எவனாவது 3 லட்சம் கொடுப்பானா;நாம் ஏசுவின் பிள்ளைகள் - தூய்மை பணியாளர்களிடம் நடந்த மத பரப்புரை குறித்து விசாரிக்க தஞ்சை மாநகராட்சி உத்தரவு
தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் பணி புரியும் தூய்மை தொழிலாளர் ஒருவர், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் மதம் சார்ந்து பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் பணி புரியும் தூய்மை தொழிலாளர் ஒருவர், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி தூய்மை செய்யும் பணியாளர்களிடம் மதம் சார்ந்து பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் "அவர் எனக்கு 3 லட்சம் கொடுத்தார். இப்ப எவனாவது 3 லட்சம் கொடுப்பானா, நாம் அனைவரும் ஏசுவின் பிள்ளைகள், ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சிரமம் உண்டு.
நமக்கு அவரை பிடிக்காததால் தான், நாம் கஷ்டப்படுகிறோம், நான் இங்கு வரும் போது சென்டிரிங் வேலை பார்த்தேன் அம்மா, தஞ்சையில் உள்ள தனியார் டவரில் தான் 2000 ஆம் ஆண்டு சென்ட்ரிங் வேலை பார்த்தேன். கைமாத்து எவனாவசு கொடுப்பானா, வட்டி இல்லாமல் ரூ.3லட்சம் கொடுப்பானா, கடைசியாக சொல்லுங்கள் இயேசு கிறிஸ்து என்று, இன்னும் ஒரு மாதம் தான் ஆட்டோமேட்டிக்கா சம்பளம் அதுவாக வந்து விடும், நிச்சயம் சந்திப்பேன் துாய்மை பெண் பணியாளர்களிடம் பேசிய அந்த வீடியோ பதிவு தற்போது சமூக வளைதலத்தில் வேகமாக பரவி வருகிறது.
அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், இந்த வீடியோ மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது. எந்த நோக்கத்துக்காக அந்த அலுவலக உதவியாளர் பேசினார் என்பது குறித்து, தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம் துறை ரீதியான விசாரணை நடத்தி வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.