மேலும் அறிய

தஞ்சை பெரிய கோயிலில் மீண்டும் யானை பவனி வருமா? எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

தஞ்சை பெரிய கோயிலுக்கு யானை இல்லை என்பது இங்கு வருபவர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலின் பெருமைக்கு புதிய அடையாளமாக கொடையாளர்கள் யாராவது யானை வழங்க முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. 

உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயடிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்காக சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். உலக பிரசித்தி பெற்றது தஞ்சை பெரிய கோயில் ஆகும். இந்த கோயிலுக்கு தஞ்சை மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலம், வெளிநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.. மேலும் தஞ்சை பெரிய கோயிலில் பிரதோஷம், சோமவாரம், அன்னாபிஷேகம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.

விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெரிய கோயிலுக்கு வருகை தருவார்கள். பல்வேறு தரப்பு மக்களும் பெரிய கோயிலுக்கு வந்து செல்கின்றனர். தனித்துவமான கட்டிட கலைக்கும்,  சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கோயிலின் முகப்பில் கேரளாந்தகன் கோபுரமும், அடுத்ததாக ராஜராஜன் கோபுரமும் உள்ளது. கேரளாந்தகன் கோபுரத்தின் முதல் தளம் தவிர மற்றவை சிறப்பான தொழில்நுட்பத்தினால் தயாரிக்கப்பட்ட செங்கற்களால் கட்டப்பட்டவை. இந்த கோபுரத்தின் முதல் தளத்துக்கு செல்ல இருபுறமும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இப்படிப்பட்ட இந்த தஞ்சை பெரிய கோயிலுக்கு யானை இல்லை என்பது இங்கு வருபவர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் கடந்த 1960ம் ஆண்டு தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு யானையை நன்கொடையாக வழங்கினார். சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் படம் பெரும் வெற்றி பெற்றதையடுத்து அதன் நினைவாக 10 வயதுடைய யானையை தஞ்சை புன்னைநல்லுர் மாரியம்மன் கோயிலுக்கு நினைவாக வழங்கி அதற்கு வெள்ளையம்மாள் என பெயர் சூட்டினார்.

தொடர்ந்து 25 ஆண்டுகள் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் இருந்த யானை பக்தர்களை மகிழ்வித்தது. பின்பு 1985ம் ஆண்டு தஞ்சை பெரிய கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு இருந்த யானை வெள்ளையம்மாள் கடந்த 2013ம் ஆண்டு சமீபகாலமாக வலது காலில் ஏற்பட்டுள்ள பிரச்னையால் படுத்தப் படுக்கையாக இருந்தது. கால்நடை மருத்துவர்கள், கோயில் யானைக்கு தொடர்ந்து அளித்த சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 63 வயதான தஞ்சை பெரிய கோயில் யானை வெள்ளையம்மாள் உயிரிழந்தது.

இதையடுத்து பெரிய கோயில் வளாகத்தில் உள்ள யானை மண்டபம் பின்புரம் வெள்ளையம்மாள் நல்லடக்கம் செய்யப்பட்டது. 2013க்கு பிறகு தஞ்சை பெரிய கோயிலுக்கு யாரும் யானை நன்கொடையாக வாங்கி தர முன்வரவில்லை. தஞ்சை பெரிய கோயில் வரும் சுற்றுலா பயணிகள் உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் யானை இல்லாதது மிகவும் ஏமாற்றமாக உள்ளது. எனவே யாரவது யானையை நன்கொடையாக வாங்கி தர முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

விசேஷ காலங்களில் புனித நீர் கொண்டு வருவது உட்பட சுவாமி ஊர்வலத்திற்கு செல்வது போன்றவற்றுக்கும் யானை இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று பக்தர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்
தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
Embed widget