மேலும் அறிய

Thiruvarur : விடாமல் பெய்த மழை..! மழைநீரில் மூழ்கிய 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள்..! விவசாயிகள் வேதனை..

வயலில் தேங்கியுள்ள மழைநீரை வடிய வைப்பதற்கான வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படவில்லை என்றும், இதன் காரணமாக தண்ணீரை வடிய வைப்பதிலும் சிக்கல் நீடிப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கின. விவசாயிகள் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்.

காவேரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா மற்றும் தாளடி என மூன்று கோபம் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாததன் காரணத்தினாலும் உரிய நேரத்தில் பருவமழை பொய்த்து போனதன் காரணத்தினாலும் மூன்று போகும் சாகுபடி என்பது ஒருபோகம் சம்பா சாகுபடி பணிகளை மட்டும் விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மீண்டும் மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி உரிய நேரத்தில் திறக்கப்பட்டதன் காரணத்தினால் கடந்த மூன்று ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் மூன்று போகம் சாகுபடி பணிகள் என்பது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வருடம் மேட்டூர் அணையிலிருந்து மே 24ம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒரு லட்சத்து 57 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் ஈடுபட்டனர்.


Thiruvarur : விடாமல் பெய்த மழை..! மழைநீரில் மூழ்கிய 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள்..! விவசாயிகள் வேதனை..

தற்போது குறுவை சாகுபடி அறுவடை பணிகள் என்பது 100 சதவீதம் முடிவடைந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 517 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தாளடி நெற்பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தற்பொழுது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தாளடி சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரும்பாலானோர்  நேரடி விதைப்பு முறையில் விதை விதைத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக வளிமண்டல கீழடுக்க சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை தொடக்கத்தின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை என்பது பெய்து வந்தது. 


Thiruvarur : விடாமல் பெய்த மழை..! மழைநீரில் மூழ்கிய 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள்..! விவசாயிகள் வேதனை..

இதன் காரணமாக விதைத்து 20 நாட்களே ஆன  நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிப்புக்கு உள்ளானது. இந்த நிலையில் வங்க கடலில்  உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றைய முன் தினம் கனமழை தீர்த்தது. இந்தத தொடர் மழையின் காரணமாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம்  கம்மங்குடி, குப்பம், சோத்திரியம், விக்கிரபாண்டியம் கொல்லுமாங்குடி மங்கை நல்லூர் கிராமத்தில் சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து கன மழை நீடிக்கும் பட்சத்தில் இந்த நெற்பயிர்கள் முற்றிலுமாக மழை நீர் வயல்களில் தேங்கி நெற்பயிர்கள் அழுகி பாதிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.  மேலும் குறிப்பாக இந்த பகுதியில் வயலில் தேங்கியுள்ள மழைநீரை வடிய வைப்பதற்கான வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படவில்லை என்றும் இதன் காரணமாக தண்ணீரை வடிய வைப்பதிலும் சிக்கல் நீடிப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.  மேலும் இதுவரை ஏக்கர் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில் செலவு செய்த பணத்தை கூட எடுக்க முடியாத நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு சூப்பர் வாய்ப்பு! சிறப்பு கடன் முகாம்... எங்கே? எப்போது?
பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு சூப்பர் வாய்ப்பு! சிறப்பு கடன் முகாம்... எங்கே? எப்போது?
ஆலக்குடியில் பெயர் பலகைக்கு வந்த சோதனை! போஸ்டர்களால் முழுவதும் மறைப்பு... வழிதெரியாமல் தவிக்கும் பயணிகள்
ஆலக்குடியில் பெயர் பலகைக்கு வந்த சோதனை! போஸ்டர்களால் முழுவதும் மறைப்பு... வழிதெரியாமல் தவிக்கும் பயணிகள்
தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளி! தான் படித்த பள்ளிக்கு ரூ.4 கோடி கொடுத்த தொழிலதிபர்
தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளி! தான் படித்த பள்ளிக்கு ரூ.4 கோடி கொடுத்த தொழிலதிபர்
குவாரிகளில் 6 வீல் லாரிகளுக்கு மணல் ஏற்ற மறுப்பா? நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் கோரிக்கை
குவாரிகளில் 6 வீல் லாரிகளுக்கு மணல் ஏற்ற மறுப்பா? நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் கோரிக்கை

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget