திருவாரூரில் வங்கிக்குள் துப்பாக்கி காட்டி மிரட்டிய சாமியார் சிறையில் அடைப்பு
ஆயுதத்தை வைத்து அச்சுறுத்துதல் தடை செய்யப்பட்ட இடத்தில் புகைப்பிடித்தல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் குடவாசல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சாமியாரை நன்னிலம் கிளைச்சிறையில் அடைத்துள்ளனர்.
சி.யூ.பி கிளைக்குள் புகுந்து துப்பாக்கி காட்டி மிரட்டிய சாமியார் விவகாரத்தில் சாமியார் திருமலை மீது ஏழு பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகில் உள்ள மூலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் திருமலை. இவர் பொறியியல் பட்டதாரி ஆவார். இவருக்கு அனுஷா என்கிற மனைவியும் காவியா கவிதா என்கிற இரண்டு மகள்களும் உள்ளனர். இவர் இந்த பகுதியில் குடவாசல் சாமிகள் என்றும் திருமலை சாமிகள் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து விட்டு கடந்த 15 வருடங்களுக்கு முன்பு சொந்த ஊரில் தங்கி வசித்து வருகிறார். திருமலை சாமிகள் வெளிநாட்டில் இருக்கும் பொழுது உள்ளூரில் மினரல் வாட்டர் நிறுவனம் ஒன்றை நடத்தியுள்ளார். அதை சரிவர கவனிக்க ஆள் இல்லாத காரணத்தினால் அந்த தொழிலை கைவிட்டு உள்ளார். அதேபோன்று கடந்த சட்டமன்ற தேர்தலில் திருமலை சாமிகளின் மனைவி அனுசுயா சுயேட்ச்சையாக நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தனது வீட்டிற்கு அருகில் மின்னல் இடி சங்கம் என்கிற அமைப்பையும் நடத்தி வருகிறார்.இவருக்கு அனுஷா என்கிற மனைவியும் காவியா கவிதா என்கிற இரண்டு மகள்களும் உள்ளனர்.
திருமலை சாமிகள் குடவாசல் அருகில் உள்ள மஞ்சக்குடி சிட்டி யூனியன் வங்கி கிளையில் வங்கி கணக்கு வைத்துள்ளார். அதேபோன்று அவரது மகள் காவியாவிற்கும் அந்த கிளையில் வங்கி கணக்கு உள்ளது. திருமலைசாமி மூத்த மகள் காவியா சீனாவில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். இந்த நிலையில் சாமியார் சீனாவில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படிக்கும் தனது மூத்த மகள் கால்யாவிற்கு மஞ்சகுடி சிட்டி யூனியன் வங்கி கிளையில் 12 லட்சம் ரூபாய் கல்வி கடன் கேட்டிருந்தார். இதற்கு சியூபி கிளையின் சார்பில் சாமியார் கேட்ட கடனுக்கு ஜாமீன்தாரர் கேட்ட காரணத்தினால் ஆத்திரமடைந்த சாமியார் திருமலை துப்பாக்கியுடன் தனது வீட்டிலிருந்து தனக்கு சொந்தமான ஜீப்பில் துப்பாக்கியுடன் வங்கிக்கு வந்துள்ளார். வங்கிக்குள் அத்துமீறி நுழைந்த அவர் அதிகாரிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டி ரகளையில் ஈடுபட்டார். ஒரு சேரில் துப்பாக்கியை வைத்து விட்டு மற்றொரு சேரில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து புகை பிடித்துள்ளார். இதனை தனது முகநூல் நேரலையிலும் அவர் வெளியிட்டு இருந்தார். இது மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுக்கு மஞ்சகுடி சியூபி கிளை மேலாளர் முத்துசாமி அளித்த புகாரின் அடிப்படையில் குடவசால் காவல்துறையினர் நன்னிலம் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சாமியார் திருமலையை அவரது வீட்டில் சென்று கைது செய்தனர். அப்போது அவர் காவல்துறையினரை தரக் குறைவான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் குடவாசல் காவல் நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து அவர் மீது காம கொடூரமாக திட்டுதல் பொதுத் தொல்லை கொடுத்தல் அத்துமீறி உள்ளே நுழைதல் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆயுதத்தை வைத்து அச்சுறுத்துதல் அனுமதி இன்றி ஆயுதத்தை வைத்து மிரட்டுதல் தடை செய்யப்பட்ட இடத்தில் புகைப்பிடித்தல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் குடவாசல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சாமியாரை நன்னிலம் கிளைச்சிறையில் அடைத்துள்ளனர்.