மேலும் அறிய

மத்திய பாஜக அரசை விரைவில் பதவியிலிருந்து இறக்கி காட்டுவோம் - தூத்துக்குடியில் கனிமொழி எம்பி ஆவேசம்

நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி மழை வெள்ளத்தின் போது வந்தார். ஆனால் கோயிலுக்கு போனால் உண்டியலில் காசு போடாதீங்க என சொல்லி விட்டு போனார்.

பாஜக ஆட்சி நீடிக்க வேண்டுமானால் ஆந்திர பீகார் எம்.பிக்கள் தயவு தேவை என்பதால் அறிவித்து உள்ளார்கள்-கனிமொழி எம்பி

மத்திய பாஜக அரசை விரைவில் பதவியிலிருந்து இறக்கி காட்டுவோம் - தூத்துக்குடியில் கனிமொழி எம்பி ஆவேசம்

பொது பட்ஜெட்டில் தமிழகத்தை வஞ்சித்துவிட்டதாக மத்திய பாஜக அரசை கண்டித்து உங்களுடைய நம்பிக்கையை பெற்ற தூத்துக்குடியில் கனிமொழி எம்பி தலைமையில் ஆர்ப்பாட்டம் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்றனர்.பொது பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல் தமிழகத்தை வஞ்சித்துவிட்டதாக மத்திய பாஜக அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தலைமை அறிவித்தது.

மத்திய பாஜக அரசை விரைவில் பதவியிலிருந்து இறக்கி காட்டுவோம் - தூத்துக்குடியில் கனிமொழி எம்பி ஆவேசம்

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இதில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர்  சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்பி பேசுகையில், நிதிநிலை அறிக்கை என்பது இரு மாநிலங்களுக்கு மட்டுமே அறிவித்துள்ளார்கள். நாங்கள் பாராளுமன்றத்தில் இருக்கிறோமா அல்லது ஆந்திரா பீகார் சட்டமன்றத்தில் இருக்கிறோமா என்று எண்ணும் வகையில்,ஏதோ ஒரு மாநிலத்தின் நிதி நிலை அறிக்கை என்பது போல் உள்ளது, தொடர்ந்து மாநில உரிமைகளை பறித்துக் கொண்டு மாநில வரிகளை பறித்துக் கொண்டு மாநிலங்களுக்கு வரவேண்டிய நிதியை தரவில்லை என்றால் மாநிலத்தை எப்படி நிர்வாகிப்பது. மக்களுக்கு தேவையான சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை எவ்வாறு நிவர்த்தி செய்வது என கேள்வி எழுப்பினார். தங்களது ஆட்சி காப்பாற்றிக் கொள்வதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது என குற்றம் சாட்டிய கனிமொழி,எந்த நிதி நெருக்கடி வந்தாலும் அதை செயல்படுத்தி காட்டிக் கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தங்களுக்கு வாக்களிக்காத மக்களை வஞ்சிக்கின்ற ஆட்சியாக மத்திய பாஜக ஆட்சி செயல்படுவதாக கனிமொழி எம்பி குற்றம் சாட்டினார்.சென்ற ஆண்டு கூட இந்த ஆண்டு குறைவான நிதியே மத்திய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது எனக் குற்றம் சாட்டிய அவர், தமிழக மட்டுமின்றி கிராமப்புறங்களில் இருக்கின்ற சாமானிய மக்களின் ஏமாற்றக்கூடிய ஒரு பட்ஜெட் தான் இந்த மோடி ஆட்சியினுடைய பட்ஜெட் என்றார்.

