மேலும் அறிய

சமூக பொறுப்பு நிதி நிகழ்ச்சியிலும் அரசியல் - பேரிடர் குறித்து இருவேறு அரசியல் கருத்துகள்- கனிமொழி vs நாராயணன் திருப்பதி

தேசிய பேரிடர் சுனாமி காலத்தில் கூட அறிவிக்கப்படவில்லை.. ஆனால் அதற்கு நிகராக வயநாடு சம்பவம் உறுதியாக ஒரு பேரிடராக ஏற்றுக் கொள்ளப்பட்டு உடனடியாக மத்திய அரசாங்கம் தேசிய நிவாரண படகுகளை அனுப்பி இருக்கிறது.

வயநாடு மழைவெள்ள பாதிப்பை ஒன்றிய அரசு தேசிய போரிடராக அறிவிக்க தயாராக இல்லை.. காரணம் அவர்களே தேசிய பேரிடராக தான் இருக்கின்றார்கள் - கனிமொழி

தேசிய பேரிடர் அறிவித்தால் என்ன ஏது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்-நாராயணன் திருப்பதி.

சமூக பொறுப்பு நிதி நிகழ்ச்சியிலும் அரசியல் - பேரிடர் குறித்து இருவேறு அரசியல் கருத்துகள்- கனிமொழி vs நாராயணன் திருப்பதி

ஆர்இசி லிமிடெட் சமூக பொறுப்பு நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம்  தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.. இந்த விழாவில், தூத்துக்குடி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, ஆர்இசி லிமிடெட் இயக்குனர் திருப்பதி நாராயணன், அமைச்சர் கீதாஜீவன், ஆட்சியர் லட்சுமிபதி, மேயர் ஜெகன்பெரியசாமி, சண்முகையா எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்களை வழங்கி முகாமினை தொடங்கி வைத்தனர். பின்னர், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

சமூக பொறுப்பு நிதி நிகழ்ச்சியிலும் அரசியல் - பேரிடர் குறித்து இருவேறு அரசியல் கருத்துகள்- கனிமொழி vs நாராயணன் திருப்பதி

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, மத்திய அரசு நிதி அளிக்கவில்லை என்று ஆர்ப்பாட்டம் செய்தீர்கள் அதன் பின்பும் மத்திய அரசு நிதி ஒதுக்கியதா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு? நாடாளுமன்றத்தில் அது குறித்து பேசுகின்றேன் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கின்றேன்.. தமிழ்நாட்டில் வெள்ளம் வந்த போது கூட ஏழு நாட்களுக்கு முன்னாடி தெரிவித்தோம், என்று சொன்னார்கள் ஆனால் உண்மை அது அல்ல, முதலமைச்சரும் தெளிவுபடுத்தி இருக்கின்றார்.

சமூக பொறுப்பு நிதி நிகழ்ச்சியிலும் அரசியல் - பேரிடர் குறித்து இருவேறு அரசியல் கருத்துகள்- கனிமொழி vs நாராயணன் திருப்பதி

மத்திய அரசு தமிழக அரசுக்கு தர வேண்டிய நிதியை அரசியல் காரணங்களுக்காக எவ்வளவு நாள் இழுத்து அடிக்க வேண்டுமோ அவ்வளவு நாள் இழுத்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மத்திய அரசாங்கம் தர வேண்டிய நிதியை கொடுத்து விட்டு தான் ஆக வேண்டும். தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்டபோது தூத்துக்குடி மக்களுக்கு நிதியை பலமுறை நாடாளுமன்றத்தில் கேட்டோம்.. முதலமைச்சரும் கோரிக்கையாக பல கடிதங்கள் எழுதி இருக்கின்றார். வயநாடு மழை வெள்ள பாதிப்பு தேசிய பேரிடராக அறிவிக்கவில்லையே என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு? அவர்கள் எதையும் தேசிய பேரிடராக அறிவிக்க தயாராக இல்லை.. காரணம் அவர்களே தேசிய பேரிடராக தான் இருக்கின்றார்கள் என்றார்.

