நெல்லை | குளத்தில் இருந்து மீட்கப்பட்ட வெள்ளி லட்சுமி சிலை.. பணகுடி போலீசார் தீவிர விசாரணை..
”பணகுடி, நாங்குநேரி பகுதிகளில் தொடர்ச்சியாக மீட்கப்படும் சாமி சிலைகள் : காவல்துறையினர் தீவிர விசாரணை”
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள பரிவிரி சூரியன் கிராமம் உள்ளது, இங்குள்ள குளத்தை பொதுமக்கள் குளிப்பதற்கு பயன்படுத்துவது வழக்கம், இந்நிலையில் நேற்று மாலை சிலர் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது காலில் ஏதோ தட்டுப்பட்டதால், அதனை எடுத்து பார்த்து உள்ளனர். ஒரு அடி உயரமும் கொண்ட வெள்ளி லட்சுமி சிலை தட்டுப்பட்டது தெரியவந்தது, உடனே பொதுமக்கள் பணகுடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் வெள்ளி சிலையை மீட்டு பணகுடி வருவாய் ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர், சிலையானது ஒரு அடி உயரமும் 20 கிலோ வெள்ளியினால் செய்யப்பட்ட லட்சுமி சிலை என தெரியவந்தது, தொடர்ந்து ராதாபுரம் கருவூலத்திற்கு அச்சிலையை பாதுகாப்பாக எடுத்துச்சென்று வைக்கப்பட்டுள்ளது, பணகுடி, வடக்கன்குளம், விளாத்திகுளம், சமூக ரெங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டின் கரையோரங்களில் இருக்கும் கோவில்களில் சிலைகள் மற்றும் உண்டியல்கள் உடைக்கப்பட்டு திருடப்பட்டு வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது,
இதே போல கடந்த 31-ஆம் தேதி நெல்லை மாவட்டம் நாங்குநேரி பேருந்து நிலைய கழிவறைக்கு நாங்குநேரியை சேர்ந்த ஐயப்பன் (55) என்பவர் சென்றபோது அதன் வாசலில் ஒரு பை இருந்ததை கண்டார், அப்போது அந்த பையை எடுத்து திறந்து பார்த்தபோது அதில் அரை அடி உயரத்தில் 4 சாமி சிலைகள் இருப்பதை அறிந்து அந்த பையுடன் நாங்குநேரி காவல் நிலையத்திற்கு சென்று நடந்த விபரத்தை தெரிவித்தார், உடனடியாக போலீசார் அந்த பையை திறந்து பார்த்ததில் அதில் 4 வெண்கல சாமி சிலைகள் மற்றும் ஒரு சிறிய கத்தியும் இருந்தது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் -Madurai Taste | பர்மா இடியாப்பம்.. அவித்த காய்கறி குருமா.. இறைச்சி க்ரேவி.. மதுரையில் இப்படி ஒரு Foodie சொர்க்கம்
உடனே நாங்குநேரி இன்ஸ்பெக்டர் காளியப்பன் தலைமையில் போலீசார் அந்த 4 சாமி சிலைகள் மற்றும் கத்தியையும் மீட்டு நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் தலைமையிடத்து தாசில்தார் சண்முகவேலிடம் நான்குநேரி போலீசார் ஒப்படைத்தனர். இந்த சிலைகள் குறித்து நாங்குநேரி போலீசார் விசாரணையும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மீட்கப்பட்ட வெள்ளி சிலை திருடப்பட்டு குளத்தில் வீசப்பட்டதா என பல்வேறு கோணங்களில் சிலை மற்றும் கடத்தல் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!