மேலும் அறிய

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேருக்கு இன்று தண்டனை? எதிர்பார்ப்பில் நீதிமன்றம்

இந்த வழக்கு விசாரணையின் போது 9 பேருக்கும் உச்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை அல்லது சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு - ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேருக்கு இன்று தண்டனை விவரங்களை அறிவிக்கிறார் நீதிபதி முத்துகுமரன்.

சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ்
 
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதி வணிகர்களான  தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் கடந்த 2020 ஜூன் 19 ல் காவல்துறை விசாரணைக்காக அழைத்து சென்ற சாத்தான்குளம் காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த வழக்கு கொலை வழக்காக சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் 5 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், காவலர்களான முருகன், சாமத்துரை, முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து ஆகிய 9 பேரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் 5 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.
 
கொலை வழக்கில் 9 காவலர்களும் குற்றவாளிகளாக கருதப்படுவதாக தீர்ப்பு வாசிப்பு
 
இந்த கொலை வழக்கில் 9 காவலர்களும் குற்றவாளிகளாக கருதப்படுவதாக கடந்த 23 ஆம் தேதி மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முத்துகுமரன் தீர்ப்பு வாசித்தார். குற்றவாளிகளான 9 பேருக்கும் தண்டனை அளிப்பது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளன. இந்நிலையில் இன்று காலை ஐந்தரை ஆண்டுகளாக விசாரணை நடைபெற்றுவந்த சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை இன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முத்துகுமரன் அறிவிக்கவுள்ளார். சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படவுள்ள நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
9 பேருக்கும் உச்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை
 
இந்த வழக்கு விசாரணையின் போது 9 பேருக்கும் உச்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை அல்லது சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என சிபிஐ தரப்பிலும், ஜெயராஜ் குடும்பத்தினர் தரப்பில் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் நீதிபதியிடம் முறையிட்டதும், குற்றவாளிகளில் தரப்பில் முறையிட்டபோது திட்டமிட்டு உயிரிழப்பு ஏற்படவில்லை எனவே குறைந்தபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என முறையிட்டிருந்தனர். இந்நிலையில் 9 பேருக்கு இன்று தண்டனை விவரங்களை அறிவிக்கிறார் நீதிபதி முத்துகுமரன்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
Diwali Special Train: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு! முழு விவரம்!
Diwali Special Train: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு! முழு விவரம்!
Diwali Special Bus: ஊருக்கு போக ரெடியா! தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு என்ன?
Diwali Special Bus: ஊருக்கு போக ரெடியா! தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு என்ன?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
Diwali Special Train: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு! முழு விவரம்!
Diwali Special Train: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு! முழு விவரம்!
Diwali Special Bus: ஊருக்கு போக ரெடியா! தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு என்ன?
Diwali Special Bus: ஊருக்கு போக ரெடியா! தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு என்ன?
பவர் Play : ‘சுற்றுலாத்துறையை மொட்டை அடித்த அதிகாரிகள்’ நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு..?
‘சுற்றுலாத்துறையை மொட்டை அடித்த அதிகாரிகள்’ நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு..?
TNPSC Group-4: இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க.. TNPSC குரூப்-4 தேர்வு குறித்து முக்கிய அப்டேட் இதோ!
TNPSC Group-4: இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க.. TNPSC குரூப்-4 தேர்வு குறித்து முக்கிய அப்டேட் இதோ!
பழனி முருகன் கோயிலில் அதிரடி மாற்றம்! தங்க ரதம் கட்டணம் முதல் பிரசாதம் விலை வரை உயர்வு!
பழனி முருகன் கோயிலில் அதிரடி மாற்றம்! தங்க ரதம் கட்டணம் முதல் பிரசாதம் விலை வரை உயர்வு!
Minister CTR Nirmalkumar : 'தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து திமுக சதி’ அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி..!
Minister CTR Nirmalkumar : 'தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து திமுக சதி’ அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி..!
Embed widget