மேலும் அறிய

எந்த கோயிலுக்கு சென்றால் என்ன பலன் கிடைக்கும்... இதோ பட்டியல் உங்களுக்காக!

எந்தெந்த கோயில்கள் சென்றால் என்னென்ன பலன்கள் கிடைக்கும். எந்த தடைகள் நீங்கும். வாழ்வு வளம் பெறும் என்று தெரிந்து கொள்ள ஆசையா? இதோ உங்களுக்காக.

தஞ்சாவூர்: எந்தெந்த கோயில்கள் சென்றால் என்னென்ன பலன்கள் கிடைக்கும். எந்த தடைகள் நீங்கும். வாழ்வு வளம் பெறும் என்று தெரிந்து கொள்ள ஆசையா? இதோ உங்களுக்காக. கோயில்கள் அனைத்தும் ஏதாவது ஒரு சிறப்பை பெற்று இருக்கும். அந்த வகையில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள பகுதி கோயில்களின் சிறப்புகள் அந்த கோயில்களுக்கு சென்றால் கிடைக்கும் நன்மைகள் பற் தெரிந்து கொள்ளுங்கள்.

கோயில்கள் நிறைந்த டெல்டா மாவட்டங்கள்

கோயில்கள் என்றாலேயே தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டம்தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். தஞ்சைக்கு பெரிய கோயில், நாகைக்கு வேளாங்கண்ணி, நாகூருக்கு தர்கா என்று எம்மதமும் எங்களுக்கு சம்மதம் தான் என்று பக்தர்கள் விரும்பி செல்லும் இடங்கள் உள்ளன. மிக முக்கியமாக தஞ்சை மாவட்டம் முழுவதும் திரும்பும் இடமெல்லாம் கோயில்கள்தான். காரணம் அனைத்து ஊர்களிலும் பிரபலமாக, பக்தர்கள் தேடி வந்து தரிசனம் செய்யும் கோயில்கள் ஏராளமாக உள்ளன. அந்த வகையில் இந்த கோயில்களுக்கு சென்றால் இதுபோன்ற நன்மைகள் கிடைக்கும்? தடைகள் நீங்கும் என்று தெரிந்து கொள்வதற்காக...

கருவளர்ச்சேரிக்கு சென்றால் என்ன பலன்... யார் போகணும்
 
கருத்தரிக்க வேண்டுவோர் கருவளர்ச்சேரிக்கு செல்ல வேண்டும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும் பாக்கியம் உண்டாகும். கருத்தரித்த பின் அது நன்கு வளர்ந்து சுகப்பிரசவம் கிடைக்க வேண்டுவோர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்கருக்காவூர் கருவளர்சேரி கோயிலுக்கு செல்ல வேண்டும்.

யாரெல்லாம் நோயில்லா வாழ்வு வேண்டும் என நினைக்கிறார்களோ அவர்கள் செல்ல வேண்டிய கோயில் நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயில். இங்கு வழிபட்டால் நோய் நொடிகள் தீண்டாது. இதனால் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம்தான். முக்கியமாக வெளி மாவட்டம், மாநிலத்தில் இருந்தும் இந்த கோயிலுக்கு வருகின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஞானம் பெற எந்த கோயில் பெஸ்ட்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஞானம் பெற தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும். படிக்கும் குழந்தைகள் கல்வி, கலைகளில் வளர்ச்சி பெற்று வர திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கூத்தனூர் சென்று வழிபட வேண்டும்.

எடுத்த காரியம் வெற்றியை அடைய, மனதைரியம் கிடைக்கப் பெற கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் சென்று வழிபட வேண்டும். உயர் பதவி வேண்டும் என முயற்சி செய்பவர்கள் கும்பகோணம் பிரம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டால் போதும். நல்ல வழி பிறக்கும்.

செல்வ செழிப்புடன் வாழணுமா? அப்போ இந்த கோயில்தான்

செல்வ, செழிப்பு பெற ஒப்பிலியப்பன் கோயில், கடன் சுமை குறைய திருச்சேறை சரபரமேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்ய வேண்டும். இழந்த செல்வம் திரும்ப கிடைக்க திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலுக்கு செல்ல வேண்டும்.

திருமணத் தடைகள் நீங்கணுமா? அப்போ இங்கே போங்க!!!!

பெண்கள் ருது ஆவதற்கும், ருது பிரச்சனைகள் முழுக்க தீரவும் கும்பகோணம் காசி விஸ்வநாதர் (நவ கன்னிகை) கோயிலில் வழிபட வேண்டும். திருமணத்தடைகள் நீங்க திருமணஞ்சேரி, நல்ல கணவனை பெற கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் மங்களாம்பிகை கோயிலுக்கு செல்ல வேண்டும்.

குடும்ப பிரச்னையில் பிரிந்து போன தம்பதி மீண்டும் இணைய திருவலஞ்சுழி செல்ல வேண்டும். இப்படி கோயில்கள் அனைத்தும் பக்தர்களை நல்வழிப்படுத்துகின்றன. அவர்களின் வேண்டுதல் நிறைவேறும் இடமாக உள்ளது. என்னங்க போட்டாச்சா கோயில்களுக்கான டூரை...!

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்
தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்
தமிழக வரலாற்றிலேயே நிலங்கள் அளவீடு செய்யப்பட்டது யார் ஆட்சிக்காலத்தில் தெரியுங்களா?
தமிழக வரலாற்றிலேயே நிலங்கள் அளவீடு செய்யப்பட்டது யார் ஆட்சிக்காலத்தில் தெரியுங்களா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Embed widget