மேலும் அறிய

விதிமுறை மீறல்... பாஜக சுவர் விளம்பரத்தை அழித்த தேர்தல் பறக்கும் படை

தஞ்சாவூர் அருகே மாதாக்கோட்டை மேலத்தெரு பகுதியில் சுவர் முழுவதும் நேற்று அதிகாலையில் பாஜகவின் சின்னமாக தாமரை வரையப்பட்டு இருந்தது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே மாதாக்கோட்டை மேலத்தெரு பகுதியில் இரவோடு இரவாக சுவர்களில் தேர்தல் விதிமுறைகளை மீறி வரையப்பட்ட பாஜகவின் சின்னமான தாமரை சின்னத்தை அழிக்கும் பணியில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டனர். 

உங்களுக்கு ஒரு நியாயம்... ஊருக்கு ஒரு நியாயமா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தன. இதனால் தஞ்சாவூா் மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சுவா் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.

விதிமுறை மீறல்... பாஜக சுவர் விளம்பரத்தை அழித்த தேர்தல் பறக்கும் படை

இதன்படி தஞ்சாவூா் கீழ் பாலம், சிவகங்கை பூங்கா, தற்காலிக மீன் சந்தை, தெற்கு வீதி, கீழ வீதி, பழைய பேருந்து நிலையம், ஆற்றுப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகளை பணியாளா்கள் மூலம் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலா்களை கொண்டு அகற்றப்பட்டது. இதேபோல, அரசியல் கட்சி சுவா் விளம்பரங்களும் முழுமையாக அழிக்கப்பட்டது.

இதேபோல் தஞ்சாவூா் ரயிலடியிலுள்ள எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா சிலைகளில் இரட்டை விரல்களை உயா்த்தியபடி உள்ளதால், அது சின்னத்தின் அறிகுறி எனக் கூறி, அதை மட்டும் அதிகாரிகள் மறைத்தனா். மேலும்  தனியாா் இடங்களில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ், விளம்பரங்கள் போன்றவையும் அகற்றப்பட்டன. இவ்வாறு தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் அருகே மாதாக்கோட்டை மேலத்தெரு பகுதியில் சுவர் முழுவதும் நேற்று அதிகாலையில் பாஜகவின் சின்னமாக தாமரை வரையப்பட்டு இருந்தது. இது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயலாகும். இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் உடன் அப்பகுதிக்கு விரைந்து வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சுவர் முழுவதும் வரையப்பட்டு இருந்த பாஜகவின் சின்னத்தை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறுகையில், நேற்று முன்தினம் இரவு வரை இந்த சுவரில் பாஜகவின் தாமரை சின்னம் இல்லை. ஆனால் இன்று அதிகாலை வேளையில் சுவர் முழுவதும் தேர்தல் விதிமுறைகளை மீறி யாரோ தாமரைச்சின்னத்தை வரைந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த தேர்தல் பறக்கும்படையினர் இதை அழித்தனர். ஊருக்கெல்லாம் ஒரு நியாயம்... உங்களுக்கு மட்டும் ஒரு நியாயமா என்றனர்.

தலைப்பு செய்திகள்

வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget