மேலும் அறிய
Advertisement
கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்னையை கண்டித்து கன்னியாகுமரியில் போராட்டம்
அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டதால் இஸ்லாமிய பெண்கள் உட்பட சுமார் 300 பேர்கள் கைது
சிறுபான்மை பெண்கள் மீது ஆடை ரீதியாக ஒரு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதை கண்டித்தும், இஸ்லாமிய மாணவிகள் பள்ளியில் பர்தா அணிய கூடாது என்று கூறிய கட்டுப்பாடு சட்டங்களை உடனே ரத்து செய்ய வேண்டும் என கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கம் முன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் பதாதைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் - இதில் இஸ்லாமிய பெண்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டதால் இஸ்லாமிய பெண்கள் உட்பட சுமார் 300 பேர்கள் கைது.
கர்நாடக மாநிலத்தில் உருவெடுத்த ஹிஜாப் பிரச்சனை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது மாணவ மாணவிகள் மதியில் பிரிவினையை தூண்ட பல்வேறு சக்திகள் முயன்று வருவதாக பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் இந்நிலையில் இந்த விவகாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய விதிககளை உடனே திரும்ப பெற வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கம் முன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக அரசு கொண்டு வந்துள்ள ஹிஜாபிற்கு எதிராக நடவடிக்கை மற்றும் ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு தனி வகுப்பறை போன்ற பிரிவுகளை பிறப்பித்த சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவது வழக்கம். இந்த சம்பவத்தில் இஸ்லாமியர்களை குறி வைத்து தாக்கபடுவதாக குற்றம் சாட்டிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் சிறுபான்மை பெண்கள் மீது ஆடை ரீதியாக ஒரு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதை கண்டித்தும், இஸ்லாமிய மாணவிகள் பள்ளியில் பர்தா அணிய கூடாது என்று கூறிய கட்டுப்பாடு சட்டங்களை உடனே ரத்து செய்ய வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டத்தின் மூலம் கோஷங்களை எழுப்பி பதாதைகளுடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டதால் இஸ்லாமிய பெண்கள் உட்பட சுமார் 300 பேர்கள் கைது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஆட்டோ
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion