மேலும் அறிய

டவுண் ஆர்ச்சில் இருந்து குறுக்குத்துறையை இணைக்கும் சாலைக்கு நெல்லை கண்ணன் பெயர்; மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

நெல்லை கண்ணன் அவர்களின் பெயரை டவுண் ஆர்ச்சில் இருந்து குறுக்குத்துறையை இணைக்கும் சாலைக்கு  பெயரிடுவது குறித்த தீர்மானம் ஒரு மனதாக இன்று  நிறைவேற்றப்பட்டது.

நெல்லை டவுணைச் சேர்ந்தவர் நெல்லை கண்ணன். பட்டிமன்ற பேச்சாளர், சொற்பொழிவாளர், இலக்கியவாதி, அரசியல் பேச்சாளர் என நெல்லை கண்ணன் பன்முக திறமை கொண்டிருந்தார்.  இவர் தனது மேடைப்பேச்சுகளில் அதிரடியாக பேசி பல சர்ச்சைகளில் சிக்கியவர். குறிப்பாக பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து பொது மேடையில் அவதூறு பேசியதாக கூறி நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டிருந்தார். மேலும் நெல்லை உள்ளூர் வழக்காடு மொழியில் பேசும் இவரது பேச்சு பலரும் ரசிக்கும் வகையில் இருக்கும். காமராஜர் மீது அதிக பற்றும், பாசமும் கொண்டவர். எனவே அனைத்து மேடைகளிலும் காமராஜரை பற்றி பெருமையாக பேசுவார். குறுக்குத்துறை ரகசியங்கள், வடிவுடை காந்திமதியே போன்ற நூல்களை எழுதியுள்ளார். குறிப்பாக இவர் எழுதிய குறுக்குத்துறை ரகசியங்கள் என்ற நூல் மிகவும் பிரபலமானது. நெல்லை கண்ணன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

இந்த நிலையில் உயிரிழந்த நெல்லை கண்ணனின் நினைவாக நெல்லை டவுண் ஆர்ச்சில் இருந்து குறுக்குத்துறை சாலையில் இணையும் தென் வடல் சாலைக்கு நெல்லை கண்ணனின் பெயரை சூட்ட நெல்லை மாநகராட்சி முடிவு செய்தது. இதுகுறித்து கடந்த 27 ஆம் தேதி  நடைபெற்ற நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற இருந்தனர். அதே சமயம் நெல்லை கண்ணன் பல்வேறு மேடைகளில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். குறிப்பாக 1996ல் சென்னை சேப்பாக்கம் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் கலைஞர் கருணாநிதியை எதிர்த்து நெல்லை கண்ணன் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். எனவே திமுக ஆட்சியில் எப்படி நெல்லை கண்ணனுக்கு அரசு மரியாதை கொடுக்கலாம் என ஆளுங்கட்சி நிர்வாகிகள் சிலர் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நிறைவேற்ற இருந்த தீர்மானம் திமுக கவுன்சிலர் சங்கர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டது. குறிப்பாக நமது தலைவர் கருணாநிதியை நெல்லை கண்ணன் திட்டினார். கலைஞரின் போஸ்டரில் சானம் பூசியவர்  நெல்லை கண்ணன். அப்படி இருக்கும்போது எப்படி அவர் பெயரை சாலைக்கு சூட்டலாம் என்று எதிர்ப்பு தெரிவித்தார்

முன்னதாக நெல்லை மாநகர் பகுதியில் உள்ள ஒரு சாலைக்கு அவர் பெயர் சூட்ட முடிவு செய்து தமிழக அரசு முதன்மை செயலாளர் மூலம் மாநகராட்சிக்கு அறிவுறுத்தி இருந்தது.  இந்த நிலையில் நெல்லைக்கண் பெயரை சாலைக்கு வைப்பதற்கான சிறப்பு கூட்டம் இன்று மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி, துணைமேயர் ராஜூ  மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நெல்லை கண்ணன் அவர்களின் பெயரை டவுண் ஆர்ச்சில் இருந்து குறுக்குத்துறையை இணைக்கும் சாலைக்கு  பெயரிடுவது குறித்த தீர்மானம் ஒரு மனதாக  நிறைவேற்றப்பட்டது. அவசரக் கூட்டத்தில் இந்த அஒரே ஒரு தீர்மானம் மட்டும் நிறைவேற்றியதுடன் கூட்டம் முடிவு பெற்றதாக மேயர் அறிவித்து சென்றார். 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
Embed widget