மேலும் அறிய

மக்களை ஏமாற்றும் விதத்தில் விளம்பரம்; சென்னையை சேர்ந்த நிறுவனத்திற்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதிப்பு

திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் நுகர்வோருக்கு சாதகமாக தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருவதால் பாதிக்கப்படும் நுகர்வோர்கள் வழக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் கிடாரங் கொண்டான் ஆலடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வகுமார் என்பவர் திருவாரூர் சஹரா சூப்பர் மார்க்கெட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏடிஜே கிளாசிக் சாய்ஸ் என்கிற நிறுவனத்தில் இந்து உப்பை 500 கிராம் வாங்கி ஆறு மாதமாக உபயோகித்துள்ளார். இந்த உப்பு உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கும் அதிக சர்க்கரை அளவை குறைக்கும் இதயத்தை உறுதியாக்கும் தைராய்டு நோய் உள்ளிட்ட நோய்களை குணப்படுத்தும் சாதாரண உப்பை விட இந்து உப்பு மருத்துவ குணம் நிறைந்தது என அந்த நிறுவனம் துண்டு பிரசுரத்தில் விளம்பரம் செய்திருந்ததை நம்பி உப்பை வாங்கி பயன்படுத்தியதில், தனக்கு எவ்வித முன்னேற்றமும் இல்லை என்று கூறி கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் செல்வகுமார் வழக்கு தொடர்ந்தார். சாதாரண உப்பை விட இந்து உப்பு மருத்துவ குணம் நிறைந்தது என்று இதுவரை எந்த ஒரு அறிவியல் ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லை. இதுபோல் நுகர்வோர்களை ஏமாற்றும் நோக்கத்தோடு நேர்மையற்ற வணிக நடைமுறையை பயன்படுத்தி விற்பனை செய்துள்ளதை  கண்டித்து இந்த வழக்கை அவர் தொடர்ந்து உள்ளார். 

மக்களை ஏமாற்றும் விதத்தில் விளம்பரம்; சென்னையை சேர்ந்த நிறுவனத்திற்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதிப்பு

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் தவறான வழி நடத்தும் விளம்பரத்தை பொறுத்து நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 இன் படி மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திற்கு மட்டுமே அதனை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அந்த நிறுவனத்தின் மீது விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கு அனுப்பப்படுகிறது என்றும், தவறான வழி நடத்தும் விளம்பரம் மற்றும் நியாயமற்ற வணிக நடைமுறை செய்துள்ளதற்காக இழப்பீடு தொகையாக 2 லட்சம் ரூபாயை தமிழ்நாடு மாநில நுகர்வோர் நலநிதி கணக்கில் செலுத்த வேண்டும் என்றும், புகார்தாரருக்கு மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்தை ஏற்படுத்தியதற்காக ரூபாய் 25 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவு தொகையாக 10 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும் எனவும், மேலும் செல்வகுமார் இந்து உப்பு வாங்கிய திருவாரூரில் உள்ள சகாரா சூப்பர் மார்க்கெட் நிறுவனம் உப்புக்கான தொகை 180 ரூபாயை செல்வகுமாருக்கு உடனடியாக வழங்க வேண்டும் எனவும் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி மற்றும் உறுப்பினர்கள் லட்சுமணன் பாக்கியலட்சுமி அடங்கிய அமர்வால் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளனர். 

மக்களை ஏமாற்றும் விதத்தில் விளம்பரம்; சென்னையை சேர்ந்த நிறுவனத்திற்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதிப்பு

கடந்த சில மாதங்களாக திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பல்வேறு தீர்ப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக புதியதாக டிவி வாங்கி இரண்டு நாட்களிலேயே பழுதடைந்த நிலையில் அவருக்கு புதிய டிவி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதேபோன்று காப்பீட்டு நிறுவனம் இருசக்கர வாகனம் தொலைந்து போன வழக்கில் 2 லட்சம் அபராதம் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இதேபோன்று பல்வேறு வழக்குகளுக்கு திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் நுகர்வோருக்கு சாதகமாக தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருவதால் பாதிக்கப்படும் நுகர்வோர்கள் தாங்களாகவே வந்து திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ராமதாஸ் போட்ட ஒற்றை ட்வீட்.. ஆடிப்போன தமிழக அரசியல்.. ஒரு வேலை இருக்குமோ?
ராமதாஸ் போட்ட ஒற்றை ட்வீட்.. ஆடிப்போன தமிழக அரசியல்.. ஒரு வேலை இருக்குமோ?
"அப்பாவை கொன்றவரை நினைச்சு இரக்கப்பட்டவர்" பிரியங்கா காந்தி குறித்து ராகுல் காந்தி உருக்கம்!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
EPS Slams DMK:
EPS Slams DMK: "2026 வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும்" - எடப்பாடி பழனிசாமி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

IND vs NZ  Highlights | கோலியின் மோசமான பேட்டிங்வாஷ் அவுட் ஆன இந்திய அணி வரலாறு படைத்த நியூசிலாந்துDhanush Aishwarya | ரஜினி வீட்டில் நடந்த மீட்டிங்?இணையும் தனுஷ் ஐஸ்வர்யா குஷியில் சூப்பர் ஸ்டார்!TVK VCK Flag issue | அகற்றப்பட்ட தவெக கொடி   மறியலில் இறங்கிய மக்கள்   களத்துக்கு வந்த போலீசார்Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ராமதாஸ் போட்ட ஒற்றை ட்வீட்.. ஆடிப்போன தமிழக அரசியல்.. ஒரு வேலை இருக்குமோ?
ராமதாஸ் போட்ட ஒற்றை ட்வீட்.. ஆடிப்போன தமிழக அரசியல்.. ஒரு வேலை இருக்குமோ?
"அப்பாவை கொன்றவரை நினைச்சு இரக்கப்பட்டவர்" பிரியங்கா காந்தி குறித்து ராகுல் காந்தி உருக்கம்!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
EPS Slams DMK:
EPS Slams DMK: "2026 வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும்" - எடப்பாடி பழனிசாமி
"திருவள்ளுவருக்கு வர்ணம் பூசுறாங்க" பாஜகவுக்கு எதிரான ஸ்கெட்ச்.. அடித்து ஆடும் தவெக விஜய்!
TVK Resolution: 2026க்கு அச்சாரம் போடும் தவெகவின்  26 தீர்மானங்கள்: அக்ரசிவ் மோடில் திமுக - பாஜகவை தாக்கிய விஜய்.!
TVK Resolution: 2026க்கு அச்சாரம் போடும் தவெகவின் 26 தீர்மானங்கள்: அக்ரசிவ் மோடில் திமுக - பாஜகவை தாக்கிய விஜய்.!
EPS: முதல்வர் ஸ்டாலினை பாராட்டி, உதயநிதியை தாக்கிய இபிஎஸ்:  அப்படி என்ன பேசினார்.?
EPS: முதல்வர் ஸ்டாலினை பாராட்டி, உதயநிதியை தாக்கிய இபிஎஸ்: அப்படி என்ன பேசினார்.?
Suresh Gopi: கோயிலுக்கு ஆம்புலன்சை பயன்படுத்திய பாஜக அமைச்சர்: சுரேஷ் கோபி மீது பாய்ந்த வழக்கு.! நடந்தது என்ன?
Suresh Gopi: கோயிலுக்கு ஆம்புலன்சை பயன்படுத்திய பாஜக அமைச்சர்: சுரேஷ் கோபி மீது பாய்ந்த வழக்கு.! நடந்தது என்ன?
Embed widget