மேலும் அறிய

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு: தமிழை தேர்ந்தெடுத்தவர்களுக்கு தெலுங்கு, ஹிந்தி  மொழிகளில் வினாத்தாள்.. 

ஹோம் சயின்ஸ் உள்ளிட்ட சில படிப்புகளுக்கு வினாத்தாள் பதிவிறக்கம் ஆகவில்லை. மேலும் மொழி மாறி வினாத்தாள் வந்ததால் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதாமல் வெளியில் செல்லும் நிலை ஏற்பட்டது.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் தமிழ் மொழியை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு தெலுங்கு ஹிந்தி  மொழிகளில் வினாத்தாள் வந்ததால் குளறுபடி. 

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் படிப்பதற்கான 259 நகரங்களில் 489 தேர்வு மையங்களில் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வு இன்று தொடங்கி 10 நாட்களுக்கு நடைபெற்ற உள்ளது. இந்த நிலையில் திருவாரூர் அருகே நீலக்குடி பகுதியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு இன்று தொடங்கியது. இன்று மட்டும் 657 மாணவ மாணவிகள் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் இன்று காலை 202 மாணவர்களும் மாலை 201 மாணவர்களும் தேர்வு எழுத வந்தனர். இந்த நுழைவுத் தேர்வு என்பது மொத்தம் 13 மொழிகளில் நடைபெறுகிறது.

இதில் ஏதாவது ஒரு மொழியை தேர்ந்தெடுத்து மாணவர்கள் தேர்வு எழுதலாம் என்கிற நிலையில் இந்த ஆண்டு முதன் முதலாக தமிழ் மொழியும் சேர்க்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் திருவாரூரில் இன்று தேர்வு எழுத தமிழ் மொழியில் வினாத்தாளை தேர்ந்தெடுத்திருந்த  மாணவர்களுக்கு  மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆங்கிலம் உள்ளிட்ட மாற்று மொழிகளில் வினாத்தாள் வந்ததது.


தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு: தமிழை தேர்ந்தெடுத்தவர்களுக்கு தெலுங்கு, ஹிந்தி  மொழிகளில் வினாத்தாள்.. 

அதேபோன்று ஹோம் சயின்ஸ் உள்ளிட்ட சில படிப்புகளுக்கு வினாத்தாள் பதிவிறக்கம் ஆகவில்லை. இதனால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். மேலும் மொழி மாறி வினாத்தாள் வந்ததால் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதாமல் வெளியில் செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும் குறிப்பாக மதியம் 3 மணிக்கு தொடங்கவேண்டிய தேர்வு சர்வர் பிரச்சனை காரணமாக மாலை ஐந்து முப்பது மணிக்கு தேர்வுகள் தொடங்கி 8:30 மணிக்கு நிறைவடைந்தது. இதனால் வெளியில் காத்திருந்த பெற்றோர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். அதுமட்டுமின்றி திருவாரூர் மாவட்டம் அஞ்சலை அம்மாள் பொறியியல் கல்லூரி மத்திய பல்கலைக்கழகத்திற்கான நுழைவுத் தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அங்கு நடைபெற்ற நுழைவுத் தேர்வு சர்வர் பிரச்சினை காரணமாக முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு மறு தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு: தமிழை தேர்ந்தெடுத்தவர்களுக்கு தெலுங்கு, ஹிந்தி  மொழிகளில் வினாத்தாள்.. 

குறிப்பாக இளநிலை தமிழ் படிப்பிற்கான வினாத்தாள் மட்டும் தமிழில் வந்துள்ளதாகவும் மற்ற பாடப்பிரிவுகளுக்கு தமிழ் மொழி வினாத்தாள் தேர்வு செய்தவர்களுக்கு மாற்று மொழிகளில் வினாத்தாள் வந்ததாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இன்று இளநிலை படிப்பிற்கான நுழைவுத் தேர்வு எழுதியவர்களில் மூன்று பாடம் உள்ளவர்கள் இந்த குழப்பம் காரணமாக ஒரு பாடத்தை எழுதிவிட்டு மீதமுள்ள இரண்டு பாடத்தை பின்னர் அறிவிக்கப்படும் தேதியில் எழுத உள்ளனர்.

தமிழ் மொழியில் வினாத்தாளை தேர்ந்தெடுத்தவர்களுக்கு மாற்று மொழிகளில் வந்த காரணத்தினால் அவர்கள் மீண்டும் தேசிய தேர்வு முகமை அறிவிக்கும் நாளில் தேர்வு எழுத வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும் மாணவ மாணவிகள் தெரிவித்தனர் .குறிப்பாக தமிழ் மொழியில் வினாத்தாளை தேர்ந்தெடுத்தவர்களுக்கு பெரும்பாலும் தெலுங்கில் வினாத்தாள் வந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.மேலும் இந்த சர்வர் பிரச்சனை காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர்.

தலைப்பு செய்திகள்

20 ஆண்டுகளாக தூர்வாரப்படாத தாமரைக்குளம்! ஆக்கிரமிப்பால் 2 ஏக்கராக சுருங்கியது: விவசாயிகள் விடுத்த எச்சரிக்கை என்ன?
20 ஆண்டுகளாக தூர்வாரப்படாத தாமரைக்குளம்! ஆக்கிரமிப்பால் 2 ஏக்கராக சுருங்கியது: விவசாயிகள் விடுத்த எச்சரிக்கை என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி
வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி
மாம்பழத்துக்கு விலை இல்லை... மரங்களை வெட்டும் அவலம்: கும்பகோணத்தில் மாங்காய் உடைத்து நூதனப் போராட்டம்
மாம்பழத்துக்கு விலை இல்லை... மரங்களை வெட்டும் அவலம்: கும்பகோணத்தில் மாங்காய் உடைத்து நூதனப் போராட்டம்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget