மேலும் அறிய

தமிழக அரசின் கவனக்குறைவால் சென்னையில் வெள்ளம் - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவரும், நெல்லை சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார்

நெல்லை தச்சநல்லூர் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 30 லட்சம் மதிப்பீட்டில் நெல்லை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. அதில் தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவரும், நெல்லை சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன், நெல்லை மாநகராட்சி துணை மேயர் ராஜு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

புதிய கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது,

”சென்னை பெரு வெள்ளம் 4000 கோடி ஒதுக்கீடு செய்ததாக கூறினார்கள். எல்லாம் பணிகள் தயாராக உள்ளது என கூறினார்கள். சென்னை மழை வெள்ளத்தை தமிழக அரசு கவனக்குறைவாக கையாண்டுள்ளது. முழுமையாக செயல்பட்டிருந்தால் வெள்ளத்தை தடுத்திருக்கலாம். மழையை அரசியலாக்க விரும்பவில்லை. 4000 கோடி திட்டத்தில் குறைபாடு இருப்பதாக நான் கருதுகிறேன். தவறு செய்திருந்தால் அமலாக்கத்துறை ராணுவம் நீதிபதி யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அமலாக்கத்துறை மீது திட்டமிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை எடுத்தாக கருதுகிறேன். அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் யார் யார் பேர் பட்டியல் உள்ளது என லஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டு உள்நோக்கத்தோடு செயல்பட்டிருக்கலாம். அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் பெற்றது உண்மையாக இருந்தால் நடவடிக்கை எடுத்ததில் தவறில்லை. பணத்தை அவர்கள் கொண்டு வைத்து ஏன் எடுத்திருக்கக் கூடாது எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் மிரட்டுகிறார்கள் என்றால் நியாயம். ஆனால் இடைத்தரகர்கள்  என்று கூறுவதை சபாநாயகர் விளக்க வேண்டும். இனிமேல் தேர்தல் காலத்தில் கருத்து கணிப்புகள் செல்லாது என்பதை இந்த தேர்தல் களம் காட்டுகிறது. 1998 இல் பிஜேபி கட்சியை சேர்க்க மாட்டார்கள் என கூறினார்கள். ஆனால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் எங்களை சேர்த்துக் கொண்டார்கள். சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மாநிலங்களில் ஜெயிக்க வாய்ப்பில்லை என கூறினார்கள். ஆனால் இப்போது வெற்றி பெற்று இருக்கிறோம். தெலுங்கானா மாநிலத்தின் 15 சதவீதம் வாக்குகள் பெற்றிருக்கிறோம். அடுத்த முறை நிச்சயமாக வெற்றி பெறுவோம். கர்நாடகா மாநிலத்தில் உள்ள 28 நாடாளுமன்ற தொகுதியில் உறுதியாக 25 இடங்களில் பிஜேபி வெற்றி பெறும்” என்றார். 

”நெல்லை தொகுதி மக்கள் அனைவரும் வீட்டில் ஒருவராக என்னை நினைத்து ஆதரவு அளித்து வருகிறார்கள். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக  நீங்கள் எதிர்பார்க்காத வெற்றியை பெறும். இந்தியா கூட்டணி செயல்பாடை இழந்து இருக்கிறது. எதிர்பார்ப்பையும் தளர்ந்து உள்ளது. இனிமேல் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி என்றார். தொடர்ந்து பேசிய அவர், கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றவர்களை அழைத்துப் பேச வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு?அகில இந்திய பாராளுமன்ற தேர்தல் குழு பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து முடிவு செய்வார்கள். பாஜக உடனான கூட்டணியில் தமிழகத்தில் இருந்தவர்கள் இப்பொழுது நாங்கள் இல்லை என்று சொல்வதற்கு காரணம் அழைத்துப் பேச வேண்டும் என்று நோக்கத்திற்காகதான். தமிழ்நாட்டில், தெலுங்கானாவில் பிஜேபி இல்லை. ஆனால் இந்தியாவில் பிஜேபி தான் உள்ளது. மத்தியில் இன்றும் பிஜேபி தான். நாளையும் பிஜேபி தான். எதிர்காலமும் பிஜேபி தான் என தெரிவித்தார்.  கட்சி மாறினாலும் தலைவர்களின் அன்பை மறக்க முடியாது, ஜெயலலிதா அவர்களின் நினைவில் கொண்டு தான் இன்று சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டு இருக்கிறேன். வாழ்ந்தவர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை மறக்க முடியாது. ஜெயலலிதா இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். 41 வயதிலேயே அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார். ஐந்து முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் கொடுத்த அவரை எப்படி என்னால் மறக்க முடியாது. கட்சி மாறினாலும் இன்றளவும் அவருடைய கொள்கை வழிகாட்டுதலின் படியே செயல்பட்டு வருகிறேன்” என தெரிவித்தார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi:அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi:அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Gautam Gambhir: 1 ரன்னில் தோற்ற இந்தியா! இரவு முழுவதும் கதறி அழுத கவுதம் கம்பீர்!
Gautam Gambhir: 1 ரன்னில் தோற்ற இந்தியா! இரவு முழுவதும் கதறி அழுத கவுதம் கம்பீர்!
Embed widget