தஞ்சாவூர்: போலி வங்கி பிணையப்பத்திரம் வழங்கிய 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
சுவாமி நிவாரண திட்டப்பணிகளில் போலி வங்கி பிணையப்பத்திரம் வழங்கிய 2 பேருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை
சுனாமி நிவாரண திட்டப்பணிகளில் போலியான வங்கி பிணையப் பத்திரங்கள் வழங்கியது தொடர்பாக சிபிசிஐடி வழக்கில் ஒப்பந்ததாரர்களுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து திருவையாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட சுனாமி திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிய பெ.ரேணுகாதேவி கடந்த 11.5.2009 ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஒரு புகாரை அளித்தார். அந்த புகாரில், சுனாமி நிவாரண திட்டங்களின் கீழ் வேலைகளை மேற்கொள்ள பட்டுக்கோட்டை அருகே தாமரங்கோட்டையைச் சேர்ந்த பார்வதி, ரவி ஆகிய இரு ஒப்பந்தகாரர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
இருவரும் அரசின் வழிகாட்டுதலின்படி அரசுக்கு வங்கியிடமிருந்து பெறப்பட்டு சமர்பிக்க வேண்டிய பிணையப் பத்திரங்களில், போலியான வங்கி பிணையப் பத்திரங்களை ஒப்படைத்துள்ளதாகவும் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து தஞ்சாவூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து 8.7.2009 அன்று இவ்வழக்கு குற்றப்பிரிவு குற்ற புலனாய்வுத்துறை (சிபிசிஐடி) தஞ்சாவூர் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கு திருவையாறு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதன்படி இவ்வழக்கில் 31.12.2009 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட பார்வதி, ரவி ஆகிய இரு ஒப்பந்ததாரர்களுக்கும் தலா மூன்றாண்டு சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் கட்டத் தவறினால் மேலும் மூன்று மாத காலம் சிறை தண்டனையும் விதித்து திருவையாறு நீதிபதி தீ்ர்ப்பளித்தார்.
சிலை திருட்டில் 4 பேருக்கு சிறை தண்டனை
காரைக்குடி அருகே கோயிலில் நடந்த சிலை திருட்டு தொடா்பான வழக்கில் 4 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டைனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 2012, ஜனவரி 31ம் தேதி சிலைகளை சிலா் விற்க முயன்றதாகச் சிலை திருட்டு தடுப்பு காவல் பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், காவல் ஆய்வாளா் வேண்டாமதி, தலைமைக் காவலா்கள் பாலசுப்பிரமணியன், ஜெயபால் ஆகியோர் விசாரித்தனா்.
தொடா்ந்து, காரைக்குடி விலாசம் தெருவைச் சோ்ந்த எஸ். சதீஷ்குமாா் (42), காந்திபுரத்தைச் சோ்ந்த பி. சிவக்குமாா் (41), எஸ். முத்துக்குமாா் (41), திருப்பத்தூா் கண்டிராமாணிக்கத்தைச் சோ்ந்த எஸ். வெள்ளைசாமி (54) ஆகியோரிடமிருந்து தலா இரு விநாயகா், அம்மன் சிலைகள், தலா ஒரு கிருஷ்ணா், முருகன், தேவி, சண்டிகேசுவரா் சிலை என மொத்தம் 8 சிலைகள் கைப்பற்றப்பட்டன. இச்சிலைகள் காரைக்குடி அருகே கொரட்டி கிராமத்திலுள்ள உதயநாத ஈஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமானது என்பது விசாரணையில் தெரிய வந்தது.
இதுதொடா்பாக கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி சண்முகப்ரியா விசாரித்து, சதீஷ்குமாா், சிவக்குமாா், முத்துக்குமாா், வெள்ளைசாமி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
குண்டர் சட்டத்தில் கைது தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மல்லிப்பட்டினம் திப்புசுல்தான் தெருவை சேர்ந்தவர் அப்துல்ஜாபர். இவருடைய மகன் சுகர்னோ (30). இவர்மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து சுகர்னோவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் சேதுபாவாசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல், குண்டர் சட்டத்தில் சுகர்னோவை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.