Tirunelveli SP Arrest: கைதாகும் நெல்லை எஸ்.பி? - ஆதி திராவிடர் பழங்குடியினர் மாநில ஆணையம் அதிரடி உத்தரவு... எதனால்?
நெல்லை எஸ்.பி- ஐ கைது செய்ய ஆதி திராவிடர் பழங்குடியினர் மாநில ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்ட எஸ்.பி, ப. சரவணனை கைது செய்து ஆஜர்படுத்துமாறு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
காவல் கண்காணிப்பாளர் இவ்வாணையத்தின் அறிவிக்கையை சட்டை செய்யாமல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆணையத்தின் அழைப்பாணையில் குறிப்பிட்டுள்ளபடி, அப்போதே அவருக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்க கூடும் என்றாலும், மேலும் ஒரு வாய்ப்பு வழங்கி 30.11.2022 அன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும், ஆஜராகும் போது ஏன் அபராதம் விதிக்க கூடாது என்பதற்கான காரணம் காட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவரின் செயல் ஆணையத்தின் உத்தரவுகள் தம்மைக் கட்டுப்படுத்தாது என்ற அவரது கருத்திணை வெளிப்படுத்துவதாகவும், ஆணையத்தில் நேரில் ஆஜராவதை தம்முடைய தகுதிக்குக் குறைவானது என அவர் கருதுவதாகவும் அமைகிறது.
கைது செய்ய உத்தரவு:
இதையடுத்து, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன்-க்கு ரூ500/. அபராதம் விதித்து இவ்வாணையம் உத்தரவிடுகிறது.
மேலும், திருநெல்வேலி மாவட்ட காவல் காணிப்பாளரை கைது செய்து, இவ்வாணையத்தின் முன் விசாரணைக்கு 28.12.2022 அன்று, ஆஜர்படுத்துமாறு பிணையில் விடக்கூடிய (Bailable warrant) பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிடப்படுகிறது. பிடி ஆணையை நிறைவேற்றும் பொருட்டு அதை தென் மண்டல காவல் துறை தலைவருக்கு (Inspector General of Police, South Zone) அனுப்ப உத்தரவிடப்படுகிறது.