மேலும் அறிய
Advertisement
புனித வெள்ளியை முன்னிட்டு வேளாங்கண்ணியில் குவிந்த பல்லாயிரக்கணக்கான மக்கள்
வேளாங்கண்ணியில் இன்று நடைபெறும் புனித வெள்ளி இறைவழிபாடில் கலந்து கொள்ள தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயத்தில், இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி தினத்தையொட்டி சிறப்பு திவ்ய நற்கருணை ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதிகாலை 5 தொடங்கிய திவ்ய நற்கருணை ஆராதனைகள் பல்வேறு தரப்பினரால் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடத்தப்படுகிறது. அடைக்கல அன்னை அருட்சகோதரிகள், இருதயம் மரியாயின் சேனை, அன்னை தெரசா சபை,ஆங்கில திருப்பயணிகள், நிர்மல் இல்லத்தினர், டி.எம்.ஐ.,சகோதரி கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து 12 மணி நேரம் திவ்ய நற்கருணை ஆராதனையை நடத்துகின்றனர்.
தொடர்ந்து மாலை தேவாலய கலையரங்கில் பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் 10க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் தலைமையில் இறைவழிபாடு,பொது மன்றாட்டு,சிலுவை ஆராதனை நடைபெற உள்ளது. சிறப்பு திருப்பலியில் பங்கேற்க பாதயாத்திரையாகவும், வாகனம் மூலமும் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர். மேலும் வெளிநாட்டினரும் வருகை தந்துள்ளனர். இதனால் வேளாங்கண்ணியில் பக்தர்களும் சுற்றுலாப் பயணிகள் கூட்டமும் நிரம்பி உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரானா ஆச்சம் காரணமாக முக்கிய நிகழ்வாக நடைபெறும் இயேசு கிறிஸ்துவின் சொரூபத்தை பக்தர்கள் முத்தமிடுதல் தவிர்க்கப்பட்டு வணங்குவதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது. அரசின் பெருமுயற்சியால் தமிழகத்தில் தொற்று குறைந்த நிலையில் இந்த ஆண்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் மாலை நடைபெறும் புனித வெள்ளி நிகழ்ச்சியில் இயேசு கிறிஸ்து சருமத்திற்கு முத்தமிட்டு வழிபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion