மேலும் அறிய

திருச்சி: பொன்மலையில் விரைவில் மெமு ரயில்கள் பணிமனை - கோட்ட மேலாளர் மணீஷ் அகர்வால் தகவல்

''மின்மயமாக்கும் பணிகள் நிறைவேற்றபட்டு  இப்பகுதி  முழுவதும்  இந்த  ஆண்டு இறுதிக்குள்  மின்சார இன்ஜின் கொண்டு ரயிலைகள் இயக்கப்பட வாய்ப்பு''

தஞ்சாவூர்- விழுப்புரம் இடையே மயிலாடுதுறை வழியாக ரயில் பாதையில் 1877 ஆம் ஆண்டு முதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.  விருதாச்சலம் வழியான குறுக்கு ரயில் பாதை அமைக்கும் வரை தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு சென்னையிலிருந்து ஒரே இணைப்பாக இருந்ததால் இந்த பாதையை மெயின் லயன் என்று அழைக்கின்றனர். இப்பாதையில் விழுப்புரம்-புதுச்சேரி, கடலூர்-விருதாச்சலம், மயிலாடுதுறை- காரைக்குடி போன்ற கிளை ரயில் பாதைகள் உள்ளன. மேலும் காரைக்கால், மன்னார்குடி  துணை பாதைகளில்  இருந்து சென்னை மற்றும் வட மாநிலங்களுக்கு செல்ல  மெயின் லயன் பாதை தான் இணைப்பாக செயல்படுகிறது.


திருச்சி: பொன்மலையில் விரைவில் மெமு ரயில்கள் பணிமனை - கோட்ட மேலாளர் மணீஷ் அகர்வால் தகவல்

193 கி.மீ நீளமுள்ள  மெயின் லயன் ரயில் பாதையில் கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல முக்கிய ரயில் நிலையங்கள் உள்ளன. தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம் ரயில் நிலையங்களில் டிக்கெட் வருமானம் ஆண்டு ஒன்றிற்கு 20 கோடியை தாண்டியுள்ளதால், இந்நிலையங்கள் சிறப்பு அந்தஸ்தை பெற்றுள்ளன. திருச்சி ரயில்வே கோட்டத்தில் இவ்வகையான பிற ரயில் நிலையங்கள்  கோட்ட தலைமையகம் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி சந்திப்பு மற்றும் யூனியன் பிரதேச தலைநகரான  புதுச்சேரி   ஆகியவை  மட்டுமே. 

திருச்சி ரயில்வே கோட்டத்தில், அதிக பட்சமாக 12 சாதாரண பாசஞ்சர்  ரயில்களும், 5  டெமு (DEMU) வகை ரயில்களும் தஞ்சை-விழுப்புரம் இடையேயான மெயின் லயன் ரயில் பாதை மற்றும் அதை சார்ந்த கிளை பாதைகளில்  தான் இயக்கப்படுகிறது.  இந்த ரயில்களில்  பெரும்பான்மையானவை அவை இயங்கும் மார்கத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்ல கூடியவையாகும். இதனால் பயணிகள் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். 

தற்போது விழுப்புரம்-மயிலாடுதுறை-திருவாரூர்,  தஞ்சாவூர்-காரைக்கால்,  நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி ஆகிய தடங்கள்  முழுவதுமாக மின்மயமாக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை-தஞ்சாவூர் இடையே மின்மயமாக்கும் பணிகள் நிறைவடைந்து கடந்தாண்டு நவம்பர் 14ம் தேதி முதல் மின்சார இன்ஜின் கொண்டு ரயில் வண்டிகள் இயக்கப்படுகிறது.  நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி மற்றும் கடலூர்-விருதாச்சலம் ஆகிய ரயில் தடங்களில்  விரைவில் மின்மய பணிகள் நிறைவடையும்  என்று தெரிகிறது. திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் பாதைகளும் (திருவாரூர்-காரைக்குடி நீங்கலாக) முழுவதுமாக மின்மயமாக்கும் பணிகள் நிறைவேற்றபட்டு  இப்பகுதி  முழுவதும்  இந்த  ஆண்டு இறுதிக்குள்  மின்சார இன்ஜின் கொண்டு ரயிலைகள் இயக்கப்பட வாய்ப்புள்ளது.  


திருச்சி: பொன்மலையில் விரைவில் மெமு ரயில்கள் பணிமனை - கோட்ட மேலாளர் மணீஷ் அகர்வால் தகவல்

