மைசூரில் இருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட 1800 கிலோ குட்கா பறிமுதல்
’’முட்டைகோஸ் மூட்டைகளில் மறைத்து எடுத்துவரப்பட்ட 1800 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்’’
தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்துவரும் கடைகள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவிநகர் பகுதியில் கோட்டை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
‛அம்மா மாதிரி ஸ்டாலின் செயல்படுகிறார்...’ செல்லூர் ராஜூ புகழாரம் !சீமான் குறித்து அவதூறு - மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் பேராசியர் ஜெயராமன் மீது போலீசில் புகார்
அப்போது கர்நாடக மாநில வாகனப்பதிவு எண் கொண்ட லோடு வேனை சோதனை செய்ததில், முட்டைகோஸ் மூட்டைகளுக்கு இடையே 64 மூட்டைகளில் மறைத்து எடுத்து வரப்பட்ட 1800 கிலோ குட்கா, பான்மசாலா மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 30.50 லட்சம் என மதிப்பிடப்பட்ட நிலையில் சட்டவிரோதமாக குட்கா, பான்மசாலாவை கடத்திய, மைசூரை சேர்ந்த சோமு சேகர் (22), மனோஜ் குமார் (26) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கஞ்சாவிற்ற பணம் 3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரும் கொடுத்த தகவலின் பேரில் கம்பரசம்பேட்டை கணபதி நகரை சேர்ந்த பாஸ்கர் (50), இவரது அண்ணன் முத்து (60), ஆகியோரிடம் காவல்நிலையத்தி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் புற்றுநோயை ஏற்படுத்தும் குட்கா, பான்மசாலாக்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்திருந்தாலும், பல்வேறு கடைகளில் சட்டவிரோதமாக இவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களில் இருந்து அதிக அளவில் குட்கா, பான்மசாலா பொருட்கள் தமிழகத்திற்கு கடத்தி வரப்படும் நிலையில் முறையான சோதனை நடத்தி இந்த கடத்தலை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
138 ஆண்டுகள் பழமையான தஞ்சாவூர் மணிக்கூண்டு - ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிப்பு
குட்கா, பான்மசாலா பொருட்களை போலவே தமிழகத்தில் கஞ்சா பொருட்கள் விற்பனையும் அதிகரித்துள்ள நிலையில் இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும் அதிகம் நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பொது இடங்களில் மது அருந்தினால் சிறை - திருவாரூர் எஸ்.பி. எச்சரிக்கை