மேலும் அறிய

எரியவும் புகையவும் செய்யாத இயற்கை கொசு விரட்டியை கண்டுபிடித்த ஓவியர்

எரியவும் புகையவும் செய்யாத இயற்கை கொசு விரட்டியை கண்டுபிடித்த ஓவியர். நாள் ஒன்றுக்கு எட்டு ரூபாய் செலவில் கொசுக்களை விரட்டுவதுடன் உடல் பாதைகளையும் நீக்கும் என நம்பிக்கை.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் எழில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பரதேசி கோபிராம். 54 வயதான இவர் தனது தாயுடன் வசித்து வருகிறார. இவர் ஓவிய ஆசிரியராக ஐந்து வருடம் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றுவிட்டு ஆன்மீக பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்து வருகிறார். இவர் கடுகில் உலக வரைபடத்தை வரைந்தது  உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர் தற்போது இயற்கை கொசு விரட்டி ஒன்றை கண்டுபிடித்திருப்பதாகவும் அது புகையவும் செய்யாது எரியவும் செய்யாது ஆனால் கொசு உள்ளிட்ட பூச்சிகளை வீட்டிற்குள் வரவிடாமல் விரட்டும் என்றும் இது பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தலாம் என்றும் இதன் நறுமணத்தை சுவாசிக்கலாம் இதன் மூலம் நுரையீரல் பிரச்சனை சளி, இருமல், மூக்கடைப்பு, தலைவலி, தலைசுற்றல், தூக்கமின்மை, மன அழுத்தம், காதிரைச்சல்  போன்ற பல தொந்தரவுகள் நீங்கும் என்றும் அவர் கூறுகிறார்.

எரியவும் புகையவும் செய்யாத இயற்கை கொசு விரட்டியை கண்டுபிடித்த ஓவியர்

இந்த இயற்கை கொசு விரட்டியில் மண்சட்டி ஒன்றை எடுத்துக் கொண்டு அதில் கையால் செய்யப்பட்ட அகல் விளக்கினை வைத்து அதில் வேப்பெண்ணெய் நிரப்பி தீபம் ஏற்ற வேண்டும் என்றும் அதை சட்டியின் ஓரத்தில் வைத்துக் கொண்டு அதன்மேல் உருளை வடிவத்தில் செய்யப்பட்ட  வலை அமைப்பை வைத்து அதன் மீது வேப்பிலையை போட்டு அகல் விளக்கின் தீபத்தை லேசாக எரிய விட வேண்டும் வேப்பிலையில் இருந்து புகை வராமல் நறுமணம் வரும் அளவிற்கு தீபத்தை வைத்து ஒரு அறையில் வைத்து விட்டு மின்விசிரியை போடாமல் ஒரு மணி நேரம் வைத்திருந்தாலே அந்த அறையில் உள்ள அனைத்து கொசுக்களும் ஓடிவிடும் என்றும் கொசு மட்டுமல்லாது மூட்டை பூச்சி, கரப்பான் பூச்சி போன்ற பூச்சிகளும் வெளியேறும் என்று அவர் உறுதிபட தெரிவிக்கிறார். மேலும் இதனை தான் கொரோனா காலத்தில் கிருமிகளை கொள்வதற்காக கிருமி நாசினி போன்று தயாரித்ததாகவும் தற்போது மழைக்காலம் நெருங்கி வருவதால் இயற்கை முறையிலான கொசு விரட்டியாக இதனை பொது மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று தயாரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

எரியவும் புகையவும் செய்யாத இயற்கை கொசு விரட்டியை கண்டுபிடித்த ஓவியர்

இதனை வியாபார நோக்கம் இல்லாமல் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்த வேண்டும் என்றும் தற்போது கடைகளில் விற்கப்படும் கொசுவர்த்திகளில் ரசாயன கலவை அதிகமாக காணப்படுவதால் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுவதாகும் இதனை பயன்படுத்துவது மூலம் உடல் பாதைகள் நீங்குவதுடன் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவரும் சுவாசிக்கவும் செய்யலாம் என்றும் கூறுகிறார்.

மேலும் இதனை விரும்பி கேட்பவர்களுக்கு நூறு ரூபாய் மதிப்பில் தயார் செய்தும் கொடுக்கிறார். மேலும் அவர் கூறுகையில், 50 மில்லி வேப்ப எண்ணெயில் மூன்று மணி நேரம் இந்த கொசு விரட்டி வேலை செய்யும் என்றும் எட்டு ரூபாய் ஒரு நாளைக்கு செலவு செய்தால் இயற்கை முறையிலான கொசு விரட்டி பயன்படுத்தி உடல் ஆரோக்கியமும் பெற முடியும் என்று அவர் தெரிவிக்கிறார். இதனை வியாபார நோக்கம் அல்லாமல்  தான் தயாரித்ததாகவும் அனைவரும் பயன்படுத்தி பயன் பெற வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக இதில் வேப்பிலை தவிர வேறு மூலிகைகளை பயன்படுத்தக் கூடாது எனவும் அவர் கூறுகிறார்.

தலைப்பு செய்திகள்

வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget