மேலும் அறிய
Advertisement
சூட்கேஸ் ஸ்க்ருவாக மாற்றப்பட்ட தங்கம்.. நூதன முறையில் கடத்தல் - திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு...!
திருச்சி விமான நிலையத்தில் ஸ்குரு வடிவில் கடத்தி வரப்பட்ட ரூ.11 லட்சம் தங்கம் பறிமுதல் , சுங்கதுறை அதிகாரிகள் நடவடிக்கை.
திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. உள்நாட்டு சேவைகளாகவும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வருவது தொடர் கதையாக உள்ளது. இதை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நூதன முறையில் கடத்தல்:
இதில் சில நாட்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் ஒரு கிலோ 188 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று காலை 6.40 மணிக்கு திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பயணி ஒருவரை தனியே அழைத்து சென்று, அவரது உடமைகளை சோதனை செய்தனர். இதில் அவர் சூட்கேசில் தங்க ஸ்குருக்களில் உலோகம்(நிக்கல்) பூசப்பட்ட வடிவில் மறைத்து 186 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.11 லட்சத்து 16 ஆயிரம் ஆகும்.இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் நாகப்பட்டினத்தை சேர்ந்த ஜாவித்(வயது 42) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கடந்த சில மாதங்களாக திருச்சி விமான நிலையத்திற்கு அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதும், அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் வாடிக்கையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. திருச்சி விமான நிலையத்தில் தொடர்ந்து கஞ்சா கடத்தல், போதை மாத்திரை கடத்தல், தங்கம் கடத்தல் என்ற நிகழ்வு அரங்கேறி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த விமான நிலைய காவல்துறை உயர் அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்திருந்தனர். ஆனால் திருச்சி விமான நிலையத்தில் தொடர்ந்து இயல்பாக தங்கம் கடத்தல் நடைபெற்று வருகிறது .அதில் ஒரு சில பயணிகளிடமிருந்து கோடிக்கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது . திருச்சி விமான நிலையத்தில் என்ன நடக்கிறது? பாதுகாப்புகள் குறைபாடா? கடத்துவதற்கு அதிகாரிகள் துணையா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/ abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
ஜோதிடம்
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion