மேலும் அறிய

திருச்சி: கோவில் பூட்டை உடைத்து 6½ கிலோ வெள்ளி கவசம் கொள்ளை

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகே கோவில் பூட்டை உடைத்து 6½ கிலோ வெள்ளி கவசம், தாலிச்சங்கிலியை கொள்ளையடித்த முகமூடி ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகே டி.முருங்கப்பட்டியில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பூசாரி ராஜேந்திரன். இவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு பூஜையை முடித்து, கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது கருவறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு கிடந்தது. இதனையடுத்து அவர் கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் உப்பிலியபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில், உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், செபாஷ்டின் சந்தியாகு, பிரபாகரன், பாலமுருகன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
 
திருச்சி: கோவில் பூட்டை உடைத்து 6½ கிலோ வெள்ளி கவசம் கொள்ளை
 
இந்த விசாரனையில் மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 6½ கிலோ வெள்ளி கவசம், தாலிச்சங்கிலி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ. 8 லட்சம் ஆகும். மேலும் உண்டியலை உடைத்து காணிக்கைகளையும் அள்ளிச் சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து கோவில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.இதில் நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் 3 பேர் இந்த துணிகர கொள்ளையில் ஈடபட்டு இருந்தது பதிவாகி இருந்தது. கொள்ளை சம்பவத்தின் போது கோவிலில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் ஒலித்தும் பொதுமக்கள் நள்ளிரவில் அசந்து தூங்கியதால், அலாரம் ஒலித்தது தெரியவில்லை.
 
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, விரல்ரேகைகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முகமூடி ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த மாதம் இக்கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாகநல்லூர் மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் தொடரும் கொள்ளை சம்பவத்தால் பொது மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

"காவல்துறையின் குரூரப் போக்கு" தொடர் கதையாகும் லாக்-அப் மரணங்கள்.. கொதித்தெழுந்த பாஜக
Bank Holidays July: பாதி மாசம் லீவு தான் - வங்கி வேலைகளை செய்வது எப்படி? ஜுலை மாத விடுமுறை லிஸ்ட்
Bank Holidays July: பாதி மாசம் லீவு தான் - வங்கி வேலைகளை செய்வது எப்படி? ஜுலை மாத விடுமுறை லிஸ்ட்
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் லஞ்சம்: ரத்தக்கறை துவைக்க பணம், அதிர்ச்சி வீடியோ வெளியீடு!
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் லஞ்சம்: ரத்தக்கறை துவைக்க பணம், அதிர்ச்சி வீடியோ வெளியீடு!
லவ்வர் படத்தில் நடிச்சதுக்காக திட்டுறாங்க..  அதுக்கு நான்தான் காரணமாம்.. பிரபல நடிகை ஓபன் டாக்
லவ்வர் படத்தில் நடிச்சதுக்காக திட்டுறாங்க.. அதுக்கு நான்தான் காரணமாம்.. பிரபல நடிகை ஓபன் டாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Cheetah Attack CCTV : ஒரே வீட்டில் 3 வேட்டை !நடுங்க வைக்கும் சிறுத்தை திக்..திக்..cctv காட்சிகள்
EPS Vs Amit Shah : எடப்பாடி பழனிச்சாமி vs அமித் ஷாஉடையும் அதிமுக பாஜக கூட்டணி?புது ரூட்டில் EPS?
திருடன் கையில் பதவி! தடுமாறும் ராமதாஸ்! புலம்பும் பாமகவினர்
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! வாக்கு கொடுத்த அமித்ஷா! மாநில அரசியல் ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"காவல்துறையின் குரூரப் போக்கு" தொடர் கதையாகும் லாக்-அப் மரணங்கள்.. கொதித்தெழுந்த பாஜக
Bank Holidays July: பாதி மாசம் லீவு தான் - வங்கி வேலைகளை செய்வது எப்படி? ஜுலை மாத விடுமுறை லிஸ்ட்
Bank Holidays July: பாதி மாசம் லீவு தான் - வங்கி வேலைகளை செய்வது எப்படி? ஜுலை மாத விடுமுறை லிஸ்ட்
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் லஞ்சம்: ரத்தக்கறை துவைக்க பணம், அதிர்ச்சி வீடியோ வெளியீடு!
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் லஞ்சம்: ரத்தக்கறை துவைக்க பணம், அதிர்ச்சி வீடியோ வெளியீடு!
லவ்வர் படத்தில் நடிச்சதுக்காக திட்டுறாங்க..  அதுக்கு நான்தான் காரணமாம்.. பிரபல நடிகை ஓபன் டாக்
லவ்வர் படத்தில் நடிச்சதுக்காக திட்டுறாங்க.. அதுக்கு நான்தான் காரணமாம்.. பிரபல நடிகை ஓபன் டாக்
போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் மரணம் - காவலர்கள் 6 பேர் சஸ்பெண்ட் - நடந்தது என்ன?
போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் மரணம் - காவலர்கள் 6 பேர் சஸ்பெண்ட் - நடந்தது என்ன?
இன்ஜினியர் பரிதாபங்கள்.. 90 டிகிரியில் கட்டப்பட்ட பிரிட்ஜ்.. கடைசியில் இப்படி ஆகிடுச்சே
மோசமாக கட்டப்பட்ட பிரிட்ஜ்.. வைரலான போட்டோ.. தூக்கி அடிக்கப்பட்ட இன்ஜினியர்கள்!
சூர்யா - ஜோதிகாவின் ரொமான்டிக் டூர்.. எந்த நாடு தெரியுமா.. அழகான நாட்களாக இருக்கிறதாம்
சூர்யா - ஜோதிகாவின் ரொமான்டிக் டூர்.. எந்த நாடு தெரியுமா.. அழகான நாட்களாக இருக்கிறதாம்
Upcoming Hybrid Cars: டீசல், பெட்ரோல் கதை ஓவர்..! ஹைப்ரிட் ஃபீவர் பத்திக்கிச்சு, முறுக்கிட்டு வரும் கார் மாடல்கள்
Upcoming Hybrid Cars: டீசல், பெட்ரோல் கதை ஓவர்..! ஹைப்ரிட் ஃபீவர் பத்திக்கிச்சு, முறுக்கிட்டு வரும் கார் மாடல்கள்
Embed widget