மேலும் அறிய

பொங்கலோ பொங்கல் - குலவையிட்டு பொங்கலை கொண்டாடிய வெளிநாட்டினர்

ஆண்கள் அனைவரும் வேட்டி கட்டி, தோளில் துண்டு போட்டிருந்தனர். அதுபோல பெண்கள் சேலை கட்டி தமிழ் பெண்களாக மாறினர். பொங்கல் பானை நிரம்பி வழிந்த போது பொங்கலோ பொங்கல் என உற்சாகத்துடன் கொண்டாடினர்

தூத்துக்குடி அருகே வெளிநாட்டினர் தமிழர் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்து மண் பானையில் சர்க்கரை பொங்கல் வைத்து, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.


பொங்கலோ பொங்கல் - குலவையிட்டு பொங்கலை கொண்டாடிய வெளிநாட்டினர்

சென்னையை சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் ஆண்டு தோறும் வெளிநாட்டினர் பங்கேற்கும் 'ஆட்டோ ரிக்க்ஷா சேலஞ்ச்' என்ற ஆட்டோ சுற்றுப்பயணத்துக்கு ஏற்பாடு செய்து வருகிறது. அந்த வகையில் 16-வது ஆண்டாக இந்த ஆண்டும் ஆட்டோ ரிக்க்ஷா சேலஞ்ச் சுற்றுலா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா பயணம் கடந்த 28-ம் தேதி சென்னையில் தொடங்கியது. இந்த பயணத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, நியூசிலாந்து, எஸ்டோனியா, நெதர்லாந்து ஆகிய 6 நாடுகளை சேர்ந்த 8 பெண்கள் உள்ளிட்ட 37 பேர் கலந்து கொண்டுள்ளனர்.


பொங்கலோ பொங்கல் - குலவையிட்டு பொங்கலை கொண்டாடிய வெளிநாட்டினர்

வெளிநாட்டினர் 37 பேரும் 17 அணிகளாக பிரிக்கப்பட்டு 17 ஆட்டோக்களில் தங்கள் பயணத்தை சென்னையில் இருந்து 28-ம் தேதி தொடங்கினர். அவர்களே ஆட்டோக்களை ஓட்டி வந்தனர். புதுச்சேரி, தஞ்சாவூர், மதுரை, ராஜபாளையம் வழியாக அவர்கள் தூத்துக்குடி வந்து சேர்ந்தனர். அவர்கள் வரும்வழியில் எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபம், தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை  பார்வையிட்டனர்.


பொங்கலோ பொங்கல் - குலவையிட்டு பொங்கலை கொண்டாடிய வெளிநாட்டினர்

பின்னர், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அனைவரும் தங்கள் ஆட்டோக்களில் தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகேயுள்ள தனியார் பண்ணைத் தோட்டத்துக்கு வந்து சேர்ந்தனர். அங்கு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். வெளிநாட்டினர் அனைவரும் இணைந்து 10 பானைகளில் பொங்கல் வைத்தனர். அவர்களுக்கு பொங்கல் பாணை, பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பொருள்கள் கொடுக்கப்பட்டு, அவர்களே அடுப்பு மூட்டி தனித்தனியாக பொங்கல் வைத்தனர்.


பொங்கலோ பொங்கல் - குலவையிட்டு பொங்கலை கொண்டாடிய வெளிநாட்டினர்

வெளிநாட்டினர் அனைவரும் தமிழர் கலாச்சாரத்துக்கு மாறியிருந்தனர். ஆண்கள் அனைவரும் வேட்டி கட்டி, தோளில் துண்டு போட்டிருந்தனர். அதுபோல  பெண்கள் சேலை கட்டி தமிழ் பெண்களாக மாறினர். பொங்கல் பானை நிரம்பி வழிந்த போது பொங்கலோ, பொங்கல் என உற்சாக குரலெழுப்பி, குலவை சப்தம் கொடுத்து அசத்தினர். பின்னர் தாங்கள் சமைத்த பொங்கலை உண்டு மகிழந்தனர்.



பொங்கலோ பொங்கல் - குலவையிட்டு பொங்கலை கொண்டாடிய வெளிநாட்டினர்

வெளிநாட்டினரின் ஆட்டம், பாட்டத்துடன் அந்த பண்ணை தோட்டம் களைகட்டியிருந்தது. இந்த கொண்டாட்டத்தை பார்க்க உள்ளூர் மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டிருந்தனர். தொடர்ந்து தங்கள் ஆட்டோக்களில் மணப்பாடு உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர். மற்றவர்கள் தோட்டத்திலேயே பொழுதை கழித்தனர்.  தூத்துக்குடியில் தங்கும் வெளிநாட்டு சுற்றுலா குழுவினர் நாளை கன்னியாகுமரி புறப்பட்டு செல்கின்றனர். ஜனவரி 6 ஆம் தேதி  கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ஆட்டோ சுற்றுலா குழுவினர்,  அங்கு தங்களது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, தங்கள் நாடுகளுக்கு விமானங்கள் மூலம் திரும்புகின்றனர்.