சமூக பொறுப்பு நிதி நிகழ்ச்சியிலும் அரசியல் - பேரிடர் குறித்து இருவேறு அரசியல் கருத்துகள்- கனிமொழி vs நாராயணன் திருப்பதி

இதே நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆர்.இ.சி லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநரும் பாஜக நிர்வாகியுமான நாராயணன் திருப்பதி நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, அமைச்சர் சிவசங்கரன் கடவுள் ராமரை பற்றி மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பி இருக்கின்றார். தொடர்ந்து, ராமர் பிறந்த இடத்தில் அதே இடத்தில் ராமருக்கு கோவில் கட்டி இருக்கின்றது.. கடந்த வாரம் தமிழக சட்ட அமைச்சர் சொன்னார், ராமர் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி என்று, ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு அமைச்சர்கள் மாற்றி, மாற்றி பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அமைச்சர் சிவசங்கரன் ராமர் ஆட்சி மாய ஆட்சி என்று சொல்லி இருக்கின்றார்.. ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் எல்லாரையும் கொண்டு வந்து கல்வெட்டு வைக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள்.. ராஜேந்திர சோழன் உட்பட சோழ சாம்ராஜ்யமே பகுத்தறிவால் உருவானது அல்ல, பகுத்தறிவால் வாழ்ந்தது அல்ல, சோழ சாம்ராஜ்யம் என்பது முழுக்க முழுக்க இந்து நம்பிக்கைகள் இந்து கடவுள்கள் இந்து கோவில்களை எழுப்பிய ஓர் பேரரசு, அது கூட தெரியாமல் பேசி கொண்டு வருகிறார்.

இந்த நாட்டு மக்களின் நெஞ்சம் நிறைந்த ராமபிரானை தொடர்ந்து இழிவு படுத்தி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது... உதயநிதி ஸ்டாலின் இந்து தர்மத்தை அழிக்க வேண்டும் என்று பேசினார்.. தொடர்ந்து எதையாவது பேசி தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சட்டம், ஒழுங்கு சீரழிவதை மடை மாற்றுகின்றனர்.. அமைச்சராக இருக்கக்கூடியவர்கள் உறுதியான நிர்வாகத்தை கவனிக்க வேண்டும்.. தமிழ்நாட்டில் தினம் தோறும் கூலிப்படையினரால் மக்கள் படுகொலை செய்வது தொடர் கதையாகி உள்ளது. அதை கவனிக்க அரசு நிர்வாகம் சரியான முறையில் செயல்படவில்லை... 

சட்டம் ஒழுங்கை காப்பாற்றி தவறிவிட்ட இந்த அரசு இனி இருந்து பிரயோஜனம் இல்லை.. அதனால் இந்த அரசு தார்மீக கடமையை, உரிமையை இழந்துவிட்டது... தூத்துக்குடியை பொறுத்த அளவில் மத்திய அரசாங்கம் துறைமுகம், சாலை வசதி, விமான நிலையம் போன்ற எத்தனையோ பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை செலவு செய்தும் கூட இங்க இருக்கக்கூடிய திராவிடமாடல், தமிழக அரசு தொழில் ரீதியான முன்னேற்றங்களை, முதலீடுகளை கொண்டு வருவதற்கு தயாரில்லை... வெளிநாட்டு நிறுவனம் முதலீடு செய்யப் போகிறார்கள் என்று சொல்லியும் கூட எந்த முதலிடமும் வரவில்லை என்பது மிக முக்கியமான ஒரு கருத்து, ஒழுங்காக ஆட்சி செய்ய முடியவில்லை என்றால் நீங்களாகவே அதை விட்டு கீழே இறங்கி வருவது உத்தமம், 

தேசிய பேரிடர் சுனாமி காலத்தில் கூட அறிவிக்கப்படவில்லை.. ஆனால் அதற்கு நிகராக வயநாடு சம்பவம் உறுதியாக ஒரு பேரிடராக ஏற்றுக் கொள்ளப்பட்டு உடனடியாக மத்திய அரசாங்கம் தேசிய நிவாரண படகுகளை அனுப்பி இருக்கிறது.. ராணுவம் விரைந்து இருக்கின்றது.. உரிய அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் வாக்குறுதி அளித்திருக்கின்றார்... பாராளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு உள்ளது... தேசிய பேரிடர் அறிவித்தால் என்ன ஏது என்பதை முதலில் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் சில விதிகள் சட்டங்கள் எல்லாம் இருக்கின்றது என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget