மேலும் அறிய

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த மாரியப்பன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பனின் சடலத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்த வானரமுட்டி சேர்ந்த மாரியப்பன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த மாரியப்பன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

குவைத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்தனர். இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த வீராச்சாமி மகன் மாரியப்பனும் ஒருவர். 

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த மாரியப்பன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த வீராச்சாமி என்பவர் மகன் மாரியப்பன் (41). இவர் குவைத்தில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் நிறுவனத்தில் கடந்த 20 வருடமாக ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் அவர் உயிரிழந்தார். உயிரிழந்த மாரியப்பனுக்கு,, அவரது தாய் வீரம்மாள், கற்பக லட்சுமி என்ற மனைவியும்,, நிர்மலா என்ற மகளும்,, கதிர்நிலவன் என்ற மகனும் உள்ளனர். மாரியப்பன் இறந்த தகவல் கேட்டு அவர்கள் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் சோகத்தில் உள்ளனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வானரமூட்டி கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு வந்துவிட்டு மாரியப்பன் சென்றது குறிப்பிடத்தக்கது.

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த மாரியப்பன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

இந்நிலையில் குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் விமான மூலம் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து தமிழக அரசின் சார்பில் ஆம்புலன்ஸ் மூலமாக அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பனின் சடலம் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. தொடர்ந்து அவரது சடலத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய், வட்டாட்சியர் சரவணப் பெருமாள், கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கா. கருணாநிதி,,வருவாய் ஆய்வாளர் ராஜசேகரன், கிராம நிர்வாக அலுவலர் அபிராமி சுந்தரி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜகோபால், மற்றும் அரசியல் கட்சியினர் , சமுதாய அமைப்பினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதையடுத்து அவரது சடலம் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஊராட்சி மன்ற நிர்வாகிகள், அரசியல் கட்சியினர்,கிராம மக்கள், உறவினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவரது சடலத்துக்கு மகன் கதிர்நிலவன் சிதைக்கு தீ மூட்டினார்.

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த மாரியப்பன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CSK vs DC: மீண்டும் CSK-வுக்கு கேப்டனாகும் தோனி? காயத்தில் தவிக்கும் ருதுராஜ்.. டெல்லியுடன் நாளை மோதல்!
CSK vs DC: மீண்டும் CSK-வுக்கு கேப்டனாகும் தோனி? காயத்தில் தவிக்கும் ருதுராஜ்.. டெல்லியுடன் நாளை மோதல்!
”வம்புச் சண்டைக்கு வரல..தலைமை போட்டியில் நான் இல்லை” - அண்ணாமலை பரபரப்பு பேட்டி
”வம்புச் சண்டைக்கு வரல..தலைமை போட்டியில் நான் இல்லை” - அண்ணாமலை பரபரப்பு பேட்டி
TVK Protest: அழைப்பு விடுத்த விஜய்... ஓடி வந்த தொண்டர்கள்... தவெகவின் முதல் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்
அழைப்பு விடுத்த விஜய்... ஓடி வந்த தொண்டர்கள்... தவெகவின் முதல் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்
திமுகவின் நீட் நாடகம் முடிவுக்கு வந்து விட்டது - வானதி சீனிவாசன்
திமுகவின் நீட் நாடகம் முடிவுக்கு வந்து விட்டது - வானதி சீனிவாசன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Murugan Temple Theft CCTV | மருதமலை கோவிலில் திருட்டு!சாமியார் வேடத்தில் வந்த திருடன்TVK Leader Vijay Next Plan: நல்ல நேரம் குறிச்சாச்சு.. Operation 234! ஆட்டத்தை தொடங்கும் விஜய்!CV Shanmugam: அமித்ஷா - சி.வி.சண்முகம் சந்திப்பு.. வக்பு சட்டத்துக்கு ஆதரவா? அதிர்ச்சியில் எடப்பாடிஓசி டிக்கெட் கேட்ட கிரிக்கெட் சங்கம் காவ்யா மாறனுக்கு மிரட்டல்! HOME GROUND-ஐ மாற்றும் SRH?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CSK vs DC: மீண்டும் CSK-வுக்கு கேப்டனாகும் தோனி? காயத்தில் தவிக்கும் ருதுராஜ்.. டெல்லியுடன் நாளை மோதல்!
CSK vs DC: மீண்டும் CSK-வுக்கு கேப்டனாகும் தோனி? காயத்தில் தவிக்கும் ருதுராஜ்.. டெல்லியுடன் நாளை மோதல்!
”வம்புச் சண்டைக்கு வரல..தலைமை போட்டியில் நான் இல்லை” - அண்ணாமலை பரபரப்பு பேட்டி
”வம்புச் சண்டைக்கு வரல..தலைமை போட்டியில் நான் இல்லை” - அண்ணாமலை பரபரப்பு பேட்டி
TVK Protest: அழைப்பு விடுத்த விஜய்... ஓடி வந்த தொண்டர்கள்... தவெகவின் முதல் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்
அழைப்பு விடுத்த விஜய்... ஓடி வந்த தொண்டர்கள்... தவெகவின் முதல் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்
திமுகவின் நீட் நாடகம் முடிவுக்கு வந்து விட்டது - வானதி சீனிவாசன்
திமுகவின் நீட் நாடகம் முடிவுக்கு வந்து விட்டது - வானதி சீனிவாசன்
IPL 2025 MI vs LSG: கவலை தரும் ரிஷப் பண்ட் கம்பேக் தருவாரா? மும்பையை மிரள வைப்பாரா?
IPL 2025 MI vs LSG: கவலை தரும் ரிஷப் பண்ட் கம்பேக் தருவாரா? மும்பையை மிரள வைப்பாரா?
தென் மாவட்டங்களில் வெளுக்கும் கனமழை: 16 மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!
தென் மாவட்டங்களில் வெளுக்கும் கனமழை: 16 மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!
Stalin on NEET: நீட் தேர்வு விவகாரம்.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...
நீட் தேர்வு விவகாரம்.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...
TNSTC Ticket Booking: கிராம மக்களே கவனியுங்க.. அரசுப் பேருந்து டிக்கெட்ட இனி ஈசியா புக் பண்ணலாம்... எங்க தெரியுமா.?
கிராம மக்களே கவனியுங்க.. அரசுப் பேருந்து டிக்கெட்ட இனி ஈசியா புக் பண்ணலாம்... எங்க தெரியுமா.?
Embed widget