மேலும் அறிய

Tamil Nadu Weather Update: நெல்லையில் தொடர்ந்த கனமழை: அணைகளில் நீர் பெருக்கு, சுற்றுலா பயணிகளுக்கு கடும் எச்சரிக்கை

சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 115.48 அடியாக இருந்தது. ஒரே நாளில் சுமார் 3 அடி உயர்ந்து 118.83 அடியாக உள்ளது.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மோன்தா புயலாக நாளை உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தற்போது வலுவடைந்துள்ளது. இந்த நிலையில், நாளை உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட மோன்தா புயல் இன்றே உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதாவது, சென்னையில் இருந்து தற்போது 790 கி.மீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. 

Tamil Nadu Weather Update: நெல்லையில் தொடர்ந்த கனமழை: அணைகளில் நீர் பெருக்கு, சுற்றுலா பயணிகளுக்கு கடும் எச்சரிக்கை

இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை எதிரொலி இருந்து வரும் நிலையில், நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழை  பரவலாக பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான பாபநாசம், மணிமுத்தாறு, மாஞ்சோலை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அணை நீர்பிடிப்பு பகுதியில் நேற்று 17 மில்லி மீட்டர் மழை பதிவானது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 25 கனஅடி நீர் வருகிறது. நேற்று முன்தினம் 101.80 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது ஒரே நாளில் சுமார் 4 அடி உயர்ந்து 105.65 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 115.48 அடியாக இருந்தது. ஒரே நாளில் சுமார் 3 அடி உயர்ந்து 118.83 அடியாக உள்ளது.

மாஞ்சோலை பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 1,341 கனஅடி தண்ணீர் வந்தது. அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 98.76 அடியாக இருந்தது. நேற்று ஒரே நாளில் சுமார் 2 அடி உயர்ந்து 100 அடியை எட்டியது. களக்காடு, சேரன்மாதேவி, அம்பை, நாங்குநேரி சுற்றுவட்டார பகுதிகளில் மழை குறைந்துள்ளது. எனினும் திருக்குறுங்குடி நம்பி கோவில், களக்காடு தலையணை செல்ல விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. மணிமுத்தாறு அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரிப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை நீடிக்கிறது. கொடுமுடியாறு அணை நிரம்பிய நிலையில் நேற்று அங்கு 44 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Tamil Nadu Weather Update: நெல்லையில் தொடர்ந்த கனமழை: அணைகளில் நீர் பெருக்கு, சுற்றுலா பயணிகளுக்கு கடும் எச்சரிக்கை

அணைக்கு வரும் 320 கன அடி தண்ணீரும் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. கடனாநிதி 58 அடியாகவும், ராமநதி 69 அடியாகவும், கருப்பாநதி 58 அடியாகவும், அடவிநயினார் 127 அடியாகவும் நீர்மட்டம் உள்ளது.  இதைப்போல் 36.10 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை நிரம்பி வழிகிறது. இதனால் அணைக்கு வருகின்ற 120 கன அடி தண்ணீரும் அப்படியே திறந்து விடப்படுகிறது. தொடர் மழையால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு, காக்காச்சி பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கனமழை பொழிந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் ஊத்தில் 12 சென்டி மீட்டர், நாலுமுக்கில் 13 செ.மீ., காக்காச்சியில் 10 செ.மீ., மாஞ்சோலையில் 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL
Saudi Bus Accident | 42 இந்தியர்கள் பலி!விபரீதமாய் முடிந்த ஹஜ் பயணம்சவுதி அரேபியாவில் பயங்கரம்
Vaithiyalingam joins ADMK| ”வாங்க வைத்திலிங்கம்”EPS கொடுத்த அசைன்மெண்ட்அதிமுகவின் டெல்டா கணக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
Airplane: விமானங்கள் இரவில் சிவப்பு, மஞ்சள், பச்சை விளக்குகளில் ஒளிர்வது ஏன்? காரணம் தெரியுமா?
Airplane: விமானங்கள் இரவில் சிவப்பு, மஞ்சள், பச்சை விளக்குகளில் ஒளிர்வது ஏன்? காரணம் தெரியுமா?
RE Shotgun 650 : ஷாட்கன் 650 பைக் வாங்க திட்டமா? இந்த விஷயங்கள் தெரியாமா முடிவு பண்ணாதிங்க - டீடெய்ல் லிஸ்ட்
RE Shotgun 650 : ஷாட்கன் 650 பைக் வாங்க திட்டமா? இந்த விஷயங்கள் தெரியாமா முடிவு பண்ணாதிங்க - டீடெய்ல் லிஸ்ட்
Salary Hike: குஷியோ குஷி.! ரூ.12 ஆயிரத்திலிருந்து 18ஆயிரமாக ஊதியம் அதிகரிப்பு.! ஊழியர்கள் கொண்டாட்டம்
குஷியோ குஷி.. இரண்டு மடங்காக உயர்ந்த ஊதியம் .! ஊழியர்கள் கொண்டாட்டம்- யாருக்கெல்லாம் தெரியுமா.?
மதுரைக்கும், கோவைக்கும்
மதுரைக்கும், கோவைக்கும் "NO METRO"... பாஜகவின் பழிவாங்கும் சதியை முறியடிப்போம்- சீறும் மு.க.ஸ்டாலின்
Embed widget