மேலும் அறிய

திருச்சியில் அகதிகள் முகாமில் கைதிகள் தொடர் போராட்டத்தால் பரபரப்பு

திருச்சி மத்திய சிறை அகதிகள் சிறப்பு முகாமில் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை வழங்க கோரி கைதிகள் இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு வெளிநாடுகளை சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் வழக்கு முடிவதற்கு முன்பாக வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் இருப்பதற்காக இந்த சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை இந்த முகாமில் இலங்கை, வங்கதேசம், நைஜீரியா, ருவாண்டா, பல்கேரியா, தெற்கு சூடான் உள்பட பல நாடுகளை சேர்ந்த 156 பேர் உள்ளனர். இவர்கள் தங்கள் மீதான வழக்குகளை விரைந்து முடித்து சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவ்வப்போது போராட்டமும் நடத்தி வருவது உண்டு. கடந்த மாதம் 20-ந்தேதி திருச்சி சிறப்பு முகாமில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். கேரளாவில் போதைப்பொருள் சிக்கிய வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. அப்போது முகாமில் இருந்து தங்க நகைகள், பணம், செல்போன்கள், கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து அமலாக்கத்துறையினரும் சிறப்பு முகாமில் சோதனை நடத்தினர். இதில் குறிப்பிட்ட 11 அகதிகளிடம் விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி அகதிகளுக்கான சிறப்பு முகாமில் திருச்சி மாநகர போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 155 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

திருச்சியில் அகதிகள் முகாமில் கைதிகள் தொடர் போராட்டத்தால் பரபரப்பு

இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று அகதிகள் முகாமில் கைதிகள், அங்குள்ள மரத்தின் உச்சியில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  "தண்டனை காலம் முடிந்த பின்னரும் எங்களை சிறையில் வைத்துள்ளனர். எங்களை காப்பாற்றுங்கள்,  பறிமுதல் செய்த செல்போனை கொடுங்கள்" என கையில் பதாகைகளை தூக்கிப் பிடித்தபடி அவர்கள் கோஷம் போட்டனர். இதனையடுத்து அதிகாரிகள் தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து மாலை 5.30 மணிக்கு பிறகு அவர்கள் மரத்தில் இருந்து இறங்கினர். இந்த சம்பவத்தால் முகாம் சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து அகதிகள் முகாமில் இருக்கும் கைதிகள் அவ்வபோது இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதி பரபரப்பாகவே காணப்படுகிறது. 

திருச்சியில் அகதிகள் முகாமில் கைதிகள் தொடர் போராட்டத்தால் பரபரப்பு

மேலும் இதன் காரணமாக முகாம் கைதிகளை பார்க்க வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.  காலையில் முகாம் கைதிகளை பார்ப்பதற்காக, அவர்களது உறவினர்கள் வந்து இருந்தனர். ஆனால் போலீசார் அவர்களை பார்க்க விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் சிறை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை சிறை போலீசார் கலைந்து போக செய்தனர். இதனிடையே முகாமில் உள்ள கைதிகள் நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் முகாம் சிறையின் சுற்றுச்சுவரில் ஏறி கோஷமிட்டனர். தங்களை பார்க்க வரும் உறவினர்களை அனுமதிக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த சம்பவத்தால் முகாம் சிறையில் பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டது. 

தலைப்பு செய்திகள்

Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Embed widget