மேலும் அறிய

வளர்ச்சிப் பணிகளால் வளர்ந்த வல்லம்... மக்களின் முகத்தில் சந்தோஷம்

வல்லம் பேரூராட்சியை சேர்ந்த பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கான சாலை, கழிவுநீர் வடிகால், குடிநீர் உட்பட ஏராளமான தேவைகளை தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பேரூராட்சியில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு பணிகளுக்காக ரூ. 3.91 கோடியை ஒதுக்கீடு செய்து அப்பணிகள் நிறைவடைந்துள்ளது. தற்போது பயன்பாட்டிற்கு அந்த பணிகள் கிடைத்துள்ளதற்காக பொதுமக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

தஞ்சை அருகே அமைந்துள்ளது வல்லம் தேர்வு நிலை பேரூராட்சி. இங்கு 15 வார்டுகள் உள்ளன. வல்லம் பகுதியில் ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள், நர்சிங் பயிற்சி அளிக்கும் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளது. இதனால் வல்லம் மிக முக்கியமான பகுதியாக விளங்கி வருகிறது.

வல்லம் பேரூராட்சியை சேர்ந்த பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கான சாலை, கழிவுநீர் வடிகால், குடிநீர் உட்பட ஏராளமான தேவைகளை தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது. அந்த வகையில் சாலையோர பூங்காக்கள் அமைத்தல், குடிநீர் தொட்டி பராமரிப்பு பணிகள், கழிவறைகள் பராமரிப்பு, வடிகால் பணிகள், மழைநீர் மற்றும் சிறுபாலம் பணிகள் போன்றவை சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஊரணிக்குளம் மேம்பாட்டு பணிகள், புதிய மினி வாகனம் கொள்முதல் செய்தல், கழிவுநீர் வாகனம் வாங்குதல், பாதாள சாக்கடை திரவக்கழிவு மேலாண்மை, ஜெட்ராடு இயந்திரம் கொள்முதல் செய்தல், சலவை பட்டறை அமைத்தல் என்று பல பணிகளுக்காக ரூ.3.91 கோடி பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டு மேற்கண்ட பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளது.

மக்களின் அடிப்படை தேவைகள் முழுமையாக நிறைவேறினால் மட்டுமே சரியானதாக இருக்கும் என்பதை உணர்ந்து ஆட்சி நடத்தி வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு இந்த நிதியை ஒதுக்கீடு செய்து அனைத்து பணிகளையும் தரமானதாக முழுமையாக முடித்து கொடுத்துள்ளது. இதற்காக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு தங்களது நன்றி மற்றும் பாராட்டுகளை வல்லம் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், தமிழக அரசு ரூ.3.91 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டப்பணிகளை முடித்துள்ளது. இதில் முக்கியமாக பூங்காக்கள் அமைத்தல், அத்தியாவசிய பணியான குடிநீர் தொட்டி பராமரித்தல், மழைநீர் வடிகால் மற்றும் பழுதான சிறுபாலங்களை புதிதாக கட்டுதல் போன்ற பணிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி நிதி ஒதுக்கீடு செய்து நிறைவு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் நிறைவடைந்து மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதன் வாயிலாக வல்லம் பேரூராட்சிக்குட்பட்ட மக்கள் பயன் பெற்றுள்ளனர். மக்களின் தேவைகளை உணர்ந்து அதைக் கேட்க பல்வேறு வளர்ச்சிப் பணிகளை வல்லம் பேரூராட்சியில் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இப்பணிகள் மட்டுமின்றி இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

இதுகுறித்து பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம் கூறுகையில், வல்லம் பேரூராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சாலை பணிகள், குடிநீர் வசதி உட்பட ஏராளமான அடிப்படைத் தேவைகளை தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து நிறைவேற்றி தரப்பட்டுள்ளது. இந்த வகையில் வல்லம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இதற்காக நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

தலைப்பு செய்திகள்

ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
"விவசாயிகளை வஞ்சிக்கிறது அரசு" – தஞ்சாவூரில் சீறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget