மேலும் அறிய

புதிய பாதை: குற்றவாளிகளை நல்வழிப்படுத்த வழிகாட்டு நிகழ்ச்சி- தொடங்கி வைத்த தூத்துக்குடி எஸ்.பி

தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை அழைத்து வாரந்தோறும் சனிக்கிழமை அன்று காவல் நிலையங்களில் வைத்து இக்குழுவினரால் ஆலோசனைகள் வழங்கப்படும்

தூத்துக்குடி மாவட்டத்தில் முதன்முறையாக மாவட்ட காவல்துறை சார்பாக தென்பாகம் காவல் நிலையத்தில் வைத்து பல குற்ற செயல்களில் ஈடுபட்டு ஜாமீனில் வெளிவந்தவர்கள் மற்றும் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடக்கூடியவர்களை அழைத்து அவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடாமல் திருந்தி நல்வாழ்வு வாழ மருத்துவர், சட்ட வல்லுநர், காவல்துறை அதிகாரிகள் கொண்ட ஒருங்கிணைந்த குழுவின் ‘புதிய பாதை” என்ற மனமாற்றத்திற்கான வழிகாட்டு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.

புதிய பாதை: குற்றவாளிகளை நல்வழிப்படுத்த வழிகாட்டு நிகழ்ச்சி- தொடங்கி வைத்த தூத்துக்குடி எஸ்.பி

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், ’’பழிக்குப்பழி எண்ணம் மேலோங்கி இருப்பது, கோபத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை, போதை பழக்கத்திற்கு அடிமையாக இருப்பது, பய உணர்ச்சி இல்லாமை மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுவதால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு இல்லாதது போன்ற காரணங்களால், பலர் குற்ற செயல்களில் மீண்டும் மீண்டும் ஈடுபடுகின்றனர். அவ்வாறு ஈடுபடுபவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்காக, தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை அழைத்து வாரந்தோறும் சனிக்கிழமை அன்று காவல் நிலையங்களில் வைத்து ஆலோசனைகள் வழங்க உள்ளோம்.

மேலும் மேற்படி தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வழக்குகள் உள்ளவர்கள், அவர்கள் மேல் உள்ள வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும். இனிவரும் காலங்களில் குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்காக மட்டுமே இந்த மனநல ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த முகாம் திருந்தி நல்வாழ்வு வாழ்வதற்கான ஒரு முயற்சியாகும்.

புதிய பாதை: குற்றவாளிகளை நல்வழிப்படுத்த வழிகாட்டு நிகழ்ச்சி- தொடங்கி வைத்த தூத்துக்குடி எஸ்.பி

மேலும் கடந்த 1 ½ வருடங்களில் நடந்த கொலை வழக்குகள், கொள்ளை வழக்குகள், போக்சோ வழக்குகள் போன்ற அனைத்து குற்ற வழக்குகளிலும் 90 நாட்களுக்குள் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிலும் முறப்பநாடு காவல் நிலைய வி.ஏ.ஓ கொலை வழக்கில் கொலை நடந்த 57 நாட்களில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, குற்றவாளிகள் 2 பேருக்கும் 143 நாட்களில் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

புதிய பாதை: குற்றவாளிகளை நல்வழிப்படுத்த வழிகாட்டு நிகழ்ச்சி- தொடங்கி வைத்த தூத்துக்குடி எஸ்.பி

மாவட்ட காவல்துறையினரால் இதுவரை 3620 ’மாற்றத்தை தேடி’ என்ற விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு 1,14,390 பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் பயனாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஜாதி ரீதியான பிரச்சினைகள் பெருமளவில் குறைந்துள்ளன. மேலும் கொலை வழக்குகள் 24 சதவிகிதம் குறைந்துள்ளன. இந்நிகழ்ச்சியின் பயனாக மாவட்டத்தில் கிராமங்களின் ஊர்த் தலைவர்கள், முக்கியஸ்தர்கள், ஜாதிய தலைவர்கள் தாமாக முன்வந்து தங்களது பகுதிகளில் உள்ள ஜாதிய அடையாளங்களை வண்ணம் பூசி அழித்து வருகின்றனர். தற்போது வரை மாவட்டத்தில் 6377 ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இன்னும் சில நாட்களில் மாவட்டம் முழுவதுமாக அனைத்து ஜாதிய அடையாளங்களும் அழிக்கப்பட்டுவிடும்’’ என்றார்.

புதிய பாதை: குற்றவாளிகளை நல்வழிப்படுத்த வழிகாட்டு நிகழ்ச்சி- தொடங்கி வைத்த தூத்துக்குடி எஸ்.பி

இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி மனநல மருத்துவர் சிவசைலம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சட்ட ஆலோசகர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் மேற்படி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு ஜாமீனில் வெளிவந்த 32 பேர்களுக்கு அடிப்படை மன உளவியல் குறித்தும், கோபத்தை கட்டுபடுத்தும் வழிமுறைகள் குறித்தும், போதை பழக்க அடிமைத்தனம் மீட்பு அறிவுரைகள் குறித்தும், குற்ற செயல்களில் ஈடுபடுவதால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்தும் தனித்தனியாக எடுத்துரைத்து ஆலோசனைகள் வழங்கினர்.

தலைப்பு செய்திகள்

" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget