மேலும் அறிய

திருவாரூர் : கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவிப்பு

பாண்டவையாறு தலைப்பில் 87.4 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.

கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். 
 
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 26ஆம் தேதி தொடங்கியதிலிருந்து டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது குறிப்பாக கடந்த இரண்டு தினங்களாக திருவாரூர் மாவட்டத்தில் இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களான புதுச்சேரி காரைக்கால் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. நவம்பர் 1ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் சென்னையை பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்று முதல் 30-ஆம் தேதி வரை தென் மேற்கு வங்க கடல் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

திருவாரூர் : கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவிப்பு
இந் நிலையில் டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து கடந்த சில தினங்களாக விட்டு விட்டு பெய்து வந்த மழை திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. நேற்று பகல் நேரத்தில் சிறிதளவு மழை விட்டிருந்த நிலையில் மீண்டும் நேற்று நள்ளிரவு முதல் இடி மற்றும் மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
 
குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கனமழையின் காரணமாக இன்று அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்டம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் பொது மக்கள் வெளியில் செல்ல முடியாமல் இருந்து வருகின்றனர். மேலும் தரைக்கடை வர்த்தகர்கள் மற்றும் வணிகர்கள் மழையின் காரணமாக மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
 
திருவாரூர் மாவட்டத்தில்  திருவாரூரில் 76.7 மில்லி மீட்டரும், நன்னிலத்தில் 31.8 மில்லி மீட்டரும், திருத்துறைப்பூண்டியில்  68.2 மில்லி மீட்டரும், குடவாசலில் 49.6 மில்லி மீட்டரும், நீடாமங்கலத்தில் 46.8 மில்லி மீட்டரும், மன்னார்குடியில் 53.0 மில்லி மீட்டரும், முத்துப்பேட்டையில் 40.2 மில்லி மீட்டரும் பாண்டவையாறு தலைப்பில் 87.4 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.

திருவாரூர் : கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவிப்பு
மேலும் தொடர் கனமழையின் காரணமாக நீடாமங்கலம் கோட்டூர் மன்னார்குடி உள்ளிட்ட கிராமங்களில்  அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் மழைநீரில் சாய்ந்து உள்ளன இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர் இதேபோன்று தற்போது சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். 30 முதல் 40 நாட்கள் ஆன சம்பா பயிர்களுக்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் சம்பா பயிர்கள் மழை நீரில் பயிர்கள் அனைத்தும் மூழ்கி விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
 
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து திருவாரூர் மாவட்டத்திலுள்ள வடிகால் வாய்க்கால்களை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தூர் வாரவேண்டும், தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதேபோன்று கிராமப்புறங்களில் வீடுகளை சுற்றி அதிக அளவு மழைநீர் தேங்கி இருக்கிறது குறிப்பாக திருவாரூர் அருகே குவளைக்கால் மூங்கில்குடி உள்ளிட்ட கிராமங்களில்  வீடுகளை சுற்றி மழை நீர் தேங்கி இருக்கிறது.
 
இந்த மழை நீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இந்தநிலையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மதியம் வடகிழக்கு பருவமழை தொடர்பான  அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் மாவட்ட இல்லத்தரசிகள் அதிர்ச்சி... ஒரே மாதத்தில் கடலைப் பருப்பு கிலோவுக்கு ரூ.30 அதிகரிப்பு
தஞ்சாவூர் மாவட்ட இல்லத்தரசிகள் அதிர்ச்சி... ஒரே மாதத்தில் கடலைப் பருப்பு கிலோவுக்கு ரூ.30 அதிகரிப்பு
விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம்: மல்லிப்பட்டினம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம்: மல்லிப்பட்டினம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாகப் புகார்! தஞ்சாவூர் காவல் ஆய்வாளர் கைது; அக்.23 வரை நீதிமன்றக் காவல்!
ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாகப் புகார்! தஞ்சாவூர் காவல் ஆய்வாளர் கைது; அக்.23 வரை நீதிமன்றக் காவல்!
தஞ்சாவூர் மாநகராட்சி அதிரடி... பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய பன்றிகள் பிடிப்பு
தஞ்சாவூர் மாநகராட்சி அதிரடி... பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய பன்றிகள் பிடிப்பு

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
TN Weather News: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
Rasi Palan Today (13-10-2026): துலாமுக்கு ஏமாற்றம்.. தனுசுக்கு சிரமம்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்ல நாளா?
Rasi Palan Today (13-10-2026): துலாமுக்கு ஏமாற்றம்.. தனுசுக்கு சிரமம்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்ல நாளா?
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Embed widget