மேலும் அறிய

தங்க நகை முன்னறிவிப்பின்றி ஏலம்; ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.1 லட்சம் அபராதம் - நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு

புகார்தாரர் கோரிய பரிகாரம் அவருக்கு கிடைக்கத்தக்கதாகும் என்று கருதுவதால் வட்டியை பெற்றுகொண்டு நகையை திருப்பிக் கொடுப்பதுடன் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்க வேண்டும்.

வாடிக்கையாளர் அடகு வைத்த தங்க நகையை முன்னறிவிப்பின்றி ஏலம் விட்ட ஐசிஐசிஐ வங்கி கிளைக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி தீர்ப்பளித்தது.
 
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட வேப்பஞ்சேரி ஜீவா தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவர் கடந்த 14.12.2020 அன்று தனது நான்கரை சவரன் தங்க நகையை ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஐசிஐசிஐ வங்கி கிளையில் அடமானம் வைத்து விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த 03.09.2021 அன்று தான் அடமானம் வைத்த நகைக்கான வட்டியாக 6 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கி கிளையில் செலுத்தியுள்ளார். இதனையடுத்து கடந்த 29.09.2021 அன்று விவசாயத்தின் மூலம் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு வங்கி கிளைக்கு சென்று அடகு வைத்த நகையை மீட்பதற்காக கேட்டபோது அங்கு பணியில் இருந்த மேலாளர் மரியதாஸ் என்பவர் அசல் வட்டி இரண்டையும் கட்ட வேண்டும் என்றும் ஆனால் நகையை ஏலம் விட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த ராஜ் மனவேதனை மற்றும் இரத்த அழுத்தம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.

தங்க நகை முன்னறிவிப்பின்றி ஏலம்; ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.1 லட்சம் அபராதம் - நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு
 
அதனைத் தொடர்ந்து கடந்த 21.02.2023 அன்று தான் அடகு வைத்த நகை 916 தரமுடையது என்றும் அதன் மதிப்பு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரும் என்றும் நகை ஏலம் வருவதற்கு ஏழு நாட்களுக்கு அறிவிப்பு அனுப்பாமல் உள்ளதாக கூறி திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல் நிலையத்தில் நீதிமன்றத்தில் முறையிட்டு இந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்ளுமாறு கூறியதன் அடிப்படையில் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தங்க நகை முன்னறிவிப்பின்றி ஏலம்; ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.1 லட்சம் அபராதம் - நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு
 
இதனையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சேகர் உறுப்பினர் லட்சுமணன் அடங்கிய அமர்வு வங்கி கிளை முறையான எந்த முன்னறிவிப்பும் அனுப்பாமல் ஏமாற்றும் நோக்கம் கொண்டு சட்டரீதியான நடைமுறையை கடைப்பிடிக்காமல் நகையை ஏலம் விட்டுள்ளனர். புகார்தாரர் செலுத்திய 6000 ரூபாய் வட்டித் தொகையை வரவு வைக்கவில்லை.வங்கி கிளை தவறான வணிக நோக்கில் புகார்தாரரின் நகையை  விற்றுள்ளனர். வங்கி கிளை உரிய ஆவணம் தாக்கல் செய்யாதிருப்பதிலிருந்து முறையான சட்ட நடைமுறையை கடைப்பிடிக்கவில்லை என்று தெரிய வருகிறது. எனவே புகார்தாரர் கோரிய பரிகாரம் அவருக்கு கிடைக்கத்தக்கதாகும் என்று கருதுவதால் வட்டியை பெற்றுக் கொண்டு நகையை திருப்பிக் கொடுப்பதுடன் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடும் வழக்கு செலவு தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 9% வட்டியுடன் வழங்கவும்,ஒரு மாத காலத்திற்குள் தொகையை வழங்கவும் ஆணையம் உத்தரவிடுவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fact Check : அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
Breaking News LIVE: யூ ட்யூபர் சவுக்கு சங்கருக்கு மே 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல்
Breaking News LIVE: யூ ட்யூபர் சவுக்கு சங்கருக்கு மே 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல்
TN Weather Update: கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Muttukadu Boat House : முட்டுக்காடு SUMMER SPECIAL 1 DAY PLAN-க்கு ரெடியா? இவ்வளவு OFFER இருக்கா?Suchitra interview  : ”ஐஸ்வர்யா நல்ல அம்மாவா? என் சப்போர்ட் தனுஷூக்கு தான்” பகீர் கிளப்பிய சுச்சிGV Prakash Saindhavi Divorce : ”ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்”  எமோஷனலான GV, சைந்தவிVenkatesh Bhat : SUN TV vs VIJAY TV வெங்கடேஷ் பட் பதிலடி போட்டியில் முந்துவது யார்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fact Check : அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
Breaking News LIVE: யூ ட்யூபர் சவுக்கு சங்கருக்கு மே 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல்
Breaking News LIVE: யூ ட்யூபர் சவுக்கு சங்கருக்கு மே 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல்
TN Weather Update: கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
Yellow Fever: தடுப்பூசி இல்லை என்றால் இந்தியாவுக்கு நோ எண்ட்ரி.. மஞ்சள் காய்ச்சல் அலர்ட்..
தடுப்பூசி இல்லை என்றால் இந்தியாவுக்கு நோ எண்ட்ரி.. மஞ்சள் காய்ச்சல் அலர்ட்..
PM Modi's Nomination: நாடாளுமன்ற தேர்தல் - வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!
PM Modi's Nomination: நாடாளுமன்ற தேர்தல் - வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!
11th Supplementary Exam: பிளஸ் 1 தேர்வு; ஜூலை 2 முதல் துணைத்தேர்வு- மே 15 முதல் மறுகூட்டல் / விடைத்தாள் நகல்
11th Supplementary Exam: பிளஸ் 1 தேர்வு; ஜூலை 2 முதல் துணைத்தேர்வு- மே 15 முதல் மறுகூட்டல் / விடைத்தாள் நகல்
Cow Theft:
"பீப் கடைக்கு " மாடுகளை திருடிய பார்ட் டைம் திருடர்கள் ..! ஜெயிலுக்கு அனுப்பிய போலீஸ் ..!
Embed widget