மேலும் அறிய

பாஜக ஊடகப் பிரிவு நிர்வாகி சவுதாமணி கைது - திருச்சி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் விதிகளை மீறி தவறாக வீடியோ பதிவு செய்த பாஜக ஊடகப் பிரிவு நிர்வாகி சவுதாமணி அதிரடியாக கைது

போதைப்பொருள் விற்பனை, தயாரிப்பில் இந்தியாவில் தமிழ்நாடு முதன்மையாக உள்ளது என கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அதேபோன்று போதைப் பொருள் விற்பனைக்கு திமுக அரசு துணையாக உள்ளதாக கூறி எதிர்க்கட்சிகள் ஆன அதிமுக தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். போதைப் பொருள் விற்பனையில் முக்கிய குற்றவாளி ஆன ஜாபர் சாதிக்கிற்கு திமுகவில் இருக்கக்கூடிய முக்கிய நபர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது எனவும் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து அதிமுக, பாஜக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் பாஜக ஊடகப் பேரவை சார்ந்த சவுதாமணி என்பவர் அவரது @sowdhamani7 (மோடியின் குடும்பம்) என்ற X-தள கணக்கில், "மனது வலிக்கிறது, வருங்கால இந்தியாவின் தூண்கள் இப்படி அலங்கோலப்பட்டு கிடக்கிறது! திராவிட மாடல் இந்த வருங்கால தலைமுறையின் எதிர்காலத்தை சிதைக்கும் கொடுமைகளைத் தானே செய்கிறது. மது....கஞ்சா...திராவிட ஆட்சி தமிழகத்திற்கு சாபக்கேடு" என்று பதிவிட்டு. அதனுடன் ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், சுமார் 15 வயது மதிக்கத்தக்க 3 பள்ளி மாணவிகள், சீருடையுடன் கையில் பாட்டிலில் மது போன்ற பானத்தை வைத்து குடிப்பது போன்று வீடியோ பதிவு உள்ளது. அவ்வீடியோ பதிவை. 04.03.2024-ம் தேதி மாலை பகிர்ந்துள்ளார்.

பாஜக ஊடகப் பிரிவு நிர்வாகி சவுதாமணி கைது - திருச்சி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

மேலும், அந்த வீடியோவை பார்க்கும் போது, யாரோ மேற்படி திரவத்தை கொடுத்து, குடிக்க சொல்லி வீடியோ எடுத்து, அந்த பதிவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளதாகவும், இவ்வாறாக சமுதாயத்தை சீர்கெடுக்கும் விதமாகவும், குழந்தைகளை அச்சுறுத்தும் விதமாகவும், அரசுக்கும், அரசு பள்ளிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தோடும், பொது அமைதியை கெடுக்கும் விதமாகவும் மேற்படி வீடியோ மற்றும் பதிவு உள்ளதாகவும், ஏதோ உள்நோக்கத்துடன் வதந்தியை பரப்பியும், குழந்தைகள் சம்மந்தப்பட்ட இதுபோன்ற செய்தியை சமூக வலைத்தளங்கள். ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் வெளியிடுவது சட்டபடி குற்றம் எனவே அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக மத்திய மாவட்ட தொழில் நுட்ப அணி அமைப்பாளர் A.K.அருண் , திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் நேற்று மாலை புகார் கொடுத்தார். மேலும்  வீடியோவை @sowdhamani7 என்ற ID மூலமாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். மேற்படி சவுதாமணி என்பவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கொடுத்த புகாரின் பேரில் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் குற்ற எண்.12/24 u/s 153, 504, 505 (1) (b) IPC, 66 E IT Act r/w 74, 77 JJ Act- r/w 74, 77 jj act படி அவர் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
Embed widget