Crime: நெல்லை பெண்ணிற்கு ஆபாச வீடியோ கால் செய்த இளைஞர்..! பெரம்பலூரில் கைது செய்த போலீசார்..!
பொதுமக்கள் சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம் அல்லது 1930 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்..
நெல்லை மாவட்டம் சுத்தமல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் நெல்லை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அப்புகாரில் தனது WhatsApp எண்ணிற்கு அடையாளம் தெரியாத நபர் தவறான நோக்கத்தில் ஆபாசமான முறையில் video call செய்வதாக புகார் அளித்திருந்தார். இப்புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் சைபர் கிரைம் காவல் துறையினருக்கு உத்திரவிட்டார்.
அவர் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜு, காவல் ஆய்வாளர் ரமா தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்டது பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் சுப்பிரமணியர் கோவில் தெருவை சேர்ந்த பாண்டுரங்கன் (30), என்பது தெரிய வந்தது. மேலும் இவர் வாட்ஸ் அப்பில் video call செய்து ஆபாசமாக நடந்து கொண்டது தெரியவந்தது. உடனடியாக காவல் ஆய்வாளர் ரமா மற்றும் உதவி ஆய்வாளர் இராஜரத்தினம் தலைமையிலான காவல்துறையினர் விரைந்து சென்று பெரம்பலூரில் பாண்டுரங்கனை கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்கள் சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம் அல்லது 1930 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் நெல்லை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்