மேலும் அறிய

திருவாரூரில் கந்துவட்டி கொடுமையால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

’’10 பேர் கொண்ட கும்பலுடன் சதீஷை தாக்கி அவர் வைத்திருந்த இரண்டு இருசக்கர வாகனங்களை அபகரித்து சென்றதாக அவரது உறவினர்கள் கூறுகின்றனர்’’

திருவாரூர் விஜயபுரம் மேட்டுப்பாளையம் தெருவை சேர்ந்தவர் 28 வயது இளைஞரான சதீஷ். இவருக்கு உமா என்ற மனைவியும் 9 மாத பெண் குழந்தையும் உள்ளனர். சதீஷ் பழைய இரு சக்கர வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். சதீஷ் திருவாரூரைச் சேர்ந்த முத்தையன் என்பவரிடம் குடும்ப செலவுக்காக தொடர்ந்து கடன் வாங்கி வந்துள்ளார். இதுவரை முத்தையனிடம் ஒன்றரை லட்ச ரூபாய் சதீஷ் கடன் வாங்கி உள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலையில் கடந்த நான்கு மாத காலமாக கொரோனா ஊரடங்கு காரணத்தால் தொழில் சரியாக செய்ய முடியாத நிலையில் சதீஷ் முத்தையனுக்கு தரவேண்டிய மாத வட்டியை தராமல் வந்துள்ளார். இதனால் முத்தையன் தினசரி சதீஷிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.

திருவாரூரில் கந்துவட்டி கொடுமையால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
 
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சதீஷ் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது 10 பேர் கொண்ட கும்பலுடன் முத்தையன் சதீஷை தாக்கி அவர் வைத்திருந்த இரண்டு இருசக்கர வாகனங்களை அபகரித்து சென்றதாக அவரது உறவினர்கள் கூறுகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக திருவாரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தும் புகாரை ஏற்க வில்லை என சதீஷின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். நேற்று இரவு வழக்கம் போல் வீட்டிற்கு வந்த சதீஷ் தனது மனைவியும் குழந்தையும் தூங்கிய பின்னர் நள்ளிரவில் தனது வீட்டிலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். சதீஷ் அவமானப்படுத்தியதால் அவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

திருவாரூரில் கந்துவட்டி கொடுமையால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
 
சம்பவம் அறிந்து வந்த திருவாரூர் நகர காவல் துறையினரிடம் சதீஷின் மனைவி மற்றும் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தாங்கள் அளித்த புகாரை ஏற்க மறுத்து கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் முத்தையனிடம் பணம் வாங்கிவிட்டு காவல்துறையினர் சதீஷின் தற்கொலைக்கு காரணமாகிவிட்டதாக குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர் சதீஷின் உடலை ஆம்புலன்ஸ் மூலமாக பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட சதீஷ் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருவாரூரில் கந்துவட்டி கொடுமையால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
 
இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த சதீஷின் மனைவியும், சகோதரியும் கூறும்போது காவல்துறையினர் நாங்கள் அளித்த புகாருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் முத்தையனுக்கு ஆதரவாக செயல்பட்டுவிட்டதாகவும் அவமானம் தாங்காமல் சதீஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். கந்துவட்டி கொடுமையால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் திருவாரூரில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை
தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
Ration Card : உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
Embed widget