மேலும் அறிய

அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதியை மேம்படுத்த வேண்டும் - திருச்சி மக்கள் கோரிக்கை

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வேண்டும் என்றும், மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகராக மண்ணச்சநல்லூர் உள்ளது.  இங்கு 50-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி, தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளும், தனியார் கல்லூரியும் இயங்கி வருகிறது. மண்ணச்சநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஒன்றியத்தில் விவசாய தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்களே அதிக அளவில் உள்ளனர். இதனால் ஏதாவது உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டால்  இங்குள்ள அரசு மருத்துவமனைக்கு தான் சிகிச்சை பெற அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். மேலும், நீரிழிவு நோய்க்கு மாத்திரைகள் வாங்குவதற்கும் தினமும் 100-க்கணக்கானோர் வருகின்றனர். தினமும் 500-க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாகவும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.இந்நிலையில், இங்கு சிகிச்சைக்காக வருகின்ற நோயாளிகளுக்கு போதுமான மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதில்லை என்றும், நோயாளிகளை திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. அதுமட்டுமின்றி படுக்கை வசதி, சுகாதார வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமான அளவுக்கு இல்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதியை மேம்படுத்த வேண்டும் - திருச்சி மக்கள் கோரிக்கை

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் சீட்டு வழங்கும் இடத்தில் சீட்டு வழங்கும்போது தாமதம் ஏற்படுகிறது. நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து சீட்டு வாங்கிக் கொண்டு நோயாளிகள் டாக்டரை சந்திக்கின்ற நிலையில் அவர் அவசர, அவசரமாக பரிசோதனை செய்துவிட்டு துண்டு சீட்டில் மருந்து மாத்திரைகள் எழுதி கொடுத்து விட்டு சென்று விடுகின்றனர். எனவே இதை தவிர்க்க ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியே சீட்டு வழங்குவதற்கு கவுண்டர்கள் திறக்கப்பட்டு தனி ஆட்களை நியமிக்க வேண்டும். இரவு நேரங்களில் அவசர சிகிச்சைக்காக செல்லும்போது இரவு பணி பார்க்கும் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் சரிவர நோயாளிகளை கவனிப்பது இல்லை. இரவு பணி பார்க்கும் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பெண் நோயாளிகளுக்கு இங்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலை உள்ளது. இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு அந்த பகுதியில் செல்லும் நபர்களால் அச்சம் ஏற்படுகிறது. எனவே இரவு நேரத்தில் ஆண் காவலர்களை நியமித்து டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பெண் நோயாளிகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும் கூடுதல் ஆம்புலன்ஸ் சேவை வழங்க வேண்டும்” என்றனர்.

அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதியை மேம்படுத்த வேண்டும் - திருச்சி மக்கள் கோரிக்கை

மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனை  மருத்துவர்கள்  கூறும்போது,”நோயாளிகளுக்கு வழங்குவதற்கு தேவையான மருந்து மாத்திரைகள் கையிருப்பில் வைத்திருக்கிறோம். சில நேரங்களில் மருந்து மாத்திரைகள் இல்லை என்றாலும் வெளியில் இருந்து வரவழைத்து நோயாளிகளுக்கு உரிய மருந்து மாத்திரைகளை வழங்கி வருகிறோம். இந்த மருத்துவமனையில் தலைமை டாக்டரையும் சேர்த்து 7 டாக்டர்கள் பணியாற்றி வருகிறார்கள். சுமார் 50 படுக்கை வசதிகள் அமைக்க அனுமதி இருந்தும், இடம் பற்றாக்குறை காரணமாக 30 படுக்கைகள் மட்டுமே போடப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனையின் பின்பக்கம் காலியாக உள்ள இடத்தில் கூடுதலாக கட்டிடம் கட்டிக் கொடுத்தால் மேற்கொண்டு 20 படுக்கை வசதிகளை அங்கே அமைத்து கூடுதலான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். மேலும், எக்ஸ்ரே எடுப்பதற்கு கூடுதல் வசதி தேவை. இங்குள்ள நோயாளிகளை மேல் சிகிச்சைக்காக திருச்சி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பெரிய அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் போது கொள்ளிடம் நம்பர் ஒன் டோல்கேட், சமயபுரம், மற்றும் சிறுகனூர் பகுதிகளில் இருந்து தான் 108 ஆம்புலன்சை வரவழைக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு என்று தனியாக, எப்போதும் தயாராக இருக்கக்கூடிய வகையில் 108 ஆம்புலன்ஸ் வசதி இருந்தால் இங்கிருந்து நோயாளிகளை விரைவாக அனுப்பி வைக்க முடியும். இங்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகள் அனைவரிடமும் எங்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மிகுந்த கனிவோடும் அன்போடும் நடந்து கொள்கின்றனர்” என்றார்.

தலைப்பு செய்திகள்

ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்.21 வரை அவகாசம் நீட்டிப்பு! 
ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்.21 வரை அவகாசம் நீட்டிப்பு! 
திருச்சி கிழக்கில் இடைத்தேர்தல் பரபரப்பு! வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்த ஆட்சியர்!
திருச்சி கிழக்கில் இடைத்தேர்தல் பரபரப்பு! வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்த ஆட்சியர்!
ரயில் பயணிகள் கவனத்திற்கு! அக்டோபர் 18-ல் முக்கிய ரயில்கள் ரத்து மற்றும் நேர மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..
ரயில் பயணிகள் கவனத்திற்கு! அக்டோபர் 18-ல் முக்கிய ரயில்கள் ரத்து மற்றும் நேர மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..
திருச்சி மக்களே உஷார்... வரும் 18ம் தேதி குடிநீர் விநியோகம் கட்...மாநகராட்சி அறிவிப்பு
திருச்சி மக்களே உஷார்... வரும் 18ம் தேதி குடிநீர் விநியோகம் கட்...மாநகராட்சி அறிவிப்பு

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Embed widget