பொங்கலோ பொங்கல் - குலவையிட்டு பொங்கலை கொண்டாடிய வெளிநாட்டினர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sri Lanka Election: இலங்கை அதிபர் தேர்தல் - முன்னிலையில் அனுரா குமார திசநாயகே - யார் இந்த சீன ஆதரவாளர், இந்தியாவிற்கு?
Sri Lanka Election: இலங்கை அதிபர் தேர்தல் - முன்னிலையில் அனுரா குமார திசநாயகே - யார் இந்த சீன ஆதரவாளர், இந்தியாவிற்கு?
Modi Met Biden: ”இந்த முறையும் மிஸ் ஆகல” பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் பைடன் சந்திப்பு - பேசியது என்ன?
Modi Met Biden: ”இந்த முறையும் மிஸ் ஆகல” பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் பைடன் சந்திப்பு - பேசியது என்ன?
Breaking News LIVE: இலங்கை அதிபர் தேர்தல்; திசநாயகே தொடர்ந்து முன்னிலை
Breaking News LIVE: இலங்கை அதிபர் தேர்தல்; திசநாயகே தொடர்ந்து முன்னிலை
ABP EXCLUSIVE: இது தான் மாநாடு ஸ்கெட்ச்... போலீஸ் நிபந்தனைகளுக்கு தவெக  அளித்த பதில்!
ABP EXCLUSIVE: இது தான் மாநாடு ஸ்கெட்ச்... போலீஸ் நிபந்தனைகளுக்கு தவெக அளித்த பதில்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Suchitra vs Vairamuthu |’’நீ என்ன PSYCHIATRIST-ஆ?நோபல் பரிசு கொடுக்கலாமா?’’கடுப்பான சுசித்ராTirupati Laddu History | Mysuru Palace Elephant Angry | Barriers-யை உடைத்து எறிந்த யானை மைசூரில் அலறியோடிய மக்கள் பதறிய பாகன்Rahul on laddu | லட்டில் பன்றி கொழுப்பா? கொதித்தெழுந்த  ராகுல்! ஜெகன், நாயுடுவுக்கு எச்சரிக்கை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sri Lanka Election: இலங்கை அதிபர் தேர்தல் - முன்னிலையில் அனுரா குமார திசநாயகே - யார் இந்த சீன ஆதரவாளர், இந்தியாவிற்கு?
Sri Lanka Election: இலங்கை அதிபர் தேர்தல் - முன்னிலையில் அனுரா குமார திசநாயகே - யார் இந்த சீன ஆதரவாளர், இந்தியாவிற்கு?
Modi Met Biden: ”இந்த முறையும் மிஸ் ஆகல” பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் பைடன் சந்திப்பு - பேசியது என்ன?
Modi Met Biden: ”இந்த முறையும் மிஸ் ஆகல” பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் பைடன் சந்திப்பு - பேசியது என்ன?
Breaking News LIVE: இலங்கை அதிபர் தேர்தல்; திசநாயகே தொடர்ந்து முன்னிலை
Breaking News LIVE: இலங்கை அதிபர் தேர்தல்; திசநாயகே தொடர்ந்து முன்னிலை
ABP EXCLUSIVE: இது தான் மாநாடு ஸ்கெட்ச்... போலீஸ் நிபந்தனைகளுக்கு தவெக  அளித்த பதில்!
ABP EXCLUSIVE: இது தான் மாநாடு ஸ்கெட்ச்... போலீஸ் நிபந்தனைகளுக்கு தவெக அளித்த பதில்!
வழிப்பறி செய்து காதல் மனைவியுடன் உல்லாசமாக இருந்த புதுமாப்பிள்ளை: தட்டித் தூக்கிய போலீஸ்!
வழிப்பறி செய்து காதல் மனைவியுடன் உல்லாசமாக இருந்த புதுமாப்பிள்ளை: தட்டித் தூக்கிய போலீஸ்!
Rasi Palan Today, Sept 22: துலாமுக்கு எதிர்பாராத செலவு, விருச்சிகத்துக்கு சுபகாரிய பலன்: உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan: துலாமுக்கு எதிர்பாராத செலவுகள், விருச்சிகத்துக்கு சுபகாரிய பலன்கள்: உங்கள் ராசிக்கான பலன்
Nalla Neram Today Sep 22: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
காமராஜர் கொடுத்த கல்வி, மதிய உணவு! மயிலாடுதுறை எம்பி.சுதா பகிர்ந்த நெகிழ்ச்சி
காமராஜர் கொடுத்த கல்வி, மதிய உணவு! மயிலாடுதுறை எம்பி.சுதா பகிர்ந்த நெகிழ்ச்சி
Embed widget