ரயில்வே துறையின்  புதிய கோட்பாட்டின்படி மின்மயமாக்கப்பட்ட தடங்களில் டீசல் இன்ஜின் கொண்டு ரயில்கள் இயக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.  இதனால் பாசஞ்சர்  ரயில்கள் அனைத்தும் மின்சார ரயில் பெட்டி  யூனிட்களாக மாற்றப்பட சாத்தியம் உள்ளது. இவை மெயின் லயன் எலக்ட்ரில் மல்டிபிள்  யூனிட் (மெமு-MEMU) என்று அழைக்கப்படும்.  இம்மாதிரியான ரயில்கள் தென்னக ரயில்வேகுட்பட்ட பகுதியில்   திருவனந்தபுரம், பாலக்காடு, சேலம் மற்றும் சென்னை ரயில்வே கோட்டங்களில் தற்போது  இயக்கப்பட்டுவருகிறது.  அவ்வாறான   மெமு  ரயில்களை பராமரிக்க பணிமனை ஒன்றினை திருச்சி கோட்டத்தின் மைய  பகுதியில்  ரயில்வே நிர்வாகம் கொண்டு வர   வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம் சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி   கடலூர் முதல் தஞ்சாவூர் வரை ஆய்வு மேற்கொண்ட திருச்சி கோட்ட  ரயில்வே மேலாளர் மணீஷ் அகர்வாலிடமும், முன்னதாக எம்பிக்கள் ராமலிங்கம் மற்றும் சண்முகம்,  மத்திய ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகளிடம் மெயின் லயன் பாதையில் மெமு  பராமரிப்பு முனையம் ஏற்படுத்த கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து தற்போது திருச்சி பொன்மலை ரயில் நிலைய பகுதியில்  மெமு ரயில்களை  பராமரிக்க பணிமனை ஒன்றினை அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும்.  அந்த அறிக்கை  ஒப்புதல் வேண்டி விரைவில் மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கு அனுப்பப்பட உள்ளதாக திருச்சி ரயில்வே கோட்ட  மேலாளர் திரு மணீஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

திருச்சி ரயில்வே கோட்டத்தில்  மெமு  ஷெட் அமைவதால்,  மயிலாடுதுறை-திருச்சி, மயிலாடுதுறை-விழுப்புரம்-காட்பாடி, தஞ்சாவூர்-காரைக்கால், திருச்சி-விருதாச்சலம்-,  திருச்சி-திண்டுக்கல், திருச்சி-கரூர்/ஈரோடு/ சேலம் ஆகிய ரயில் பிரிவுகளில் தற்போது சாதாரண பெட்டிகளை கொண்டு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் வண்டிகளும்,  டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட டெமு (DEMU) வகை ரயில் வண்டிகளும் படிப்படியாக மின்சார இன்ஜின் பொருத்தப்பட்ட தொடர் வண்டிகளாக (மெமு ரயில்கள்) இயக்கப்படும். அவற்றை  தகுந்த பெட்டி பரிவர்த்தனை முறை மூலம் உத்தேசிக்கப்பட்டுள்ள மெமு பணிமனையில்  பராமரிப்பு பணிகளை செய்யலாம். இதன் மூலம் மெயின் லயன் பகுதியில் சில கூடுதல் ரயில்களை இயக்க முடியும். மெமு  ரயில்கள் சாதாரண ரயில்களை விட விரைவாக இயங்கும் என்பதால் பயண நேரமும் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. 


திருச்சி: பொன்மலையில் விரைவில் மெமு ரயில்கள் பணிமனை - கோட்ட மேலாளர் மணீஷ் அகர்வால் தகவல்

தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று பயணிகள் நலன் கருதி திருச்சி ரயில்வே கோட்டத்தில் மின்சார இன்ஜின் பொருத்தப்பட்ட தொடர் வண்டி (மெமு) பராமரிப்பு முனையம் ஏற்படுத்த கருத்துரு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ள  திருச்சி கோட்ட  ரயில்வே மேலாளர் மணீஷ் அகர்வால்,  முதுநிலை கோட்ட இயக்குதல் மேலாளர் ஹரிகுமார் மற்றும் அனைத்து ரயில்வே அதிகாரிகளுக்கும், ரயில் பயணிகள் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர் சங்கம் செயலாளர் கிரி, சங்க நிர்வாகிகள் சார்பில் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் ஆவின் பால் தட்டுப்பாடு... தவிக்கும் மக்கள்: வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் தனியார் நிறுவனங்கள்
தஞ்சையில் ஆவின் பால் தட்டுப்பாடு... தவிக்கும் மக்கள்: வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் தனியார் நிறுவனங்கள்
தஞ்சை மருத்துவக் கல்லூரி சவக்கிடங்கில் 14 உரிமை கோராத உடல்கள்... அடையாளம் காண ோலீசார் அறிவிப்பு
தஞ்சை மருத்துவக் கல்லூரி சவக்கிடங்கில் 14 உரிமை கோராத உடல்கள்... அடையாளம் காண ோலீசார் அறிவிப்பு
“வெள்ளையனே வெளியேறு!” முழக்கத்துடன் தஞ்சையில் தொழிலாளர்கள்–விவசாயிகள் மறியல்
“வெள்ளையனே வெளியேறு!” முழக்கத்துடன் தஞ்சையில் தொழிலாளர்கள்–விவசாயிகள் மறியல்
பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக்: அன்னப்பன்பேட்டை மக்கள் கடும் எதிர்ப்பு
பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக்: அன்னப்பன்பேட்டை மக்கள் கடும் எதிர்ப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Embed widget