மேலும் அறிய

திருநெல்வேலி பழிக்குப்பழி கொலை: தந்தை, மகன் கொடூரம்; தலை துண்டித்து வீச்சு!

ஒரு காரிலும், 3 மோட்டார் சைக்கிள்களிலும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் 9 பேர் கொண்ட கும்பல் பின்தொடர்ந்து வந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே முன்விரோதம் காரணமாக தந்தை, மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பழிக்குப்பழியாக தலையை துண்டித்து சாலையில் வீசிவிட்டு சென்ற கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.


திருநெல்வேலி பழிக்குப்பழி கொலை: தந்தை, மகன் கொடூரம்; தலை துண்டித்து வீச்சு!

கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மூலச்சி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சித்திரபுத்திரன் மகன் காளிமுத்து (40). விவசாயி. இவரது தரப்பினருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் பாண்டியன் தரப்பினருக்கும் இடையே, கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக முன்விரோதம் இருந்து வருகிறது. இருதரப்பையும் சேர்ந்த பெண்களுக்கு இடையே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்சினைதான் இதற்கு மூலகாரணமாக இருந்துள்ளது.

இதில் சித்திரபுத்திரனின் ஆதரவாளர்களால் பெருமாள் பாண்டியன், பெருமாள் பாண்டியனின் ஆதரவாளர்களால் திண்டுக்கல்லில் வைத்து சித்திரபுத்திரனின் மருமகன் குமார் என, அடுத்தடுத்து 6 கொலைகள் பழிக்குப் பழியாக நடந்துள்ளன. இந்நிலையில், காளிமுத்து தனது மகன்கள் சின்னத்துரை (15), ஜெயராஜ் (5) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் நேற்று மாலை வீரவநல்லூர் சென்றார்.

மீண்டும் மருதுடையார்குளம் பகுதியில் இருந்து மூலச்சிக்கு சென்றபோது, ஒரு காரிலும், 3 மோட்டார் சைக்கிள்களிலும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் 9 பேர் கும்பல் இவர்களைப் பின்தொடர்ந்து வந்துள்ளது. காளிமுத்துவின் மோட்டார் சைக்கிள் மீது காரை அதிவேகமாக மோதியதில் காளிமுத்துவும், அவரது இரு மகன்களும் நிலைகுலைந்து கீழே விழுந்தனர்.

இதில் பலத்த காயமடைந்த சிறுவன் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காளிமுத்துவும், சிறுவன் சின்னத்துரையும் காயங்களுடன் சாலையில் விழுந்து கிடந்தனர். அப்போது, இவர்களை விரட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல், காளிமுத்துவை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு, அவரது தலையை துண்டித்து ஒரு சாக்குப்பையில் எடுத்துக்கொண்டு, 5 கி.மீ. தொலைவில் கல்லிடைக்குறிச்சி - திருநெல்வேலி மாநில நெடுஞ்சாலையில் கரம்பை கிராமம் அருகே வீசிவிட்டு தப்பிச் சென்று விட்டது.


திருநெல்வேலி பழிக்குப்பழி கொலை: தந்தை, மகன் கொடூரம்; தலை துண்டித்து வீச்சு!

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வீரவநல்லூர் மற்றும் கல்லிடைக்குறிச்சி போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, பலத்த காயமடைந்த சின்னத்துரையை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காளிமுத்து, ஜெயராஜ் ஆகியோரது உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருநெல்வேலி சரக டிஐஜி திருநாவுக்கரசு, மாவட்ட எஸ்.பி.விஷ்வேஷ் பா.சாஸ்திரி மற்றும் போலீஸார் விசாரித்ததில் காரில் வந்த கும்பல் பெருமாள்பாண்டியன் தரப்பினர் என்பதும், முன்விரோதத்தில் பழிக்குப்பழியாக இந்த இரட்டை கொலை சம்பவம் நடைபெற்றுள்ளதும் முதற்கட்டவிசாரணையில் தெரியவந்துள் ளது. தப்பியோடிய கும்பலை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இரட்டை கொலை சம்பவத்தால் மூலச்சி பகுதியில் பதற்றம் நிலவுகிறது. அங்கு அசம்பாவிதங்களைத் தடுக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

திருநெல்வேலி - திருச்செந்தூர் பகுதியில் ரயில்சேவை மாபெரும் வளர்ச்சிப் பணிகள்: பயணிகள் மகிழ்ச்சி !
திருநெல்வேலி - திருச்செந்தூர் பகுதியில் ரயில்சேவை மாபெரும் வளர்ச்சிப் பணிகள்: பயணிகள் மகிழ்ச்சி !
பானைகள் முதல் பகடைக்காய் வரை... சங்ககால வாழ்வின் மர்மங்கள் விலகும் மலையடிப்பட்டி அகழாய்வு !
பானைகள் முதல் பகடைக்காய் வரை... சங்ககால வாழ்வின் மர்மங்கள் விலகும் மலையடிப்பட்டி அகழாய்வு !
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
திருநெல்வேலி, தென்காசியில் நாளை மின்தடை! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
திருநெல்வேலி, தென்காசியில் நாளை மின்தடை! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Embed widget