மேலும் அறிய

தோல்விகளை கண்டு துவண்டு விடாதீர்கள் நம்பிக்கையோடு முன்னேறுங்கள் - கனிமொழி எம்.பி.,

எல்லோராலும் சாதிக்க முடியும். முடியாது என்ற எண்ணத்தை தூக்கி எறிய வேண்டும். முடியாது என கூறுவோரை பக்கத்தில் வைக்காதீர்கள் - அமைச்சர் கீதாஜீவன்

தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 'கல்லூரிக் கனவு' எனும் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி தூத்துக்குடியில் நேற்று நடைபெற்றது. தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பேசும்போது, மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி சிறப்பான திட்டமாகும். வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற திட்டம் கிடையாது. வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய நமது பின்புலம் முக்கியம் அல்ல. அதற்கு நானே எடுத்துக் காட்டு. சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த நான் நாட்டின் மிக உன்னதமான நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு வந்துள்ளேன். அரசு பள்ளியில் படிப்பது, தமிழ் மொழியில் படிப்பது போன்றவை நமது உயர்வுக்கு எந்த தடையும் இல்லை. தளராத மனமும், கடின உழைப்பும் தான் முக்கியம்.


தோல்விகளை கண்டு துவண்டு விடாதீர்கள் நம்பிக்கையோடு முன்னேறுங்கள் - கனிமொழி எம்.பி.,

என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையை ஒருபோதும் இழந்துவிடக்கூடாது. உங்களது திறமை மீது நம்பிக்கை கொள்ளுங்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முடிவெடுக்க தைரியமாக அனுமதிக்க வேண்டும். தாழ்வு மனப்பான்மையை முதலில் விட்டுவிட வேண்டும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கும். முன்மாதிரியாக யாரையும் எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு நீங்கள் தான் முன்மாதிரி. என்ன படிக்க வேண்டும் என்பதை நீங்களே தேர்வு செய்யுங்கள். யாரையும் தேர்வு செய்ய அனுமதிக்காதீர்கள். ஒரே எண்ணம் கொண்டவர்களாக இருக்காதீர்கள். பொறியியல் படித்தால் தான் இஸ்ரோவில் வேலைக்கு வரமுடியும் என நினைக்காதீர்கள். என்ன படித்தாலும் இஸ்ரோவில் வேலை இருக்கு. நீங்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலையை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும். புதுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.


தோல்விகளை கண்டு துவண்டு விடாதீர்கள் நம்பிக்கையோடு முன்னேறுங்கள் - கனிமொழி எம்.பி.,

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி பேசும்போது, கல்லூரி கனவு என்பது உங்களுடைய கனவுகளாக மட்டுமே இருக்க வேண்டும். அது வேறு யாருடைய கனவாகவும் இருக்கக்கூடாது. இன்னொருவருடைய ஆசைகளை நாம் நிறைவேற்ற முடியாது. நம்முடைய திறமை, ஆர்வம் எதில் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கு, ஆர்வம் இருக்கு. ஒவ்வொருவருக்கும் தனித்தனி இயல்பு இருக்கிறது. அதற்கு எதிராக எதையும் திணிக்க முடியாது. பள்ளி படிப்பை முடித்த உங்கள் முன்பு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. பல துறைகள் உள்ளன. எல்லா துறைகளிலும் வாய்ப்புகள் உள்ளன. உங்கள் திறமைக்கு ஏற்ற வாய்ப்பு நிச்சயமாக அதில் இருக்கிறது. ஆனால் அதற்கான சிறிய தேடல் அவசியம். தோல்விகளை கண்டு துவண்டுவிடாமல் நம்பிக்கையோடு முன்னேற வேண்டும் என்றார்.


தோல்விகளை கண்டு துவண்டு விடாதீர்கள் நம்பிக்கையோடு முன்னேறுங்கள் - கனிமொழி எம்.பி.,

அமைச்சர் கீதாஜீவன் பேசும்போது, மாணவர்கள் என்னால் முடியும் என முதலில் நம்ப வேண்டும். இலக்குகளை நிர்ணயித்து அதனை நோக்கி தன்னம்பிக்கையோடு முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும். எல்லோருக்கும் திறமைகள் இருக்கின்றன. எனவே, எல்லோராலும் சாதிக்க முடியும். முடியாது என்ற எண்ணத்தை தூக்கி எறிய வேண்டும். முடியாது என கூறுவோரை பக்கத்தில் வைக்காதீர்கள். எதையும் ஈடுபாட்டோடு தன்னம்பிக்கையோடு செய்யுங்கள் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்றார் .

நிகழ்ச்சியில் ஐஎப்எஸ் தேர்வில் வெற்றிபெற்ற தேசிய அளவில் 57-வது ரேங்க் பெற்ற தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வனவராக பணியாற்றி வரும் சுப்புராஜை பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.


தோல்விகளை கண்டு துவண்டு விடாதீர்கள் நம்பிக்கையோடு முன்னேறுங்கள் - கனிமொழி எம்.பி.,

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி, தமிழகத்தின் தனித்துவத்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்தும் வகையில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், ஸ்பிக் நிறுவனமும் இணைந்து நெய்தல் தூத்துக்குடி கலை விழா' என்ற விழாவை நடத்துகிறது. இந்த விழா அடுத்த மாதம் (ஜூலை) 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 4 நாட்கள் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மைதானத்தில் வைத்து நடக்கிறது. விழாவை முன்னிட்டு தினமும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை கலை விழா நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 300 கிராமிய கலைஞர்கள் கலந்து கொண்டு பல்வேறு குழுக்களாக கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இந்த கலை விழாவில் உணவுத்திருவிழாவும் நடத்தப்படுகிறது. இதற்காக சுமார் 20 உணவு சார்ந்த அரங்குகள் அமைக்கப்படுகின்றன. மேலும், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கைவினை கலைஞர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் வகையிலான அரங்குகளும் அமைக்கப்படுகின்றன. இதனை பொதுமக்கள் கண்டு ரசிக்கலாம் என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
IND Vs SA 3rd T20: இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
Hero Vida Dirt.E K3: என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
New Kia Seltos vs Tata Sierra: புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
Embed widget