Tiruvannamalai Maha Deepam 2025: இலவச பேருந்து வசதி! 24 இடங்களில் இருந்து பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு! மிஸ் பண்ணிடாதீங்க!
Tiruvannamalai Karthigai Deepam 2025: "தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து, திருவண்ணாமலை நகருக்குள் கட்டணமில்லா அரசு மற்றும் தனியார் பேருந்து குறித்து முக்கிய அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது"

Tiruvannamalai Maha Deepam 2025 Free Bus: "திருவண்ணாமலையில் உள்ள 24 தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து, 220 கட்டணமில்லா இலவச பேருந்துகள் பக்தர்கள் வசதிக்காக இயக்கப்பட உள்ளன"
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் - Tiruvannamalai Kovil
நினைத்தாலே முக்தி தரும் கோவிலாக திருவண்ணாமலை அண்ணாமலையார் நம்பப்படுகிறது. அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் பார்க்கப்படுவதால், ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் கிருத்திகை அன்று, மகா தீப திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. தீபத் திருவிழாவின் போது இலட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு குவிவது வழக்கம். தமிழ்நாடு மட்டும் இன்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இலட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு படையெடுத்து வருகின்றனர்.
கார்த்திகை மாத தீப திருவிழா - KarthiKarthigai Deepam
இந்த ஆண்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தீபத் திருவிழா நாளை (03-12-2025) அன்று விமர்சையாக நடைபெற உள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் இணைந்து பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை புறநகர் பகுதியில் 24 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கட்டணமில்லா அரசு பேருந்து - Tiruvannamalai free shuttle bus
திருவண்ணாமலை புறநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 24 தற்காலிக பேருந்து நிலையங்களுக்கும் வரும் பக்தர்களுக்கு, இன்று (02-12-2025) மற்றும் நாளை (03-12-2025) ஆகிய இரண்டு நாட்களுக்கு திருவண்ணாமலை நகருக்குள் கோவில் மற்றும் கிரிவலப் பாதைக்கு அருகில் வரை வருவதற்கு 20 கட்டணம் இல்லா தனியார் பேருந்துகளும், 200 கட்டணமில்லா கல்வி நிறுவனம் பேருந்துகளும், ₹.10 ரூபாய் பயண கட்டணத்துடன் 20 சிற்றுந்துகளும் இயக்கப்பட உள்ளன. பக்தர்கள் இந்த இலவச பயண சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
எங்கிருந்து இலவச பேருந்துகள் இயக்கப்படுகிறது ?
வேலூர் சாலையில் இருந்து 10 இலவச பேருந்துகளும், 10 ரூபாய் கட்டணத்தில் 6 மினி பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
புறவழிச் சாலை - 1 இருந்து 6 இலவச பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பத்து ரூபாய் கட்டணத்தில் 6 மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அவலூர்பேட்டை சாலையில் இருந்து 10 இலவச பேருந்துகளும், பத்து ரூபாய் கட்டணத்தில் 6 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
புறவழிச்சாலை - 2 நொச்சிமலை விஜயலட்சுமி நகர் தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து, ஆறு இலவச பேருந்துகளும், பத்து ரூபாய் கட்டணத்தில் 4 மினி பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
மலப்பாம்பாடி சந்திப்பிலிருந்து 4 இலவச பேருந்துகள் இயக்கப்படுகிறது.
புறவழிச் சாலை - வாணியந்தாங்கல் சந்திப்பு பகுதியிலிருந்து 6 இலவச பேருந்துகளும் பத்து ரூபாய் கட்டணத்தில் 4 மினி பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
திண்டிவனம் சாலை தென்னரசம்பட்டு தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து 1 இலவச பேருந்துகளும், பத்து ரூபாய் கட்டணத்தில் 8 மினி பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
திண்டிவனம் சாலை எஸ்.கே.பி கல்லூரி தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து, 4 இலவச பேருந்துகளும், பத்து ரூபாய் கட்டணத்தில் 2 மினி பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
திண்டிவனம் ரிங் ரோடு To வேட்டவலம் ரிங் ரோடு பகுதியிலிருந்து 4 இலவச பேருந்துகளும் பத்து ரூபாய் கட்டணத்தில் 2 மினி பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
வேட்டவலம் சாலை ஏந்தல் கிராமம் தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து 10 இலவச பேருந்துகளும் பத்து ரூபாய் கட்டணத்தில் 8 மினி பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
திருக்கோவிலூர் சாலை அருணை மருத்துவ கல்லூரி தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து 10 இலவச பேருந்துகளும், பத்து ரூபாய் கட்டணத்தில் 8 மினி பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
திருக்கோவிலூர் உடையாந்தல் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து 6 இலவச பேருந்துகளும் பத்து ரூபாய் கட்டணத்தில் 2 மினி பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
மணலூர்பேட்டை ரோடு தற்காலிக பேருந்து நிலையம் பகுதியில் இருந்து 8 இலவச பேருந்துகளும் பத்து ரூபாய் கட்டணத்தில் 4 மணி பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
தண்டாரம்பட்டு சாலை நல்லவன் பாளையம் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து 12 இலவச பேருந்துகளும் பத்து ரூபாய் கட்டணத்தில் 7 மினி பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன
தண்டாரம்பட்டு ரிங் ரோடு to பெரும்பாக்கம் ரிங் ரோடு சந்திப்பு கேவி பள்ளி தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து 6 இலவச பேருந்துகளும் 10 ரூபாய் கட்டணத்தில் 2 மினி பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
செங்கம் சாலை புதூர் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து 12 இலவச பேருந்துகளும் 10 ரூபாய் கட்டணத்தில் 8 மினி பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
செங்கம் பாலியப்பட்டு தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து 8 இலவச பேருந்துகளும் பத்து ரூபாய் கட்டணத்தில் 4 மினி பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
காஞ்சி சாலை ஆடையூர் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து 2 இலவச பேருந்துகளும் பத்து ரூபாய் கட்டணத்தில் 1 மினி பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
வேலூர் ரிங் ரோடு முதல் புறவழிச் சாலை இணைப்பு சுங்கச்சாவடி தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து 8 இலவச பேருந்துகளும் பத்து ரூபாய் கட்டணத்தில் 4 மினி பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
திண்டிவனம் சாலை - புறவழிச் சாலை திண்டிவனம் ரிங் ரோடு தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து 7 இலவச பேருந்துகளும் பத்து ரூபாய் கட்டணத்தில் 4 மினி பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.





















