திருச்சியில் 1,26,400 சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டம்
’’திருச்சி மாவட்டத்தில் இதுவரை 19 லட்சத்து 02 ஆயிரத்து 361 நபர்களுக்கு அதாவது 88 சதவீதம் பேர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது’’
திருச்சி மாவட்டம் புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலை பள்ளியில் 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கான தடுப்பூசி முகாமினை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கே.என்.நேரு, மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவராசு தொடங்கி வைத்தனர். திருச்சி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் சிறப்பு மெகா தடுப்பூசி முகாங்கள் நடத்தப்பட்டு தீவிரமாக மக்களுக்கு தடுப்பூசி செலுதபட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை 19 லட்சத்து 02 ஆயிரத்து 361 நபர்களுக்கு அதாவது 88 சதவீதம் பேர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கும் இன்று முதல் தமிழகம் முழுவதும் தடுப்பூசி பணி தொடங்கபட்டுள்ளது, இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு அதாவது, 2007அல்லது அதற்கு முன் பிறந்தவர்கள் என மொத்தம் 1,26,400 சிறார்களுக்கு இன்று முதல் கோவாக்சின் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகையால் சிறார்கள் அனைவரும் இந்த தடுப்பூசி முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவிவருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் சில மாவட்டங்களில் தினதோறும் தொற்றின் எண்ணிக்கை சற்று அகரித்து வருகிறது. ஆகையால் மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசியை கட்டாயமாக செலுத்திக்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு சுகாதரதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஓமிகிரான் தொற்றும் பரவும் சூழ்நிலையில் மக்கள் அரசு கூறிய விதிமுறைகளை முறையாக கடை பிடிக்க வேண்டும். பொதுமக்கள் தயக்கம் காட்டாமல் இரண்டுதவணை தடுப்பூசிகளையும் செலுத்திக்கொள்ள வேண்டும், குறிப்பாக இன்று முதல் 15 வயது முதல் 18 வயது சிறார்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கபட்டுள்ளது. ஆகையால் உயர்நிலை பள்ளி, மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என அனவரும் மாவட்ட மாவட்ட நிர்வாகம் சார்பாக நடத்தபடும் முகாமிற்கு சென்று தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என சுகாதாரதுறை அதிகாரிகள் கெட்டுக்கொண்டுள்ள்னர். மேலும் சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்த அரசு தற்போது அனுமதித்துள்ளது என்றனர்.
திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரபடுத்தியுள்ளதகவும். மேலும் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளிய கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பாக தொடர்ந்து மக்களுக்கு பல்வேறு கட்டமாக விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது. இந்நிலையில் மக்கள் பல இடங்களில் அரசு கூறிய விதிமுறைகளை பின்பற்றாமல் அலசியமான போக்கில் செயல்பட்டு வருகிறார் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலை நீடித்தால் மீண்டும் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கும் ஆகையால் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.