல்லையில் ஊடுருவியுள்ளன. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில், தமிழக பகுதிக்குள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தவிர, பூடான் மற்றும் வட கிழக்கு மாநில லாட்டரிகளும், ரயில்கள் மற்றும் பஸ்கள் மூலமாக, ஆந்திரா, கர்நாடகா வழியாக, தமிழகத்திற்கு கடத்தி கொண்டு வரப்பட்டு, பதுக்கி விற்கப்படுகின்றன. குறிப்பாக, அங்கு குலுக்கல் முடிந்து முடிவு அறிவிக்கப்பட்ட லாட்டரி சீட்டுக்கள், சேலம், திருச்சியில் விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது. சில பகுதிகளில், ஒரு நம்பர் லாட்டரி, ஆன்லைன் லாட்டரியும் கொடி கட்டி பறக்கின்றது. இவற்றை முற்றிலும் தடுக்க தமிழக காவல்துறையினர் அதிரடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
.இந்நிலையில் திருச்சி பாலக்கரை கெம்ஸ் டவுன் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக பாலக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையிலான போலீசார், கெம்ஸ்டவுன் பகுதிக்கு சென்று அங்கு உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்பொழுது செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்த குணசேகரன் (வயது 52 )என்பவர் வெளிமாநில லாட்டரி சீட்டு வாங்கி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையிலான போலீசார் குணசேகரனை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் குணசேகரனுக்கு ஆதரவாக அந்தப் பகுதியை சேர்ந்த பிரபு (23), யாமின் ராஜ் ( 24), வில்லியம்ஸ் (26), அருண் (19), அபு ரியாஸ் (23), ஜின்னா (45) ஆகிய 7 பேர் சேர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபாலை பணி செய்ய விடாமல் தடுத்து கத்தியைக் காட்டி மிரட்டி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து குணசேகரன், பிரபு, யாமீன் ராஜ் வில்லியம்ஸ், ஜின்னா, அபு ரியாஸ், அருண் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 30 லாட்டரி சீட்டு நம்பர் எழுதப்பட்ட பேப்பரையும், ரூ.1 லட்சத்து 61 ஆயிரம் பணத்தையும், இரண்டு கத்திகள் மற்றும் 12செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் பாலக்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion