மேலும் அறிய

ஐயாறப்பா... ஐயாறப்பா... விண்ணதிர எழுந்த பக்தி கோஷம்: திருவையாறு கோயில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகத்தை ஒட்டி கடந்த 29ம் தேதி காவிரி ஆற்றில் இருந்து ஐந்து யானைகள் மீது புனித நீர் ஊர்வலமாக யாகசாலை மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டு முதல் கால யாகசாலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோயில் மகா கும்பாபிஷேகம் திருமுறை பாட திரளான பக்தர்களின் ஐயாறப்பா என்ற பக்திக்கோஷம் விண்ணை அதிர செய்ய வெகு விமரிசையாக நடந்தது.

தஞ்சை மாவட்டம் திருவையாறில் தருமபுர ஆதீனம் மடத்திற்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி ஐயாறப்பர் கோயில் அமைந்துள்ளது. ஐயாறப்பர் எழுந்தருளியிருக்கும் கோயில் பல்லவ மன்னன் நந்தி வர்மன் காலத்தில் கட்டப்பட்டது. மூன்றாம் திருச்சுற்று கிழக்குக் கோபுரம் விக்கிரம சோழனால் கட்டப்பட்டது. மேற்குக் கோபுரம் முதல் சுற்று, நடை திருமாளிகை பத்தி, சூரிய புஷ்கரணி, தெற்குக் கோபுரம் ஆகியவை ஆணையபிள்ளையும், அவருடைய தம்பி வைத்தியநாதரும் எழுப்பியவை.


ஐயாறப்பா... ஐயாறப்பா... விண்ணதிர எழுந்த பக்தி கோஷம்: திருவையாறு கோயில் கும்பாபிஷேகம்

இங்குள்ள வட கயிலாயம் என்ற ஒலோக மாதேவீச்சரம் முதலாம் ராசராச சோழனின் மனைவி ஒலோக மாதேவியால் கட்டப்பட்டது. தென் கயிலாயம் கோயிலை கங்கை கொண்டான் என்றழைக்கப்படும் முதலாம் ராசேந்திர சோழனின் மனைவி பஞ்சவன் மாதேவியால் கட்டப்பட்டது. முதலாம் ராசராச சோழன் காலத்தில் இந்த ஊர் பொய்கை நாட்டுத் திருவையாறு என அழைக்கப்பட்டது. இங்கு ஞானசம்பந்தர், திருநாவுச்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என அனைத்து நாயன்மார்களும் பாடியுள்ளனர். இக்கோயிலுக்கு நிறைய பதிகங்கள் பாடப்பட்டுள்ளள.

இத்தகைய சிறப்பு மிக்க இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணிகள் நிறைவடைந்து மகாகும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை ஒட்டி கடந்த 29ம் தேதி காவிரி ஆற்றில் இருந்து ஐந்து யானைகள் மீது புனித நீர் ஊர்வலமாக யாகசாலை மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டு முதல் கால யாகசாலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து 3 நவா கனி, 7 பஞ்சா கனி, 30 ஏகா கனிகள் என 92 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 110 சிவாச்சாரியர்கள். 108 வேத விற்பன்னர்கள், ஓதுவார்கள் திருமுறை பாட புனித நீர் அனைத்து கோபுர கலசங்களுக்கும் கொண்டு வரப்பட்டு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக யாக சாலை மண்டபத்தில் இருந்து சிவாச்சாரியர்கள் புனித நீர் கலசத்தை தலையில் சுமந்து சிவகணங்கள் இசைக்க, மங்கள வாத்தியங்கள் முழங்க கோயிலை வலம் வந்து கோபுர கலசங்களுக்கு கொண்டு வந்தனர்.

விமானம், மற்றும் ராஜ கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புனித நீர் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டன. அப்போது கூடியிருந்த திரளான பக்தர்கள் ஐயாரப்பா என பக்தி முழக்கமிட்டனர். தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது  கும்பாபிஷேகத்தை காண ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திருவையாறில் திரண்டதால் திருவிழா கோலம் பூண்டிருந்தது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7154
Active
9556
Recovered
77
Deaths
Last Updated: Thu 12 June, 2025 at 11:37 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on VairamuthuTVK Vijay Alliance | தவெக யாருடன் கூட்டணி? விஜய் போட்ட ஸ்கெட்ச்! அறிவிப்பு எப்போது?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Embed widget