மேலும் அறிய

பழுதான சிக்னல்கள்... பரிதவிக்கும் திருச்சி மக்கள்: உடனடி தீர்வு எடுப்பீங்களா?

திருச்சி நகரம் முழுவதும் போக்குவரத்து குழப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நகரின் முக்கியச் சந்திப்புகளில் தினசரி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

தஞ்சாவூர்: திருச்சிராப்பள்ளி மாநகரத்தின் பல்வேறு முக்கியச் சாலைச் சந்திப்புகளில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள் நீண்ட நாட்களாக செயலிழந்து பழுதடைந்து கிடப்பதால், நகரம் முழுவதும் போக்குவரத்து குழப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நகரின் முக்கியச் சந்திப்புகளில் தினசரி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சிக்னல்கள் செயல்படாததால், வாகன ஓட்டிகள் தங்களது வசதிக்கேற்ப வாகனங்களை இயக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் போக்குவரத்து ஒழுங்கு சீர்குலைவதுடன், சிறு விபத்துகள் மற்றும் பெரும் விபத்துகள் ஏற்படுவதற்கான அபாயமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

நகரின் போக்குவரத்து மிகுந்த முக்கியச் சந்திப்புகளான மத்திய பேருந்து நிலைய சந்திப்பு, சத்திரம் பேருந்து நிலையம், பாலக்கரை, தில்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த பிரச்சினை தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

நகரின் மிகவும் பரபரப்பான பகுதியாகக் கருதப்படும் மத்திய பேருந்து நிலைய சந்திப்பில், வெளியூர் பேருந்துகள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்டவை ஒரே நேரத்தில் சந்திப்பிற்குள் நுழைவதால் நீண்ட நேர போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்களும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

அதேபோல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகளவில் பயன்படுத்தும் சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில், சிக்னல்கள் செயலிழந்துள்ளதால் பாதசாரிகள் சாலையைக் கடப்பதில் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக முதியவர்கள், பெண்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் நீண்ட நேரம் சாலையின் ஓரத்தில் அச்சத்துடன் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

பாலக்கரை மற்றும் தில்லை நகர் பகுதிகளில், வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் அதிகமாக உள்ளதால், சிக்னல் செயலிழப்பால் வாகனங்கள் வரிசையாக தேங்கி நின்று நெரிசலை அதிகரிக்கின்றன.

சிக்னல்கள் வேலை செய்யாத காரணத்தால், எந்த வாகனம் முதலில் செல்ல வேண்டும் என்ற போட்டி ஓட்டுநர்களிடையே நிலவுகிறது. நான்கு திசைகளிலிருந்தும் ஒரே நேரத்தில் வாகனங்கள் சந்திப்பிற்குள் நுழைவதால், ஒட்டுமொத்த போக்குவரத்தும் ஸ்தம்பிக்கும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் நெரிசலைத் தவிர்க்க முந்திச் செல்ல முயற்சிப்பதால் சிறு விபத்துகள் தினசரி நிகழ்வாக மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

சிக்னல்கள் செயலிழக்கும் பகுதிகளில் போக்குவரத்து காவலர்கள் நேரடியாக பணியமர்த்தப்பட வேண்டும் என்றாலும், பல இடங்களில் போதிய காவலர்கள் இல்லாத நிலை காணப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில இடங்களில் ஒரே ஒரு காவலர் மட்டுமே நெரிசலை கட்டுப்படுத்தப் போராடி வருவதாகவும், சில சந்திப்புகளில் காவலர்கள் இல்லாததால் நிலைமை மேலும் மோசமடைந்து வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்பினர் கூறுகையில், “நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள சிக்னல்களுக்கு முறையான பராமரிப்பு மேற்கொள்ளப்படாததே இந்த நிலைக்கு காரணம். பழுதடைந்த சிக்னல்களை உடனடியாகச் சீரமைப்பதுடன், மின்சாரத் தடைகளை சமாளிக்கும் வகையில் சூரியசக்தி மூலம் இயங்கும் சிக்னல்களையும் அமைக்க வேண்டும்”  அதிக நெரிசல் காணப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மிக வேகமாக வளர்ந்து வரும் திருச்சி மாநகரத்தில் அடிப்படை போக்குவரத்து கட்டமைப்பே பாதிக்கப்பட்டிருப்பது நகரின் வளர்ச்சிக்கு பெரும் கேள்விக்குறியாக எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, செயலிழந்த சிக்னல்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்பதே திருச்சி மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget