மேலும் அறிய
Advertisement
திருவாரூரில் சங்கீத மும்மூர்த்திகள் இசை விழா; பஞ்சரத்தன கீர்த்தனையை இசைத்து பாடிய கலைஞர்கள்
திருவாரூரில் சங்கீத மும்மூர்த்திகள் இசை விழாவில் பஞ்சரத்தன கீர்த்தனையை இசைத்தும், பாடியும் நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் தியாகராஜருக்கு இசையஞ்சலி. 100க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் பங்கேற்பு.
திருவாரூரில்தான் கர்நாடக இசை மூம்முர்த்திகள் என்று அழைக்கப்படும் தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள். முத்துசாமி தீட்சதர் அவதரித்த சிறப்புக்குரிய தலமாகும். இங்கு கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளுக்கு இசையஞ்சலி செலுத்தும் விதமாக திருவாரூரில் ஆண்டுதோறும் சங்கீத மும்மூர்த்திகள் இசைவிழா நடத்தப்பட்டு வருகின்றது. இந்தாண்டு கடந்த 24ம் தேதி தொடங்கி 5வது நாளான இன்றுடன் தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனை பாடி இசையஞ்சலி செய்து இசைவிழா நிறைவடைகின்றது.
முன்னதாக முதல் நாளன்று (24ம் தேதி) மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரிகளின் 256வது ஜெயந்திவிழா திருவாரூர் மேட்டுத் தெருவில் உள்ள சியாமா சாஸ்திரிகள் அவதரித்த இல்லத்தில் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் மாலையே திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள கமலாம்பாள் சன்னதியில் சங்ககீத மும்மூர்த்திகளின் இசைவிழா தொடங்கியது. 24ம் தேதி தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இசை விழாவினை தொடங்கி வைத்தார். ஒவ்வொரு நாள் மாலை நேரத்திலும் புகழ்மிக்க இசைக் கலைஞர்களின் இசைக் கச்சேரிகளுடன் கலைகட்டியது.
அதன்படி இந்த இசைவிழாவில் பிரபல கர்நாடக இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆண்டாங்கோவில் சிவக்குமார், ரஞ்சனி கௌசிக், இசைக்கலைஞர் காயத்திரி கிரீஸ், சீர்காழி சிவசிதம்பரம் உட்பட முன்னணி இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் இதில் இடம்பெற்றன. நிறைவு நாளான இன்று (28ம் தேதி) காலை முதலே நிகழ்ச்சிகள் தொடங்கின. அதன்படி தியாகராஜர் அவதரித்த இல்லத்திலிருந்து தியாகராஜரின் உருவப்படம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து கமலாம்பாள் சன்னதியில் சிறப்புத் தவில் மற்றும் நாதஸ்வரக் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிருந்தும் வந்திருந்த நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் பங்கேற்ற பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தியாகராஜர் இயற்றிய நாட்டை, கௌளை,ஆரபி, வராளி, ஸ்ரீராகம் ஆகிய அரிய ராகங்களில் இசைக்கலைஞர்கள் தங்களுடைய இசைக்கருவிகளில் வாசித்தும், கர்நாடக இசைப்பாடகர்கள் ஏராளமானோர் ஒன்றாக அமர்ந்து பாடியும் தியாகராஜருக்கு இசையஞ்சலி செய்தனர். இந்நிகழ்ச்சியில் சுப்புலட்சுமி உள்ளிட்ட ஏராளமான ஏராளமான இசை கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion