மேலும் அறிய

நெல்லையில் பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் தொடக்கம் - தாமிரபரணி படுகையில் 2 நாட்கள் நடைபெறுகிறது

’’கடந்த ஆண்டு கணக்கெடுப்பை விட  இந்த ஆண்டு குளங்கள் பெரும்பாலும் பெருகி உள்ளதால் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு’’

நெல்லை, தென்காசி மற்றும்  தூத்துக்குடி மாவட்டத்தில் நீராதாரமாக திகழ்ந்து வரும் தாமிரபரணி நதியின் மூலம் பயன்பெறும் பாசன குளங்களில் இனப்பெருக்கத்திற்காக வந்திருக்கும் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. அகத்திய மலை சமூகம் சார்ந்த சூழலியல் அமைப்பு  மற்றும் வனத்துறை, நம் தாமிரபரணி இயக்கம்  சார்பில் நெல்லை, தென்காசி மற்றும்  தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதி கால்வாய்  பாசன குளங்களில் வசிக்கும் பறவைகள் கணக்கெடுப்பு இன்று முதல் தொடங்கி 2  நாட்கள் நடைபெறுகிறது.

நெல்லையில் பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் தொடக்கம் - தாமிரபரணி படுகையில் 2 நாட்கள் நடைபெறுகிறது

12 வது தாமிரபரணி நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் தன்னார்வலர்கள், பறவை ஆர்வலர்கள், பறவை ஆராய்ச்சியாளர்கள் என 90 பேர் பங்கேற்று 10 குழுக்களாக பிரிந்து பறவைகளை இனம் மற்றும் ரகம் வாரியாக  அவைகளை நேரில் காண்பது, அவற்றின் எச்சம், கால்தடம், கூடுகள், ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கெடுத்து வருகின்றனர். அதன்படி முதலாவது குளமாக நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள வேய்ந்தன் குளத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டு பறவைகள் தொலைநோக்கி உள்ளிட்ட நவீன கருவிகள் மூலம் கண்டு  கணக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து கங்கைகொண்டான் பெரியகுளம் , ராஜவல்லிபுரம் குளம், நயினார்குளம், மானூர் பெரியகுளம், அரியநாயகிபுரம் குளம், திருப்புடைமருதூர் உள்ளிட்ட நெல்லை மாவட்டங்களில் 14 குளங்களில் இன்றும், தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் நாளையும் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.

நெல்லையில் பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் தொடக்கம் - தாமிரபரணி படுகையில் 2 நாட்கள் நடைபெறுகிறது

இதுகுறித்து தாமிரபரணி நீர்வாழ் கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் கூறுகையில், 12 வது தாமிரபரணி பறவைகள் கணக்கெடுப்பு இன்று துவங்கி உள்ளது, 10 குழுக்களாக  பிரிந்து 30 குளங்களில் இன்று கணக்கெடுப்பு துவங்கி உள்ளது, நாளை 30 குளங்களில் நடைபெற உள்ளது, வடகிழக்கு பருவமழை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிக அளவில் பெய்துள்ளதால் தாமிரபரணி ஆற்றுப்படுகையை ஒட்டிய பெரும்பாலான குளங்கள் நிரம்பி உள்ளன. கடந்த ஆண்டு கணக்கெடுப்பை விட  இந்த ஆண்டு குளங்கள் பெரும்பாலும் பெருகி உள்ளதால் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதில் குறிப்பாக நாமக்கோழி, மூக்கன் தாரா, சிவப்பு ஆள்காட்டிக் குருவி, ஜம்பு நாரை, கூழைக்கடா, பவளக்கால் உள்ளான் ஆகிய 36 வகை பறவைகள் தாமிரபரணி பாசன குளங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், 60  குளங்களில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார். கடந்த வருடம் 25 ஆயிரம் பறவைகள் பார்க்க முடிந்தது,  மேலும் அனைத்து குளங்களிலும் தண்ணீர் அதிகமாக இருப்பதால் பறவைகள் ஓரிடம் மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் பரவி காணப்படுவதால் கூட்டமாக காணப்படுவது குறைவு எனவும் தெரிவித்தனர்.      

தலைப்பு செய்திகள்

CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Embed widget