மேலும் அறிய

விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை; பட்டாசு விற்பனை கடைகளுக்கு அரியலூர் ஆட்சியர் எச்சரிக்கை

பட்டாசு உற்பத்தி ஆலைகள் மற்றும் விற்பனை கடைகளில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா? என்பதை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அரியலூர் மாவட்டத்தில் பட்டாசு உற்பத்தி ஆலைகள் மற்றும் விற்பனை கடைகளில் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் வெற்றியூர் ஊராட்சி விரகாலூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் கடந்த 9 ஆம் தேதி  தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தி 12 பேர் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து, இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, தீ விபத்தில் இறந்த விரகாலூரை சேர்ந்த ராசாத்தி, அரண்மனைக்குறிச்சியை சேர்ந்த முருகானந்தம் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வழங்கினார். அதனை அவர்களது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். இதனை தொடர்ந்து பட்டாசு உற்பத்தி ஆலை மற்றும் பட்டாசு விற்பனை கடைகளின் உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா பேசியது..

பட்டாசு ஆலைகள் மற்றும் கடைகளில் அனுமதிக்கப்பட்ட எடை அளவை விட கூடுதலாக பட்டாசை சேமிக்க கூடாது. 18 வயதிற்குட்பட்டவா்களை பட்டாசு விற்பனையில் ஈடுபடுத்தக்கூடாது. தீத்தடுப்பு உபகரணங்கள் போதிய அளவில் வைத்திருக்க வேண்டும்.  மேலும் அவசரகால வழிகள் எளிதில் வெளியறேக்கூடியதாக இருக்க வேண்டும். பட்டாசு தொடர்பான பணிகளில் அனுபவமில்லாத உள்ளூர் ஆட்களை பயன்படுத்தக்கூடாது. அனுமதிக்கப்பட்ட அளவு நபர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும், உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை; பட்டாசு விற்பனை கடைகளுக்கு அரியலூர் ஆட்சியர் எச்சரிக்கை

மேலும் பட்டாசு ஆலை மற்றும் கடைக்கு அருகே புகைப்பிடிக்கவோ, பட்டாசு வெடிக்கவோ கூடாது. இதுகுறித்து அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். பட்டாசு இருப்பு குறித்து இருப்பு பதிவேடு முறைப்படி எழுதி அன்றாடம் பதிய வேண்டும். உரிமைதாரர் மற்றவர்களுக்கு பட்டாசு கடையை வாடகைக்கோ, குத்தகைக்கோ விடக்கூடாது. அங்கீகரிக்கப்பட்ட, அனுமதிக்கப்பட்ட குறியீடுகளுடன் உள்ள லேபிள் ஒட்டிய பட்டாசுகளை அதற்குரிய பெட்டிகளில் மட்டுேம வாங்கவோ, விற்பனை செய்யவோ வேண்டும். பட்டாசு உற்பத்தி ஆலைகள் மற்றும் விற்பனை கடைகளில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா? என்பதை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வுக்குழுவினர் சுழற்சி முறையில் அவ்வப்போது பட்டாசு ஆலை மற்றும் விற்பனை கடைகளில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அரசின் விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் பட்டாசு தயாரிப்பிலும், விற்பனையிலும் ஈடுபடுங்கள். அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். உயிர் விலைமதிப்பற்றது. விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Iran Announcement: ''அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க.!“ ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை; ட்ரம்ப்பை அலற வைத்த அறிவிப்பு
''அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க.!“ ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை; ட்ரம்ப்பை அலற வைத்த அறிவிப்பு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
Embed widget