மேலும் அறிய
Advertisement
நுங்குவெட்ட சென்ற 80 வயது உடுக்கை இசை கலைஞருக்கு உதவித் தொகை அளிக்க ஆட்சியர் நடவடிக்கை
போதிய வருமானம் இல்லமால் விவசாய வேலைக்கு செல்வது, நுங்கு விற்பது போன்ற வேலைகளை செய்து அதில் கிடைக்கும் வருவமானத்தில் தனது இறுதி காலத்தினை கழித்து வரும் உடுக்கை இசைக்கலைஞர் குருசாமி.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள மேலக்கரந்தை கிராமத்தினை சேர்ந்தவர் குருசாமி. 80 வயதான இவர், வில்லிசையில் உடுக்கை வாசிக்கும் கலைஞர். சுமார் 45 ஆண்டுகளுக்கு மேலாக உடுக்கை வசித்து வந்தார். தமிழகம் முழுவதும் பல்வேறு வில்லிசை கச்சேரிகளில் கலந்து கொண்டு உடுக்கை வாசித்துள்ள குருசாமி மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் முன்னிலையிலும் உடுக்கை வாசித்து பாராட்டு பெற்றுள்ளார். பல்வேறு அமைப்புகளிடம் இருந்து பல்வேறு விருதுகள், பாராட்டு சான்றிதழ்களும் பெற்றுள்ளார். தமிழக அரசின் கலைஞர்களுக்கான அடையாள அட்டையும் குருசாமி பெற்றுள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில் திருவிழாக்கள் இல்லை என்பதால் நிகழ்ச்சிகள் நடக்கவில்லை என்பதால் கடந்த 2 ஆண்டுகளாக வேலைக்கு எங்கும் செல்லமால் உள்ளார். நிகழ்ச்சிகள் இல்லை என்பதால் போதிய வருமானம் இல்லமால் விவசாய வேலைக்கு செல்வது, நுங்கு விற்பது போன்ற வேலைகளை செய்து அதில் கிடைக்கும் வருவமானத்தில் தனது இறுதி காலத்தினை குருசாமி கழித்து வருகிறார்.
உடுக்கை இசைக்கலைஞருக்கு உதவி தொகை கிடைக்கவில்லை என்ற செய்தி கிடைத்தவுடன் மேலக்கரந்தை நோக்கி புறப்பட்டோம், தூத்துக்குடி மாவட்ட எல்லை கிராமமான மேலக்கரந்தை சென்றடைந்த போது வெயில் சுள்ளென அடிக்க, அந்த வேகாத வெயிலில் வில்லிசையில் உடுக்கை இசைத்த முதியவர் குருசாமியின் கை தற்போது பனை நுங்குவை இலாவகமாக சீவி கொண்டிருந்தது. சுட்டெரிக்கும் வெயிலில் தனது சைக்கிளில் பனங்காயை ஏற்று கொண்டு மேலக்கரந்தை கிராமம் மட்டுமல்லாமல் அருகில் உள்ள கிராமத்திற்கும் சென்று விற்பனை செய்து அதில் கிடைக்கும் சொற்ப வருவாயை கொண்டு பசியாற்றி வருகிறார் குருசாமி.
உடல் தளரும் வயதிலும் அயராது உழைக்கும் பெரியவர் குருசாமியிடம் பேச்சுக் கொடுத்தோம், உடுக்கை இசைன்னா என்னான்னு கொஞ்சம் இருய்யான்னு வியாபாரத்தை முடிச்சிட்டு வீட்டுக்கு கூப்பிட்டு போனார். தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம், உடுக்கை இசையை பாராட்டி தனக்கு தரப்பட்ட சான்றிதழ்களை காண்பித்து மகிழ்ந்த அவர் , தனது உயிருக்கு உயிரான உடுக்கையை தனது கைகளில் எடுத்து கொண்டு வாசிக்க துவங்க வாசிப்பிற்கு ஏற்ப உடுக்கையின் சுற்றியுள்ள பகுதிகளை தனது விரல்களை கொண்டு ஏற்றியும் இறக்கியும் பிடித்து உடுக்கை இசையை வாசித்தார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நலிந்த கலைஞர்களுக்கான உதவி தொகை கேட்டு குருசாமி விண்ணப்பம் செய்துள்ளனர். ஆனால் தற்பொழுது வரை அவருக்கு உதவித்தொகை கிடைத்தபாடு இல்லை, பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை இல்லை என்பதால் வேறு வழி இல்லமால் தள்ளாத வயதிலும் குருசாமி நுங்கு விற்பனை செய்து வந்தார். நுங்கு சீசனும் தற்பொழுது முடிந்து விட்டது, விவசாய வேலையும் இல்லை, குடும்பத்தினர் அரவணைப்பும் இல்லை என்ற சூழ்நிலையில் ரேஷனில் கொடுக்கும் அரிசியை வைத்து தனது வாழ்நாள்களை கழித்து வருகிறார். மற்றவர்கள் மன மகிழ உடுக்கை வாசித்த கலைஞர் தனது இறுதி நாள்களை கடும் வறுமையில் கழித்து வரும் சூழ்நிலை உள்ளது.
உடுகை இசைக்கலைஞர் குருசாமியின் நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜின் கவனத்திற்கு கொண்டு சென்றோம், உடுக்கை கலைஞர் குருசாமியின் மனு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், நலிந்த கலைஞர்களுக்கான 3000 ரூபாய் உதவி தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் உடனடியாக அவருக்கு உதவி கிடைக்கும் வகையில் முதியோர் உதவி தொகையாக 1500 ரூபாய் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இதற்கான ஆணை விரைவில் எனவும் ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
தமிழ்நாடு
ஆன்மிகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion