Thiruvarur: பருத்திக்கு உரிய விலை கிடைக்கல; வயலில் டிராக்டர் விட்டு அடித்த விவசாயி
பருத்திக்கு உரிய விலை கிடைக்காததை கண்டித்து பருத்தி வயலில் டிராக்டர் விட்டு அடித்த விவசாயி.
![Thiruvarur: பருத்திக்கு உரிய விலை கிடைக்கல; வயலில் டிராக்டர் விட்டு அடித்த விவசாயி Thiruvarur farmer left a tractor in the cotton field to protest against not getting the right price for cotton TNN Thiruvarur: பருத்திக்கு உரிய விலை கிடைக்கல; வயலில் டிராக்டர் விட்டு அடித்த விவசாயி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/17/22eaa14698a67ed008d2dad4d70620541689569476252113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் குறுவை சம்பா தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் பருவமழை பற்றாக்குறை மற்றும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வருவதில் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் விவசாயிகள் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக ஒருபோகம் சம்பா சாகுபடி பணிகளை மட்டும் மேற்கொண்டு வந்தனர். மீண்டும் கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்பட்டதன் காரணத்தினால் மூன்று போகம் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோடை சாகுபடியாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருத்தி சாகுபடியை தீவிரமாக விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கோடை சாகுபடியான பருத்தி இந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் சுமார் 47 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டது. குறிப்பாக கடந்த ஆண்டு ஒரு கிலோ பருத்தி 100 முதல் 120 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டதால் இந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் அதிக அளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம், மன்னார்குடி, கோட்டூர், விக்கரபாண்டியம், புழுதிகுடி, சேந்தங்குடி, செருவாமணி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டனர். மேலும் இயற்கை சீற்றம் மற்றும் கனமழையின் காரணமாக பருத்தி ஆரம்பம் முதலே பாதிக்கப்பட்ட நிலையில் அதற்காகவும் நிவாரணம் கேட்டும் தற்போது வரை அந்த நிவாரணம் என்பது வழங்கப்படவில்லை. மேலும் மழையினால் பாதிக்கப்பட்ட பருத்தி செடிகளை ஆட்கள் மூலம் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து அடித்து தற்போது பருத்தி எடுக்கும் தருவாயில் மாவட்டம் முழுவதும் கிலோ பருத்தி ஆனது 45 முதல் 50 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பருத்தி விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஒரு ஏக்கருக்கு 30,000 வரை செலவு செய்தும் அதற்கான தொகை தற்போது வரை கிடைக்காத காரணத்தினால் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள இருள்நீக்கி பகுதியில் பருத்திச் செடியில் காய்கள் மற்றும் பூக்கள் பூத்திருக்கும் நிலையில் அதை டிராக்டர் மூலம் பருத்தியை அழித்து வருகின்றனர். மேலும் அவர்கள் தெரிவிக்கும் பொழுது கடந்த ஆண்டு 120 ரூபாய் வரை கிலோ பருத்தி விற்பனையானதால் நாங்கள் இந்த ஆண்டு பருத்தியை அதிக அளவில் சாகுபடி செய்தோம் தற்போது கிலோ 45 முதல் 50 ரூபாய் வரை மட்டுமே செல்வதால் எங்களுக்கு கட்டுப்படி ஆகவில்லை. எனவே மேலும் நாங்கள் நஷ்டம் அடையாமல் இருப்பதற்கு தற்போது பருத்தி வயலில் டிராக்டரை விட்டு உழவு செய்கிறோம். அதற்கு அடுத்தபடியாக சம்பா பணியில் ஈடுபட உள்ளோம். மேலும் பருத்தி செடிகள் மழையால் பாதிக்கப்பட்ட காரணத்தினால் மட்டுமே விலை போகவில்லை. எனவே எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகளின் தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)