மேலும் பேசுகையில், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக அவர்களை பாதுகாக்கின்ற பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் உள்ளது என்றார். பணக்கார முதலாளிகளை வளர்த்து விடுகின்ற திட்டங்கள் மட்டுமே உள்ளது அதானி, அம்பானிகளுக்கான  பட்ஜெட்டாக உள்ளது.இப்படி மக்கள் விரோத பட்ஜெட் ஆக பாஜகவின் பட்ஜெட் உள்ளது. தமிழ்நாடு மக்களுக்கு எதிரான நல்லாட்சி எதிராக உள்ள இந்த மத்திய பாஜக அரசு விரைவில் பதவியிலிருந்து இறக்கி காட்டுவோம் வேண்டும் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rains: காலையிலே மழை! 10 மணி வரை இந்த 4 மாவட்ட மக்கள் அலர்ட்டா இருங்க - முழு விவரம்
TN Rains: காலையிலே மழை! 10 மணி வரை இந்த 4 மாவட்ட மக்கள் அலர்ட்டா இருங்க - முழு விவரம்
Breaking News LIVE: திருத்தணியில் தீ விபத்து; 1 வயதே ஆன பச்சிளங்குழந்தை உயிரிழப்பு
Breaking News LIVE: திருத்தணியில் தீ விபத்து; 1 வயதே ஆன பச்சிளங்குழந்தை உயிரிழப்பு
போலீசார் விரட்டியதில் பாலத்தின் சுவற்றில் மோதி கை, கால்களை முறித்துக் கொண்ட செயின் திருடர்கள்
போலீசார் விரட்டியதில் பாலத்தின் சுவற்றில் மோதி கை, கால்களை முறித்துக் கொண்ட செயின் திருடர்கள்
இணையத்தில் வெளியான 'தி கோட்' திரைப்படம் - படக்குழு அதிர்ச்சி
இணையத்தில் வெளியான 'தி கோட்' திரைப்படம் - படக்குழு அதிர்ச்சி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK vs Congress : திமுக-காங்கிரஸ் புகைச்சல்? END CARD போட்ட ராகுல்Rahul Gandhi MK Stalin Conversation | வீட்டுக்கு வாங்க ராகுல் தம்பி!’’அன்போடு அழைத்த ஸ்டாலின்Vinesh Phogat Joins Congress | அரசியல் களம்காணும் வினேஷ் போகத்? தட்டித்தூக்கிய ராகுல்!DMK MLA Inspection | ”வேலை பார்க்கதான இருக்கீங்க” LEFT&RIGHT வாங்கிய MLA..ஷாக்கான அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rains: காலையிலே மழை! 10 மணி வரை இந்த 4 மாவட்ட மக்கள் அலர்ட்டா இருங்க - முழு விவரம்
TN Rains: காலையிலே மழை! 10 மணி வரை இந்த 4 மாவட்ட மக்கள் அலர்ட்டா இருங்க - முழு விவரம்
Breaking News LIVE: திருத்தணியில் தீ விபத்து; 1 வயதே ஆன பச்சிளங்குழந்தை உயிரிழப்பு
Breaking News LIVE: திருத்தணியில் தீ விபத்து; 1 வயதே ஆன பச்சிளங்குழந்தை உயிரிழப்பு
போலீசார் விரட்டியதில் பாலத்தின் சுவற்றில் மோதி கை, கால்களை முறித்துக் கொண்ட செயின் திருடர்கள்
போலீசார் விரட்டியதில் பாலத்தின் சுவற்றில் மோதி கை, கால்களை முறித்துக் கொண்ட செயின் திருடர்கள்
இணையத்தில் வெளியான 'தி கோட்' திரைப்படம் - படக்குழு அதிர்ச்சி
இணையத்தில் வெளியான 'தி கோட்' திரைப்படம் - படக்குழு அதிர்ச்சி
கவலைக்கிடம்! ஐ.சி.யு. வார்டில் சீதாராம் யெச்சூரி - சோகத்தில் மார்க்சிஸ்ட் தொண்டர்கள்
கவலைக்கிடம்! ஐ.சி.யு. வார்டில் சீதாராம் யெச்சூரி - சோகத்தில் மார்க்சிஸ்ட் தொண்டர்கள்
தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மின் தடை தெரியுமா? உங்க ஏரியா இருக்கா பாருங்க!
தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மின் தடை தெரியுமா? உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Rasi Palan Today Sept 06: மேஷத்துக்கு ஆதரவு; ரிஷபத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாது - இன்றைய ராசிபலன்!
Rasi Palan: மேஷத்துக்கு ஆதரவு; ரிஷபத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாது - இன்றைய ராசிபலன்!
Nalla Neram Today Sept 06: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Embed widget