ஆரணி தொகுதியை திமுக புறக்கணிப்பதாக கூறுவதா? தத்தெடுத்துள்ளேன் - அமைச்சர் எ.வ.வேலு
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுகவால் வெற்றி பெற முடியவில்லை, எனவே ஆரணி தொகுதி பொறுப்பாளராக தாரணி வேந்தனை நியமித்துள்ளேன்.
ஆரணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 1279 சுய சுயஉதவி குழுக்களுக்கு 17288 பயனாளிகளுக்கு ரூ136.48 கோடி மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் புதிய கட்டிடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி ஓ.ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை சார்பாக ரூ.1 கோடியே 26 இலட்சம் மதிப்பீட்டில் ஆரணி சார் கருவூலம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக ஆரணி மற்றும் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.89 இலட்சத்து 99 ஆயிரம் மதிப்பீட்டில் 7 அங்கன்வாடி கட்டிடங்களையும் ரூ.56 இலட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் துறை அமைச்சர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.
பொதுப்பணித்துறை துறை அமைச்சர் தெரிவித்ததாவது:
வருமானம் வரக்கூடிய வழிகளை விரிவாக்கி வளங்களையும் பெருக்கி இடையூறுகளையும் ஆராய்ந்து நீக்கிடும் வல்லவனை செயலாற்றும் திறனுடையவன் என்று குறிப்பிடுகிறார். பல்வேறு துறைகளின் சார்பாக 5785 பயனாளிகளுக்கு ரூ13.88 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறது. பல்வேறு ஊராட்சிகளில் அங்கன்வாடி கட்டிடம் ஊராட்சிமன்றத்தின் நிர்வாக கட்டிடம், பொது விநியோக திட்டத்தின் மூலம் நியாய விலைக்கட்டிடம், பள்ளிக்கட்டிடம், ஆவின் பால் கொள்முதல் செய்வதற்கான 12 கட்டிடங்கள் என சுமார் ரூ 2 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கட்டிடங்கள் இந்நிகழ்ச்சியின் மூலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் இந்த ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று குறிப்பிடுகிறார்கள். திராவிட மாடல் ஆட்சி என்றால் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று பொருள். ஆரணி தொகுதியை திமுக புறக்கனிக்கவில்லை. இந்த 3 ஆண்டு கால ஆட்சியில் ஆரணி நகராட்சியில் ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் அறிவுசார் மைய நூலகம், 5 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது. ரூ.8 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் சாலைகள், உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. ரூ1 கோடியே 50 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளிகள் புணரமைக்கிற பணிகளும் என பல்வேறு திட்டங்கள் வகுத்து அதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றது. 3 ஆண்டுகால ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக ஆரணி சட்டமன்ற தொகுதிக்கு ரூ.78 கோடி மதிப்பீட்டில் சாலை மற்றும் பாலப் பணிகள் நடைபெற்றிருக்கிறது. பொதுப்பணித்துறை சார்பாக ரூ.2 கோடியே 51 இலடசம் மதிப்பீட்டில் 17 பணிகள் நடைபெற்றிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ரூ.7 கோடியே 81 இலட்சம் மதிப்பீட்டில் அரசினர் மேல்நிலைப்பள்ளி கட்டிடங்கள் கட்டி கொண்டிருக்கின்றனர். ஆரணி தொகுதியை நான் தத்தெடுத்துள்ளேன். கடந்த 3 ஆண்டுகால ஆட்சிக்கு கிடைத்த வெற்றிதான் நாடாளுமன்ற தேர்தலில் ஆரணி தொகுதி உட்பட 40 தொகுதிகளையும் வென்றுள்ளோம். ஆனால் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுகவால் வெற்றி பெற முடியவில்லை, எனவே ஆரணி தொகுதி பொறுப்பாளராக தாரணி வேந்தனை நியமித்துள்ளேன். 2026 நடக்கவுள்ள தேர்தலில் ஆரணி தொகுதி மக்கள் திமுகவை கண்டிப்பாக வெற்றி பெற செய்வார்கள்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மதுரையில் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்புகள் வழங்கும் விழாவினை தொடங்கி வைத்ததை தொடர்ந்துள்ளார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் 1279 சுய சுயஉதவி குழுக்களுக்கு 17288 பயனாளிகளுக்கு ரூ136.48 கோடி மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. புதமைப்பெண் திட்டம் மக்களுடன் முதல்வர் தாய்வீட்டு சீதனம் என்றழக்கப்படுகிற மாதம் மாதம் 1000 வழங்கப்படும். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விடியல் பயணம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வாய்ந்த திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களை காட்டிலும் சிறந்த முதல்வராக அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையிலான சிறந்த திராவிட மாடல் ஆட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி கொண்டிருக்கிறார் என தெரிவித்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்ரூபவ் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.