மேலும் அறிய

சிலை கடத்தல் வழக்கில் சுபாஷ் சந்திரகபூரின் வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது - ஐஜி தினகரன்

அமெரிக்காவில் 37 சிலைகளும், சிங்கப்பூரில் 15 சிலைகளும்  சில சிலைகள் ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ளது. இதனை மீட்டு தமிழகத்திற்கு  கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி தினகரன் நேற்று நெல்லை வந்தார். இங்கு மாநகர காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் வைத்து நெல்லை சரக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையுடன் மாவட்டத்தில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.  பின்னர் நெல்லையின்  வரலாற்று பழமை வாய்ந்த நெல்லையப்பர் கோயிலில் உள்ள உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில்  ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்கு செய்யப்பட்டுள்ள சிசிடிவி பாதுகாப்பு மற்றும் காவலர்கள் பாதுகாப்பு பணி குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து சிலைகளை கூடுதல் கவனம் செலுத்தி பாதுகாப்பது குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த  ஐ.ஜி.தினகரன் கூறுகையில்,


சிலை கடத்தல் வழக்கில் சுபாஷ் சந்திரகபூரின் வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது - ஐஜி தினகரன்

“பொருளாதார குற்றப்பிரிவில் இருந்து பிரிக்கப்பட்டு தற்போது சிலை கடத்தல் பிரிவு தனியாக செயல்பட்டு வருகிறது. காவலர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . இந்த ஆண்டு இதுவரை 40 சிலை கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 43 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 199 சிலைகள் மற்றும் கலை அலங்கார பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  மேலும் வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியங்களில் 60 க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளது. அமெரிக்காவில் 37 சிலைகளும், சிங்கப்பூரில் 15 சிலைகளும்  சில சிலைகள் ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ளது. இதனை மீட்டு தமிழகத்திற்கு  கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில்கள் தோறும் கண்காணிப்பு கேமரா பொருத்த வலியுறுத்தப்பட்டு உள்ளது. சிலை கடத்தல் முக்கிய குற்றவாளியான சுபாஷ் சந்திர கபூரின் வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.  இன்னும் இரண்டு வாய்தாக்களில் வழக்குகள் முடிவுக்கு வருவதற்கான  இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது” என தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

தலைப்பு செய்திகள்

திருநெல்வேலி - திருச்செந்தூர் பகுதியில் ரயில்சேவை மாபெரும் வளர்ச்சிப் பணிகள்: பயணிகள் மகிழ்ச்சி !
திருநெல்வேலி - திருச்செந்தூர் பகுதியில் ரயில்சேவை மாபெரும் வளர்ச்சிப் பணிகள்: பயணிகள் மகிழ்ச்சி !
பானைகள் முதல் பகடைக்காய் வரை... சங்ககால வாழ்வின் மர்மங்கள் விலகும் மலையடிப்பட்டி அகழாய்வு !
பானைகள் முதல் பகடைக்காய் வரை... சங்ககால வாழ்வின் மர்மங்கள் விலகும் மலையடிப்பட்டி அகழாய்வு !
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
திருநெல்வேலி, தென்காசியில் நாளை மின்தடை! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
திருநெல்வேலி, தென்காசியில் நாளை மின்தடை! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
Embed widget